இது தான் 'இந்தி' யத் தேசியம்

'இந்தி்' யத் தேசிய காங்கிரசின் தோற்றம்:

அகில இந்தியம் பேசுவதில் முதன் வரிசையில் நிற்கும் காங்கிரஸ் கட்சி தன்மானமற்ற தமிழர்களின் புகலிடமாக மாறிப்போய்யுள்ளது வருந்தத்தக்கது. வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற பல்வேறு தேசிய இனங்கள் குழுக்குழுக்களாக போராடிய போது அதனை ஒருங்கிணைத்து அதன் மூலம் இந்திய தேசியத்தை எழுப்பி அரசியல் லாபம் பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி.

வெள்ளையனை வெளியேற்றி விட்டோம் என்ற வெற்று முழுக்கத்தை எழுப்பிக் கொண்டு பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையில் கட்சியைக் கட்டியெழுப்பி வெள்ளையரிடமிருந்த நிர்வாகத்தை கொள்ளையரிடம் கையளித்து 'சாதனை' படைத்ததும் இதே காங்கிரசு கட்சி தான்.

வடநாட்டு பனியாக்கள் மற்றும் பெருமுதலாளிகளின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, இந்தி மொழியை மற்ற மாநிலங்களில் திணிப்பதை அதன் செயல் திட்டமாகவே செயல்படுத்தவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது.

அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை அவர்களுக்கு பின் வளர்ந்த தேர்தல் கம்யூனிஸ்டுகள், பாரதீய சனதா போன்ற தேசியக் கட்சிகளும் நிரூபித்தன. அவை அவ்வப்போது அம்பலப்பட்டும் வருகின்றன.

தமிழக காங்கிரசின் கொள்கை:

'ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பாதே என விடுதலைப்புலிகள் இயக்கத் தோழர் திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோர் தொடங்கிய உண்ணாவிரதம் தேவையற்றது.

தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் இறந்த விடுதலைப்புலிகளையும் மதிக்காமல் அவர்கள் மேடையிலேயே இறந்த போதும் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி அதை உதாசீனப்படுத்தி ஈழத்திற்கு படைகளை அனுப்பியது சரியான நடவடிக்கை தான்.

அங்குள்ள தமிழ் பெண்களை இந்திய இராணுவம் கற்பழித்ததும் இளைஞர்களை கொன்று குவித்ததும் சரியே.

ஈழத்தமிழர்கள் எங்கள் தலைவரை என்ன காரணத்துக்கு என தெரியாமலேயே கொன்று விட்டனர். அவர் ஒரு அப்பாவி. எனவே அம்மக்கள் இனி செத்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

எமக்கு மூவாயிரம் ஆண்டு தமிழ் மொழியின் உறவை விட 50 ஆண்டு கால காங்கிரசும் அவாகளது பேரன் பேத்திகளின் உறவே போதும்.

அது தான் நாங்கள் இன்னும் வடநாட்டு ஆதிக்க சக்திகளுக்கும் அதன் மகள் மகன்களுக்கும் பல்லக்கு தூக்கி அடிமை சேவகம் புரிந்திட உதவுகிறது.

இந்திய தேசியம் பேசுவோம்.

ஆனால் கட்சிக்குள் கூட எல்லோரும் ஒற்றுமையாக இருக்க மாட்டோம்'.

இது தான் தமிழக காங்கிரசின் எழுத்திலேறாமால் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கொள்கை அறிக்கை.

ஈழப்பிரச்சனையில் காங்கிரசின் நிலைப்பாடு:

ஈழப்பிரச்சனைக்கு தற்பொழுது இருக்கும் ஒரே தீர்வு தனி ஈழமே. இதனை விடுதலைப்புலிகள் என்றோ உணர்ந்து விட்டனர். உலக நாடுகளும் மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றனர்.

ஆனால் காங்கிரசின் தீர்வு என்ன?

ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்க்கு உரிமையாம். அக்கட்சி சொல்கிறது.

இப்படிப்பட்ட மாய வாதங்களை சொல்லி தமிழரின் தாயகமான தமிழ்நாட்டை 'இந்தி'யனிடம் அடகு வைத்ததை போல,

சிங்களவனிடம் ஈழத்தை அடகு வைக்க சொல்கிறார்கள்.

தன் மானமுள்ள தமிழர்கள் ஏற்காமாட்டார்கள் என்பதனை வரலாறு மெய்ப்பித்து வருகின்றது. அதனை காங்கிரசும் உணர்ந்திருக்கிறது.

