இந்திய அரசின் நேரடி உதவியினை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா அரசாங்கம் நேரடியாக உதவி வருவதனை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சிங்கள படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் பலர் பலியாகியிருப்பதுடன் ஏராளமான சிங்கள படையினர் படுகாயங்களும் அடைந்துள்ளனர். அவ்வாறு படுகாயம் அடைந்தவர்களில் இந்திய பொறியியலாளர்கள் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. இவர்கள் சிங்கள இராணுவ தளத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்திய ராடர்களை இயக்குகிற பணிகளையும் அது தொடர்பாக சிங்கள படையினருக்கு பயிற்சி அளிக்கும் பணிகளையும் ஆற்றி வந்துள்ளனர் என்பது தெரிகிறது.

இந்திய அரசின் இத்தகைய தமிழின விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது. இந்தப் போக்கை உடனடியாக இந்திய அரசு கைவிட வேண்டும். அத்துடன் தமிழினத்திற்கு எதிராக ஈழத்தில் மறைமுகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்திய படையினர் அனைவரையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி சென்னையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16.09.08) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments