ஈழத்தமிழர் வாழ்வுரிமையை காக்க சென்னையில் ஒருநாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு சென்னையில் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் ஒருநாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு எதிரில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 10.00மணி தொடக்கம் மாலை 5:00 மணி வரை நடந்த இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் பல கலைஞர்கள் எழுச்சியோடு கலந்து சிறப்பித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் செயலாளர் பா.செயப்பிரகாம் தலைமையேற்று நடத்திய தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைக்கான பணிகளை ஒருங்கிணைத்து வரும் பழ.நெடுமாறன் உட்பட கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் மு.மேத்தா, நடிகர் சத்தியராஜ், இயக்குநர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.






தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில்

கவிஞர் பொன். செல்வகணபதி

இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்

தமிழறிஞர்களான கி.த.பச்சியப்பன், நா. அரணமுறுவல், முனைவர் தமிழப்பன், பேராசிரியர் யோகீஸ்வரன், நாடக ஆசிரியர் ந.முத்துசாமி, பேராசிரியர் மே.து.இரா.சுகுமார், பேராசிரியை சரஸ்வதி இராசேந்திரன், தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது

உலகத் தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர் இரா.ஜனார்த்தனம்

ம.தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா

சிறிலங்காவின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இரண்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டடு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட படைப்பாளிகளின் கையெழுத்து பெறப்பட்டது.

தீர்மானங்கள் வருமாறு:

01. ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவித்து வரும் சிறிலங்கா அரசிற்கு இந்திய அரசு இராணுவ உதவிகள் செய்து வருவதையும், படைப்பயிற்சி அளித்து வருவதையும் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அரசு நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே அனுப்பியுள்ள பயிற்சியாளர்களை திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டுப் படைப்பாளிகள் ஒருமனதாக கேட்டுக்கொள்கின்றோம்.

02. சிறிலங்கா அரச இராணுவத்தின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் ஈழத்தமிழ் மக்களுக்கும், அடைக்கலம் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் மக்களிற்கும் டில்லி மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வழங்கி அந்த மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்ப் படைப்பாளிகள் ஒருமனதோடு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த இரண்டு தீர்மானங்களும் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.


Comments

துரை said…
//***
01. ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவித்து வரும் சிறிலங்கா அரசிற்கு இந்திய அரசு இராணுவ உதவிகள் செய்து வருவதையும், படைப்பயிற்சி அளித்து வருவதையும் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அரசு நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே அனுப்பியுள்ள பயிற்சியாளர்களை திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டுப் படைப்பாளிகள் ஒருமனதாக கேட்டுக்கொள்கின்றோம்
***//
நம்மலும் இந்திராகாந்தி காலத்தில் இருந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோமே தவிர, ஆருதலாக ஒரு மாறுதல்கூட நடந்ததில்லை
நாம் நம் ஏதிர்ப்பை வேறுமாதிரி காட்டலாம்
எ-டு இ(ஹி)ந்தியாவின் சுதந்திர தினத்தை புறக்கணிக்கலாம்
நாம் நடுவன அரசு தேர்தலை புறக்கணிக்கலாம்
இல்லை நாம் வேறு நாட்டிடம் முறையிடலாம் அல்லது ஐ.நாவிடம் முறையிடுவோம், நாமலும் பலதடவை நம் மன்னிக்கனும் வடக்கத்திய அரசிடம் முறையிட்டாச்சு ஆனால் ஒரு பலனும் இல்லை, எதாவது புதுசா போராட்டம் பண்ணினால்தான், தமிழ் அல்லாத ஏனைய இந்திய மக்(கு)களுக்கும் புரியும், உலகத்தில் எந்த முலையில் தமிழர்கள் புறக்கணிக்கபட்டாலும் தமிழக தலைவர்களோ, அல்லது தமிழ் மக்கள் மட்டும்தான் வேதனை படுகிறார்கள் அதற்கு ஏதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், அதை நடுவன அரசிடம முறையிட்டாலும் நம்ம அரசு எருமை மாடு மாதிரி கமுக்கமா அப்படியே இருப்பாரு,
எந்த நடுவன அரச வந்தாலும் நம் தமிழர்களுக்கு இந்த கதிதான்
ஆதலால்,
என் அருமை மன்னிக்கனும்
என் அடிமை தமிழ் மக்களே
சுதந்திரம் கிடைத்து இந்தியாவுக்குதான், நம் தமிழர்களுக்கு அல்ல