அப்புறம் ஏன் தனி ஈழத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?

அவர்கள் தலைவரை கொன்று விட்டனராம்.

இந்திரா காந்தி காங்கிரஸ் தலைவர் தானே. அவா பிரதமராக இருந்த போது அவரை சுட்டுக் கொன்ற சீக்கியர்களை எதிர்த்து இதே காங்கிரஸ் தொண்டர்கள் தான் வன்முறையை ஏவீ அவர்களை கொன்று குவித்தனர்.

பின்னர், சுட்டுக் கொன்ற சீக்கியனின் மனைவியையே தேர்தலில் நிக்க வைத்து பாராளுமன்றத்திற்கும் அனுப்பினர்.

அது மட்டுமில்லாமல் சீக்கிய இனத்தை சேர்ந்த ஒருவருக்கு பிரதமர் பதவியே கொடுத்தார்கள்.

ஆனால், ஈழப் போராளிகள் ராசீவ் காந்தியை கொன்றுவிட்டனர் என்று கூறி, நாளும் கொடுமை அனுபவித்து வரும் ஈழமக்களை மேலும் தன்பத்தில் ஆழ்த்துவதில் இவர்களுக்கு என்ன அக்கறை?

இந்திரா காந்தியை சட்டுக் கொன்றவனின் மனைவிக்கு நாடாளுமன்ற பதவி கொடுத்த காங்கிரஸ் நண்பர்களே ஏன் தமிழர்களிடம் மட்டும் இந்த பாகுபாடு?

பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் 'இந்தி'யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா?

ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு?

தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது பயங்கரவாதம் என சொல்கிறது காங்கிரஸ் கட்சி.

ஆனால், அக்கட்சி வட கிழக்கு மாநிலங்களில் சுயநிர்ணய உரிமை கோரி போராடும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் இந்திய அரசே நடத்தும் பேச்சுவார்த்தைகள் பற்றி கண்டு கொள்ளவில்லை?

கருத்து சொல்லவில்லை?

இந்த பாகுபாட்டைத் தான் 'இந்தி'ய தேசியம் என்கிறோம்.

தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது.

காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால்

தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.

நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.


ராசீவ்காந்தியின் சாதனைகள்:

ராஜீவ் காந்தி என்கிற அரசியல் கோமாளியின் முட்டாள்தனமான முடிவுகளால் இந்திய அரசால் ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனரே அது பற்றி வாய் திறக்க எந்த தமிழகக் காங்கிரஸ்காரனாலும் முடியுமா?

போபர்ஸ் ஊழல் வழக்கால் உள்நாட்டு அரசியலில் நாராடிக்கப்பட்டு காரி உமிழப்பட்ட ராசீவ்காந்திக்கு திடீரென பிறந்த அக்கறை தான் ஈழப்பிரச்னையில் அவரது தலையீடு.

எந்த நாடு நாங்கள் அகிம்சையால் சுதந்திரம் பெற்றோம் என உலகநாடுகளிடம் பீற்றிக் கொண்டு போலி வேடமிட்டதோ அந்த நாட்டை எதிர்த்து அகிம்சை முறையில் உண்ணாவிரத அறப்போர் தொடங்கினார் விடுதலைப்புலி திலீபன். எதற்காக?

ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பாதே என்று கோரிக்கையை வைத்து. அந்த கோரிக்கையை உதாசீனப்படுத்தி, திலீபன் அந்த உண்ணாவிரத மேடையிலேயே நீர் கூட அருந்தாமல் வீரமரணமெய்த வைத்தவர் தானே இந்த ராசீவ்காந்தி.

அதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்த ஈழத்தாய் அன்னை பூபதியும் மரணமெய்திட செய்தவர் தானே இந்த ராசீவ் காந்தி.

1987ஆம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை பற்றி பிரபாகரனிடம் தெரிவித்த பின்னர், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை எனத் தெரிந்ததும்,

அவர் தங்கியிருந்த ஓட்டல் அசோகாவில் அவரை சிறை வைத்துவிட்டு, கொல்லைப் புறம் வழியாக ஓடி சென்று அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடித்தது யார்?

பேச்சுவார்த்தைக்கு ஒருவரை அழைத்து பின் அவரை அந்த அறையிலேயே பூட்டி சிறை வைத்துவிட்டு பின்பறமாக ஒடிச் சென்ற பிரதமராகத் தானே ராசீவ் காந்தி இருந்தது தங்களுக்கு தெரியுமா?

