அரசியல் இருப்பை தக்க வைப்பதற்கு மேற்கொள்ளப்படும் படை நகர்வுகள்

வடபோர்முனையில் இராணுவம் பூநகரி பிரதேசத்தை கைப்பற்றியுள்ளது. இது தென்னிலங்கையில் அரசியல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு அரசிற்கு பெரிதும் உதவி வருகின்றது. இதனை நாடு தழுவிய ரீதியில் விழாவாக முன்னெடுப்பதன் மூலம் பெரும்பான்மையுடன் ஒரு ஆட்சியை அமைப்பதற்கு தேவையான வாக்குகளை பெற்றுவிடலாம் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

இந்த நோக்கங்களுக்காகவே இந்த முறை அரசாங்கம் வன்னி களமுனையில் மேற்குப்புற களமுனையை தேர்ந்தெடுத்திருந்தது. ஏனெனில், வெற்றி நிச்சயம் படை நடவடிக்கையின் போது இராணுவம் பெரும்பாலும் ஏ9 நெடுஞ்சாலைக்கு கிழக்குபுறமான நகர்வுகளையே மேற்கொண்டிருந்தது. எனவே, ஏ9 நெடுஞ்சாலைக்கு மேற்குப் புறமான நகர்வுகளை மேற்கொள்வதன் மூலம் கைப்பற்றப்படும் பிரதேசங்கள் அரசின் கைகளில் இருந்த கால இடைவெளி தொடர்பான தகவல்களை அதிகமாக தெரிவிக்க முடியும்.

இதன் மூலம் தென்னிலங்கை எதிர்கொள்ளப் போகும் பொருளாதார நெருக்கடிகளை போருக்குள் மறைத்து, போரின் மனநிலையில் மக்களை தக்கவைப்பதன் மூலம் பல அரசியல் அனுகூலங்களை பெற்றுக் கொள்ளலாம்.

1995 ஆம் ஆண்டு யாழ்.குடாநாட்டை கைப்பற்றிய சந்திரிக்கா அரசாங்கம் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்தது நினைவிருக்கலாம். இந்த அரசியல் நோக்கங்களுக்காகவே யாழ்.குடாநாடு கைப்பற்றப்பட்ட தகவலை பிறிதொரு நாட்டை கைப்பற்றியது போன்றதொரு தோற்றப்பாட்டுடன் பெரும் விழாவாக அரசாங்கம் நடத்தி முடித்திருந்தது. அதே போரியல் அனுகூலங்களுடன் கூடிய முனைப்புக்களை தற்போதைய அரசாங்கம் மீண்டும் பல மடங்கு வேகத்துடன் நகர்த்த தொடங்கியுள்ளது. இராணுவத்தின் 58 ஆவது படையணியின் 2 மற்றும் 3 ஆவது பிரிகேட்டுக்கள் பூநகரியை கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது பரந்தன் சந்தியை நோக்கிய நகர்வுகளை படைத்தரப்பு முடுக்கி விட்டுள்ளது.

பூநகரியில் தற்போது இராணுவம் நிலைகொண்டுள்ள இடத்தில் இருந்து ஏறத்தாழ 8 கி.மீ தூரம் நகர்ந்தே பரந்தன் சந்தியை அடையவேண்டும்.

பரந்தன் சந்தியை அடைவதன் மூலம் கிளாலி முகமாலை நாகர்கோவில் என 12 கி.மீ நீளமான அச்சில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 53 மற்றும் 55 ஆவது படையணிகளின் நகர்வுகளை இலகுவாக்கலாம் என்ற திட்டம் ஒருபுறம் இருக்க, தற்போது கிளிநொச்சியை நோக்கிய நகர்வில் ஈடுபட்டுவரும் 57 ஆவது படையணியின் நகர்வுகளை சுலபமாக்கலாம் என்பதும் அதன் மறு உத்தி. ஆனால், பரந்தன் சந்தியை கைப்பற்றுவது மட்டுமல்லாது மேலும் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி படையினர் நகர்ந்தால் தான் முகமாலை களமுனையில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு நெருக்கடிகள் ஏற்படலாம் அது வரையில் அவர்கள் கிழக்கு பகுதியூடாக தமது விநியோகங்களை மேற்கொள்ள முடியும்.

