ஒக்ரோபர் 4 ஆம் திகதி டென்மார்க்கின் தலைநகரில் தாயக மக்களுக்காய் குரல் கொடுக்க டென்மார்க் தமிழர் புனர்வாழ்வுகழத்தின் அவசரஅழைப்பு.

டென்மார்க் வாழ் எமது அன்பான உறவுகளே !!

தாயக மக்களுக்காய் குரல் கொடுக்க ஓர் அவசர அழைப்பு !!

இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசின் செயல் கண்டும் மௌனமாய் இருப்போரின் மனக்கதவை இன்னுமொரு தடவை ஓங்கித் தட்ட வேண்டிய அவசர காலம் இது.!

எம்மையும் உதவி செய்ய விடாது, தாங்களும் உதவி செய்யாது வெளியேறி விட்ட நிலையில், தேற்றுவார் இன்றி தவிக்கும் வன்னி மக்களுக்காய் ஒருதடவை! இன்னுமொரு தடவை! ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் வாருங்கள்.!


இப்போது வன்னியில் இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்ற போது இலங்கை முழுவதும் இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை தொட்டுள்ளது. அன்று துடிப்புடன் நீண்ட உதவிக்கரங்கள்; அனைத்தையும் முடக்கப் பட்டுள்ள நிலமையில் ஒரு மனிதப் பேரவலம் அரங்கேறுவதை தடுக்க அணிதிரள்வோம் வாருங்கள்.!

ஒக்ரோபர் 4 ஆம் திகதி டென்மார்க்கின் தலைநகரில் எமது உறவுகளுக்கா மனிதவிழுமியங்களுக்கு மதிப்பழிப்போரின் மனக்கதவைத் தட்டி - உதவுங்கள்! அல்லது உதவ வழிவிடுங்கள்! - என்று ஒருமித்த குரலில் ஓங்கி நீதிகேட்ப்போம்! வாருங்கள்.!

மேலதிகத் தொடர்புகளுக்கும் விபரங்களுக்கும்

அலுவலகம் 97 21 46 26
ஆனந்தன் 28439283
சந்தோஸ் 22461178 மற்றும் உள்ளகப் பணியாளர்களை தொடர்புகொள்ளுமாறு டென்மார்க் தமிழர் புனர்வாழ்வு கழகம் தனது அவசர அழைப்பில் தெரிவித்துள்ளது.

http://www.tamilvoice.dk/tamil23092008327.htm



Comments