அந்த ஒப்பந்தம் கையெழுத்தான செய்தியை பூட்டி அறைக்குள் தொலைக்காட்சியில் பிரபாகரனே தெரிந்து கொண்டார். இது தான் ராசீவ்காந்தியின் அப்பாவித்தனமா?

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு தமிழர் பகுதிக்குள் அனுப்ப வேண்டாம் என விடுதலைப்புலிகளும் மற்ற தமிழ் தலைவர்களும் கேட்டுக் கொண்டதை ராசீவ் ஏன் மதிக்கவில்லை?

விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுக்க மறுத்த அப்பாவி மக்களை கட்டி இழுத்து வந்து தரையில் வரிசையாக படுக்க வைத்து யுத்த டாங்கியை ஏற்றிப்படுகொலை செய்த வெறித்தனத்தை சொல்லவா?

யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்குள் புகுந்து அப்பாவி நோயாளர்கள் மருத்துவர்கள் மருத்துவ தாதிகள் என்று 20 க்கும் மேற்பட்டவர்களைவ ஈவிரக்கமின்றி சுட்டுப்படுகொலை செய்ததை சொல்லவா?…..

இன்றைக்கு தமிழகத்தில் வீச்சருவாள் வெட்டுக்கம்பு அடிதடி கலாச்சார அரசில் நடத்தும் காங்கிரசார் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வாச்சவமால்களை விடும் காங்கிரசார் தங்களது ஆட்சிக்காலத்தில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இழைத்த கொடுமைகளை விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை அமைப்பதற்கு தயாரா?

ஆல்லது இந்திய மட்டத்திலேயாவது நேர்மையான நீதியாளர்களைக் கொண்டு நீதியான ஒரு விசாரணையை நடத்த தயாரா?

இதைச் செய்வதற்கு நீங்கள் தயாராக இல்லை என்றால் தயவு செய்து தியாகம் விடுதலை அகிம்மை என்பதைப் பற்றி எல்லாம் பேசாதீர்கள்.

இந்திய நலன் என்று செல்லிக் கொண்டு மேற்குலக ஏகாதிப்பத்தியங்களுக்கு அப்பாவி இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை விற்காதீர்கள்!

கடந்த 07.11.2007 அன்று வெளிவந்த துக்ளக் வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் துக்ளக் சோ, விடுதலைப் புலிகளின் இயக்கம் தடைசெய்யப்படாமல் இயங்கியக் காலத்திலேயே அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொல்லலாமா என ராசீவ்காந்தி ஆலோசனை நடத்தியது உண்மை தான் என வாக்குமூலமே அளித்துள்ளார்.

அது பற்றி சூடு, சொரணையுள்ள எந்த காங்கிரஸ்காரனாவது வாய்திறந்தானா? ஒர் இயக்கத்தின் தலைவரை அவ்வியக்கம் தடை செய்யப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே அதன் தலைவரை சுட்டுக் கொல்ல ஆலோசனை நடத்தியவன் அரசியல் தலைவனா?

அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் அப்பாவி காங்கிரஸ் தமிழர்கள் திருந்துவார்களா?

ராசீவ் காந்தியின் ஆணையால் ஈழத்திற்கு இந்திய இராணுவம் சென்றது. சிங்களன் மட்டுமல்ல 'இந்தி'யனும் தமிழனுக்கு எதிரிதான் என நிரூபித்தது. சிங்கள அரசும் செய்யத் துணியாத அட்டூழியங்களை அடுக்கடுக்காக செய்தது இந்திய இராணுவம்.

தமிழ் பெண்களை பாலியல் சித்தரவதைக்குள்ளாக்கி, அவர்களை கற்பழித்ததற்கான தடையங்கள் சிக்கிவிடக் கூடாதென, அவர்களது பிறப்புறுப்பிலும் துப்பாக்கியால் சிதைத்த கொடூரங்களையும் அரங்கேற்றினர் 'இந்தி'ய இராணுவத்தினர்.

இந்திய இராணுவத்திலிருந்த ஒன்றிரண்டு தமிழர்கள் தன் மொழி மற்றும் இன உணர்வால் தமிழாகள் சிலரை தப்பியோடும்படி எச்சரித்ததை கண்டு பொறுக்காத மற்ற இராணுவத்தினர்,

தமிழ் இராணுவ வீரர்களையும் கொன்றனர்.

அதனால், அப்போரில் இறந்தவர்களின் பெயர்களைக் கூட இன்றுவரை வெளியிடாமல் வைத்திருக்கிறது 'இந்தி'ய அரசு.