பூநகரியை கைப்பற்றுவதன் மூலம் விடுதலைப்புலிகளின் வடபோர்முனையின் பலத்தை குறைத்து விடலாம் என போடப்பட்ட கணிப்புக்கள் தவறானவை என்பதை கடந்த சனிக்கிழமை (15) பூநகரி கைப்பற்றப்பட்ட பின்னர் கிளாலி மற்றும் முகமாலை களமுனைகளில் ஏற்பட்ட மோதல்களில் இருந்து அரசாங்கம் உணர்ந்திருக்கும்.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் திங்கட்கிழமை வரையிலான மூன்று நாட்கள் 53 ஆவது படையணியின் வான்நகர்வு பிரிகேட்டும், 55 ஆவது படையணியின் சில பற்றாலியன் படையினரும் இணைந்து மேற்கொண்ட நகர்வுகள் வெற்றிபெறவில்லை. இந்த நகர்வுகளுக்கு ஆதரவாக படைத்தரப்பு செறிவான கனரக சூட்டாதரவயும், வான் தாக்குதல்களையும் பயன்படுத்தியிருந்தது. இது தொடர்பாக அரசாங்கம் தகவல்களை வெளியிடாத போதும் இந்த மோதல்களில் 50 பேர் வரையிலான படையினர் கொல்லப் பட்டதுடன், 275 பேர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தகவல் கள் தெரிவித்துள்ளன.

எனினும் கடந்த சனிக் கிழமை நடைபெற்ற மோதலில் 18 இராணுவ த்தினர் கொல்லப்பட்ட துடன், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோதலில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80 பேர் காயம டைந்துள்ளதாகவும், திங்கட்கிழமை நடைபெற்ற மோதல்களில் 36 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 90 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரி வித்திருந்தனர்.

இதனிடையே இந்த மூன்று நாட்களும் முகமாலை களமுனைகளில் ஏற்பட்ட மோதல்களில் 130 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 450 இற்கு மேற் பட்டோர் படுகாயம டைந்துள்ளதாகவும் தமிழ்நெற் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

படையினரின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட இந்த தகவலில், விடுதலைப்புலிகளின் சினைப்பர் தாக்குதல்களில் 29 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், காயமøடந்தவர்களில் 235 பேர் கொழும்பு மருத்துவமனைக்கும், 85 பேர் களுபோவில மருத்துவமனைக்கும் 90 பேர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசõலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்,

ஏனையோர் இராணுவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.படை நடவடிக்கைகளை பொறுத்தவரையில் படையினரின் உளவுரண் களமுனைகளில் முக்கிய பங்குவகிப்பதுண்டு.

1940 களில் நடைபெற்ற 2 ஆம் உலக யுத்தத்தில் ஸ்ராலின்கிராட் சமரின் போது ஜேர்மன் இராணுவம் அதன் மிகவும் தரம் வாய்ந்த 6 ஆவது இராணுவத்தையும் (இது 17 டிவிசன்களை கொண்டது), பன்சர் படை பிரிவையும் பயன்படுத்திய போதும் அது தோல்வி கண்டிருந்தது.

அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்த படைத்துறை ஆய்வாளர்கள் முன்வைத்த பல காரணிகளில் முக்கிய இடத்தை பிடித்தது இராணுவத்தின் உளவுரண் பாதிப்படைந்தது என்பது தான்.அதாவது எவ்வளவு பயிற்சிபெற்ற வீரர்களை இராணுவம் கொண்டிருந்தாலும், அவர்கள் எத்தகைய நவீன ஆயுதங்களை கொண்டிருந்தாலும்,

அவர்களை சிறந்த தளபதிகள் வழிநடத்தினாலும் படையினரின் உளவுரண் குன்றுமாக இருந்தால் தோல்வி நிச்சயம் என்பது அந்த சமர் உணர்த்திய பாடங்களில் ஒன்று. இந்த தத்துவத்தை பரிசோதித்து பார்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் முயன்றிருந்தது.

அதாவது பூநகரியை கைப்பற்றி அதனை பெரிய வெற்றிவிழாவாக கொண்டாடியதன் மூலம் விடுதலைப்புலிகளின் உளவுரணில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பது அரசாங்கத்தின் கணிப்பு எனவே தான் 63 ஆவது படையணியின் மூன்று பிரிகேட்டுக்களும் மாங்குளத்தை குறிவைக்க, 57 ஆவது படையணியின் முதலாவது மற்றும் இரண்டாவது பிரிகட்டுக்கள் கிளிநொச்சியை குறிவைக்க, 53 மற்றும் 55 ஆவது படைப்பிரிவுகள் பளையை குறிவைத்து நகர்வுகளை முனைப்பாக்கியிருந்தன.

ஆனால், இந்த நகர்வுகளுக்கு எதிரான விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் மிகவும் உக்கிரமானவை. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் இராணுவம் கடுமையான இழப்புக்களை சந்தித்துள்ளது.

