ஜெயலலிதா அறிக்கை


இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாட்டை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை மூலம் விளக்கியுள்ளார்.

இதுக் குறித்து இன்று அவர் வெள்யிட்டுள்ள அறிக்கை.

இலங்கையில் மற்ற குடிமக்களைப் போல தமிழர்களும் சம உரிமையுள்ள குடிமக்கள்.

சட்டத்தின் முன் சமத்துவம் வேண்டியும், கல்வி, வேலைவாய்ப்பில் சமத்துவம் பெறவும் இலங்கைத் தமிழர்கள் நடத்தும் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம்.

சுய நிர்ணய உரிமை வேண்டி அவர்கள் நடத்தும் தார்மீக போராட்டத்தை அங்கீகரிக்கிறோம்.

இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு சுயாட்சி உரிமையுள்ள தமிழ்த் தாயகம் உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் வேட்கையை புரிந்து ஏற்றுக் கொள்கிறோம்.

திசைமாறிப் போன ஆயுதப் போராட்டத்தினால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை கண்டு வேதனை அடைகிறோம். அதற்கு காரணமான ஆயுதப் போராட்டத்தை எதிர்க்கிறோம்.

ஆயுதப் போரின் விளைவாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதையும், தமிழர் விடுதலைக்காக போராடிய தலைவர்கள் கொன்று குவிக்கப்பட்டதையும் ஏற்க இயலாது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சுய நிர்ணய உரிமைக்கென்ற தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். ஆயுதமேந்தியவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை எதிர்க்கிறோம்.

ஆயுத மோதல்களால் இந்தியாவின் சட்டம் ஒழுங்கும், அமைதியும் இறையாண்மையும் சீர்குலைவதை ஏற்க முடியாது.

தற்போது இலங்கையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உண்ண உணவு, தங்க இடம், மருந்து ஆகியவை இல்லாமல் வாழ்க்கையோடு அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை திரட்டித்தர மத்திய அரசு முன் வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments