புலிகள் பயன்படுத்திய புதிய கடல் தாக்குதல் ஆயுதம்

இலங்கையில் நடைபெற்றுவரும் போருக்கு மிகவும் அதிகளவில் அரசுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வந்த இந்திய மத்திய அரசு தற்போது பாரிய ஒரு நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது மற்றுமொரு நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அடுத்துவரும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பு செய்யப்படவுள்ள ஜிஎஸ்பி வரிச்சலுகையை நீடிப்பு செய்வது தொடர்பில் இலங்கை அரசிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது.

ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெறும் நாடுகள் அனைத்துலக மனிதாபிமான விதிகளின் தரத்தை பேணவேண்டும். ஆனால் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதநேய அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த குழுவினரை அனுப்புவது என்பதை ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கான முன்நிபந்தனையாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது.மேற்குலகத்தை பொறுத்தவரை இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வடபகுதி தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்கு விதிக்கப்படும் நெருக்கடிகளை தணிப்பதற்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை ஒரு கருவியாக பயன்படுத்த முதல்தடவையாக முற்பட்டுள்ளன.ஆனால், இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைக்குழுவை அனுமதிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த முறுகல் நிலையினால் வர்த்தக துறைக்கு ஏற்படப்போகும் இழப்புக்களை ஈடுசெய்வதற்கு 150 மில்லியன் டொலர்களை நிவாரண உதவிகளுக்காக ஒதுக்க போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.இலங்கையின் ஏற்றுமதி பொருட்களில் ஜிஎஸ்பி வரிச்சலுகையின் அடிப்படையில் 65 வீதமான ஆடை ஏற்றுமதிகளும், மிகுதி 35 வீதம் மீன், தாவரங்கள், தோற்பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காலணிகள் என்பனவும் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த ஆண்டு ஐரோப்பிய சந்தைகளில் இலங்கை சுமார் 2.9 பில்லியன் டொலர்களை சம்பாதித்திருந்தது.

எனவே ஜிஎஸ்பி வரிச்சலுகை நீடிப்பு வழங்கப்படாது விட்டால் இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் என்பதுடன், ஏறத்தாழ 100,000 தென்னிலங்கை மக்களும் வேலைவாய்ப்புக்களை இழக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பல தொழில்நிறுவனங்களும் மூடப்படும் நிலையை அடையலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை அரசுக்கு சார்பான புறச்சூழல்கள் மெல்ல மெல்ல மாற்றம் பெற்றுவரும் இந்நிலையில் வடபோர்முனையும் அதன் உக்கிரத்தை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா "கிளிநொச்சியை இராணுவம் நெருங்கிவிட்டதாகவும், சில தினங்களில் அது வீழ்ச்சி கண்டுவிடும்' எனவும் தெரிவித்திருந்தார்.ஆனால் இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் அங்கு மோதல்கள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன்,

இராணுவத்தின் நகர்விலும் ஒரு முடக்க நிலை தோன்றியுள்ளது. கடந்த வார இறுதிப்பகுதியிலும் நாச்சிக்குடா வன்னேரிக்குளம் அக்கராயன் போர் முனைகளில் இரு நாட்களாக கடுமையான மோதல்கள் நடைபெற்றிருந்தன. இராணுவத்தின் முன்னணி தாக்குதல் படையணிகளான 57 மற்றும் 58 ஆவது படையணிகள் இந்த அச்சில் மேற்கொண்ட நகர்வு முயற்சிகளை தாம் முறியடித்து விட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல்களின் போது 30 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மூவர் காணாமல் போயுள்ளதாகவும், 140 பேர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந்த போதும் 45 பேர் கொல்லப்பட்டதுடன், 170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று படை வட்டாரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரின் கிளிநொச்சியை நோக்கிய நகர்வை இலகுவாக்கும் நோக்கத்துடன் கடந்த 17ஆம் திகதி கிளாலி பகுதியில் நிலைகொண்டுள்ள 53ஆவது படையணியை சேர்ந்த வான்நகர்வு படையினர் மட்டுப்படுத்தப்பட்ட நகர்வொன்றை மேற்கொண்டிருந்தனர்.

ரீ55 ரக டாங்கிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நகர்வை முறியடித்து விட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் 15க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதனிடையே இராணுவத்தின் இந்த திசைதிருப்பும் உத்திகளின் மீது விடுதலைப்புலிகள் மற்றுமொரு அதிரடித்தாக்குதலை கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை மேற்கொண்டுள்ளனர். யாழ். குடாநாட்டுக்கான விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எம்.வி. நிமலவ மற்றும் எம்.வி. றுகுணு ஆகிய இரு கப்பல்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வெளியே தரித்து நின்ற சமயம் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி யுள்ளன.



கடற்புலிகளின் தற்கொலை அணி கொமோண்டோக்களே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் இதன் போது எம்.வி. நிமலவ கப்பல் பாரிய சேதத்திற்கு உள்ளாகிய பின்னர் மூழ்கிவிட்டதாகவும், எம்.வி.றுகுண கப்பல் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளதுடன், இதன்போது இரு கரும்புலிகள் பலியானதாகவும் தெரிவித்துள்ளனர்.எனினும் படைத்தரப்பு இதனை மறுத்துள்ளதுடன் எம்.வி. நிமலவ கப்பல் மட்டும் சேதமடைந்ததாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் எம்.வி. நிமலவ கப்பல் அழிவடைந்ததாக தனது பெயரை குறிப்பிட விரும்பாத கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்தி நிறுவனமும் தெரிவித்திருந்தது.

மேலும் விடுதலைப்புலிகளின் நான்கு படகுகள் இந்த தாக்குதலில் பங்குபற்றியதாகவும், மூன்று படகுகள் வெடித்துச்சிதறிய போதும் ஒரு படகை தாம் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், கைப்பற்றப்பட்ட படகு கடற்படை வட்டாரங்களில் பாரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் புதிய வடிவமைப்பை கொண்ட அந்த தாக்குதல் படகானது, பகுதியாக அமிழ்ந்து மிதக்கும் (குஞுட்டிகுதஞட்ஞுணூண்டிஞடூஞு) பொறிமுறையுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தோற்றமளிக்கின்றது. ராடர் திரைகளில் இருந்து தப்பும் உத்திகளை கொண்ட ஸ்ரெல்த் (குtஞுச்டூtட) தொழில்நுட்பமும் இதன் வடிவமைப்பில் பின்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த புதிய படகின் வெடிகுண்டானது நீருக்கு அடியில் மோதி வெடிக்கும் வண்ணம் பொருத்தப்பட்டுள்ளது. டொப்பிட்டோ வகை வெடிகுண்டை மத்தியில் கொண்ட படகில் வெடிக்கவைக்கும் கருவிகள் (ஊதத்ஞுண்) முன்புறமாக பொருத்தப்பட்டுள்ளன. (அ கூணிணூணீஞுஞீணி டூடிடுஞு ஞிஞுணtணூச்டூ ஞுதுணீடூணிண்டிதிஞு தணடிt தீடிtட டிட்ணீச்ஞிt ஞீஞுtணிணச்tணிணூ ண்ணீடிடுஞுண்). நீருக்கடியில் பெரிய வெடிப்பதிர்வை ஏற்படுத்தும் இந்த குண்டானது 100 மீ. சுற்றாடலில் அதிக சேதத்தை ஏற்படுத்த வல்லது.சாதாரண படகு போலல்லாது இது ஒரு சிறிய படகாகும், சிறிய ஒரு வெளியிணைப்பு மோட்டார் இயந்திரத்தை கொண்டது. அதிக தூரம் பயணிக்கும் தன்மையற்ற இந்த படகானது வேறு படகில் இருந்து தாக்குதல் இலக்கிற்கு அருகில் கடலில் விடப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் தலைதூக்கியுள்ளது.

மேலும் ஒரு மனிதரால் இயக்கப்படும் படகு என சில தரப்பினர் இதனை தெரிவித்துள்ள போதும், அதன் வெளியிணைப்பு இயந்திரமானது இறுதி நேரத்தில் இலக்கை நோக்கி படகை செலுத்தும் வண்ணம் இணைக்கப்பட்டுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.கடற்புலிகளின் படகுகளின் துணையுடன் இலக்கிற்கு அண்மையாக நகர்த்தப்படும் இந்த படகானது மனிதவலு இல்லாது அருகில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டு அமைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.இவை எல்லாவற்றையும் விட இந்த படகின் வடிவமைப்பானது ராடர் திரைகளின் கண்களில் மண்ணைத்தூவும் ஸ்ரெல்த் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராடர் கருவிகள் மற்றும் இலக்கை கண்டறியும் இலத்திரனியல் சாதனங்களில் இருந்து தப்பும் உத்திகளை கொண்டு படைத்துறை சாதனங்களை அமைப்பதற்கு ஸ்ரெல்த் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதுண்டு.இதன் முக்கிய உத்தியானது ராடர் கதிர்களின் தெறிப்பு மையத்தின் பரப்பளவை (கீச்ஞீச்ணூ இணூணிண்ண் குஞுஞிtடிணிண கீஇகு) குறைப்பதாகும். தெறிப்பு மையத்தின் பரப்பளவு அதிகரிக்கும் போது அதில் தெறித்து ராடர் சமிக்ஞை வாங்கியை அடையும் கதிர்களின் சக்தி அதிகரிக்கும்.

உதாரணமாக ஒரு பிக்அப் (கடிஞிடுதணீ tணூதஞிடு) வாகனத்தின் மேற்பரப்பும் அதன் அழுத்தமான முடிவிடங்களும் (ஞூடூச்t ண்தணூஞூச்ஞிஞுண் ச்ணஞீ ண்டச்ணூணீ ஞுஞீஞ்ஞுண்) ஏறத்தாழ 200 சதுர மீ. ராடர் மைய தெறிப்பு பரப்பளவை கொண்டது. ஆனால், மிகவும் மெதுவான சிறிய முடிவிடங்களை (குட்ணிணிtடஉஞீஞ்ஞுஞீ ஊடிஞ்டtஞுணூ ஒஞுt) கொண்ட தாக்குதல் விமானத்தின் ராடர் மைய தெறிப்பு பரப்பளவு 2 தொடக்கம் 4 சதுர மீற்றராகும்.அதாவது படைத்துறை பொருட்களின் வடிவமைப்பானது அதன் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதுடன், அதன் தாக்குதிறனுக்கும் முக்கியமானது. அமெரிக்க வான்படையின் எவ்.117 (ஊ117 குtஞுச்டூtட ஊடிஞ்டtஞுணூ கடூச்ணஞு) தாக்குதல் விமானம் தட்டையான பகுதிகளை கொண்டதாக அமைக்கப்படுவதில்லை. எனவே அதன் ராடர் மைய தெறிப்பு பரப்பளவானது ஒரு சதுர மீற்றரிலும் குறைவானது.

விடுதலைப்புலிகளின் தாக்குதல் படகின் வடிவமைப்பை நோக்கினால் இந்த தொழில்நுட்பம் அதிகம் பொதிந்துள்ளதை காணமுடியும். இருபுறமும் இரு உருளைவடிவ குழாய்கள், நடுவில் வெடிமருந்து நிரப்பப்பட்ட குழாய் (கூணிணூணீஞுஞீணி) என்பன உலோகமற்ற பொருளினால் இணைக்கப்பட்டுள்ளது.

ராடர் கதிர்களை ஏமாற்றும் உத்தி கொண்ட இந்த வடிவமைப்பானது வெற்றி கண்டுள்ளது என்றே கொள்ள முடியும்.ஏனெனில் மிகவும் அதிக பாதுகாப்பு கொண்ட காங்கேசன்துறை துறைமுகத்தின் வெளித்துறைமுக பகுதியை இந்த கலங்கள் படையினரின் ராடர் திரைகளில் அவதானிக்கப்படாது சென்றடைந்தது அதனையே வெளிப்படுத்தியுள்ளது.

கடற்புலிகளின் இந்த புதிய தாக்குதல் ஆயுதமானது கடற்படையினருக்கு எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது. துறைமுகங்களையும், கடலில் உள்ள படையினரின் முக்கிய இலக்குகளையும் இது ராடர் திரைகளில் அவதானிக்கப்படாது சென்றடைந்துவிடும்.கடந்த ஏப்ரல் மாதம் நாயாறு கடற்பரப்பில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதிவேக டோரா தாக்குதல் படகு திடீரென வெடித்துச்சிதறி மூழ்கியது.

அன்றைய தாக்குதலிலும், திருமலைதுறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எம்.வி. இன்வின்சிபிள் என்ற விநியோக கப்பல் மீதான தாக்குதலுக்கும் இந்த புதிய வகை கலத்தையே கடற்புலிகள் பயன்படுத்தியிருந்தனரா என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன. விடுதலைப்புலிகளின் இந்த புதிய தாக்குதல் உத்தியானது கடற்படையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிகள் அதிக செலவானதாகும்.உதாரணமாக படையினர் வெப்ப உணர்திறன் கொண்ட இலக்கினை கண்டறியும் கருவிகளை கொள்வனவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டால் அது தற்போதைய 1700 மில்லியன் டொலர் பாதுகாப்பு செலவீனத்தை மேலும் அதிகரிக்க செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நடைபெற்றுவரும் நாலாம் கட்ட ஈழப்போரில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் உத்திகள் அதற்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் என்பவை மிகவும் நவீன தொழிநுட்பம் கொண்டதாக உள்ளதுடன், நடைபெற்றுவரும் போரில் படைவள இழப்புக்களுக்கு அப்பால் பாரிய பொருளாதார இழப்புக்களையும் அரசுக்கு அவை ஏற்படுத்தி வருவது கவனிக்கத்தக்கது. வான்புலிகளின் வான் தாக்குதல்கள், அனுராதபுரம் வான்படை தாக்குதலில் விடுதலைப்புலிகளின் சிறப்பு கொமோண்டோக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் என்பவற்றுடன் தற்போதைய இந்த புதிய தாக்குதல் கடற்கலமும் இணைந்துள்ளது.

- அரூஷ்

Comments