இந்த 'சாதனை'களுக்கெல்லாம் சொந்தக் காரர் தானே இந்த ராசீவ் காந்தி.

அவரது கொலை சம்பவம் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு ஒர் இனத்தின் விடுதலைக்கே தடையாக நிற்பது தான் காந்தி உங்களுக்கு கற்றுத் தந்த அகிம்சையின் பயன்பாடா?

இது தான் தங்கள் அகிம்சை வழியின் லட்சணமா?

அகிம்சை பற்றி பேசுவதற்கான தகுதி காங்கிரசுகாரர்களுக்கு என்றோ போய்விட்டது. மற்ற கட்சிகள் அதன் எதிர்கட்சிகளுடன் தான் சண்டை போடுவர். அடித்துக் கொள்வர். ஆனால், இதிலோ அனைத்திலும் வித்தியாசமாக அந்த கட்சிக்குள்ளேயே தினமும் ஒரு சண்டைக் கட்சி அரங்கேறுகிறது.

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் அவர்களின் வீரமரணத்திற்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்தால் இரத்தக் கண்ணீர் வடித்ததாக அறிக்கை விட்ட காங்கிரஸ்காரர்களே... அது இரத்தக் கண்ணீர் அல்ல.

தங்கள் கட்சிக்குள் சிலர் பதவிக்காக மண்டையை உடைத்துக் கொண்டதால் சத்தியமூர்த்திபவனில் வழிந்த இரத்தம்.

அம்மணமாகும் 'இந்தி'யத் தேசியம் எழுச்சி பெறும் தமிழ்த் தேசியம்:

வெறும் 50 வருடங்களாக காங்கிரஸ் உயிருடன் இருக்கும் காங்கிரசு அமைப்புக்குள் இருக்கும் தொண்டர்களுக்கு, மூவாயிரம் வருடங்களாக நாம் தமிழராக இருக்கிறோம் என்ற உணர்வு ஏன் இங்குள்ளவர்களுக்கு இல்லை?

நம் தமிழர்களை தானே ஈழத்தில் தினம் தினம் சுட்டுக் கொல்லப்பட்டு மடிகின்றன சகோரதரனும், கற்பழித்து கொல்லப்படுகிற அக்கை தங்கைகளும் நம்முடன் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள் தானே என்ற உணர்வு ஏன் இவர்களுக்கு இல்லை?

வடநாட்டு ஆதிக்க மற்றும் பெருமுதலாளிகளின் தலைமையில் உள்ள கொள்கைகளற்ற கொள்ளைக்கட்சியின் மீது இவர்களுக்கு அபிமானம் பிறந்தது எப்படி,?

சுயலாபங்களுக்குகாக, தன் சொந்த தேசமான தமிழ்த் தேசத்தை மறந்து விட்டு வடநாட்டு ஆதிக்க பல்லக்குத் தூக்கும் துரோகிகளின் கூடாரமாக இக்கட்சி மாற்றமெடுத்தது எதனால்?

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழர்களின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கும் பொழுது இந்திய தேசியம் பேச வக்கற்ற காங்கிரசுக்கு, தமிழர்களின் உறவுகள் ஈழத்தில் செத்து மடிகின்ற போது மட்டும் வாய்திறப்பது எதனால்?

கேரளத்தில் இருந்து கொண்டும், கர்நாடகத்தில் இருந்து கொண்டும், ஆந்திராவில் இருந்து கொண்டும் தமிழனுக்கு நீர் தரக் கூடாது என செயல்படும் கம்யூனிஸ்டு, பா.ச.க, காங்கிரசுவாதிகள் உள்ளிட்ட 'இந்தி'ய தேச ஏமாற்று சக்திகள் தமிழகத்திலும் அதையே சொல்ல வேண்டியது தானே?

இங்கு ஒரு பேச்சு, அங்கு ஒரு பேச்சு?

இது தான் 'இந்தி'யத் தேசியம்.

இந்த 'இந்தி'யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும்.

மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும். 'இந்தி'யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது.

காங்கிரசில் உள்ள தமிழர்களே! நன்றாக யோசித்து பாருங்கள்.

எங்கோ வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர்!

'பாதையை தேடாதே.. உருவாக்கு'
- புரட்சியாளர் லெனின்

தன்மானமில்லா தமிழர்களின்
புகலிடமான காங்கிரஸ்


(இன்றைய தமிழக காங்கிரஸ் பற்றிய ஒர் பார்வை)

க.அருணபாரதி

இதை எழுதியவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்


Comments