அரசாங்கத்தில் இருந்து பிரிந்து சென்றவரும் முன்னாள் அமைச்சருமாகிய மங்கள சமரவீரவினால் நடத்தப்படும் பாதுகாப்பு கண்காணிப்பகம் என்ற அமைப்பு வெளியிட்ட தகவல்க ளின் படி கடந்த செவ்வாய்கிழமை வரையிலான 3 நாட்கள் மாங்குளம், கிளிநொச்சி மற்றும் முகமாலை பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் 200 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 700 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவை தவிர பூநகரியை கைப்பற்ற கடந்த சனிக்கிழமை (15) காலை நடைபெற்ற மோதல்களில் 8 அதிகாரிகள் உட்பட 54 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 350 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் களத்தின் உக்கிரத்தை உணர்ந்தியுள்ள அதே சமயம் விடுதலைப்புலிகளின் உளவுரணும் போரிடும் மனநிலையும் சற்றும் குறைவடையவில்லை என்பதை இலகுவாக படைத்தரப்புக்கு உணர்த்தியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

எனவே விடுதலைப்புலிகளின் நகர்வுகள் ஏதோ ஒரு பாரிய படைத்துறை பின்புல உத்திகளை கொண்டது என்பது தெளிவானது. ஏனெனில் பிரதேசங்களை தக்கவைப்பதில் புலிகள் நம்பிக்கை கொண்டிருந்தால் படையினரால் ஒவ்வொரு பிரதேசமும் கைப்பற்றப்படும் போதும் புலிகளின் உளவுரணில் வீழ்ச்சிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகியிருக்கும்.
ஆனால் அவர்கள் தமது நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப களமுனைகளை நகரவிட்டு செல்வதனால் அரசின் கொண்டாட்டங்களால் அவர்கள் பாதிப்படையவில்லை. மாறாக எதிர்வரும் களமுனை உத்திகளை வலுவாக்கி வருகின்றனர்.

இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை நாயாறு கடற்பகுதியில் நடைபெற்ற கடற் சமரில் விடுதலைப்புலிகளின் இரு படகுகளை தாம் அழித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால் இலங்கை கடற்படையினர் புதிதாக உருவாக்கப்பட்ட விரைவு தாக்குதல் அணிகளின் (கீச்ணீடிஞீ அஞிtடிணிண ஆணிச்t குணுத ச்ஞீணூணிண) உதவியுடன் தரையிறக்கம் ஒன்றை அலம்பில் பகுதியில் மேற்கொள்ள முனைந்ததாகவும் அதனை தாம் முறியடித்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் போது கடற்படையினர் 40 இற்கு மேற்பட்ட சிறியரக விரைவு தாக்குதல் படகுகளையும் அணூணூணிதீ ஆணிச்tண் அவற்றிற்கு ஆதரவு சூடுகளை வழங்கும் நோக்கத்துடன் டோரா பீரங்கி படகுகளுடன், எம்.ஐ24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளையும் பயன்படுத்தியிருந்தனர்.

தற்போது மணலாறு மாவட்ட புலிகளின் கட்டளைத்தளபதியாக பணியாற்றிவரும் கேணல் ஜெயம் இந்த முறியடிப்பு தாக்குதலை ஒருங்கிணைத்திருந்ததாக படைத்தரப்பு தெரி வித்துள்ளது.

இதே போன்றதொரு முயற்சி இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நாகர்கோவில் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஏறத்தாழ 35 படகுகள் பங்குபற்றிய இந்த நடவடிக்கையும் வெற்றிபெறவில்லை. இந்த வருடத்தின் நடுப்பகுதியில் வடபோர்முனையில் உள்ள கரையோர பகுதிகளை கைப்பற்றும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை விரைவு தாக்குதல் கடற் கொமோண்டோ அணியொன்றை அமைத்திருந்தது. இந்த அணியில் அதிக வேகம் கொண்டதும் ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் பயணிக்கும் தன்மை கொண்டதுமான 100 அரோ வேக படகுகள் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த படகுகள் 12.7 மி.மீ மற்றும் 7.62 மி.மீ கனரக இயந்திர துப்பாக்கிகளை கொண்டதுடன் 57 படையினரும் அதில் பயணிக்கவும் முடியும்.இதனிடையே, இராணுவத்தின் 58 ஆவது படையணியின் நகர்வுகளை தடுக்கும் நோக்கத்துடன் விடுதலைப்புலிகள் பரந்தன் சந்திக்கு குறுக்காக வடக்கு தெற்கு நோக்கி பாரிய மண் அணைகளை அமைத்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த அணைகளை நெருக்கும் முயற்சிகளில் படைத்தரப்பு கடுமையான இழப்புக்களை சந்தித்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை பூநகரி பகுதியை கைப்பற்றிய இராணுவம் பரந்தன் சந்தியை நோக்கிய நகர்வில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி நிற்பதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் வடபோர்முனை கட்டளை தளபதி கேணல் தீபன் லெப். கேணல் ஜெரியின் உதவியுடன் தற்போது முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளில் நடைபெற்றுவரும் இராணுவ நடவடிக்øககளுக்கு எதிரான தாக்குதல்களை நெறிப்படுத்தி வருவதுடன், பிறிதொரு இடத்தில் 1000 உறுப்பினர்களுக்கு தாக்குதல் சிறப்பு பயிற்சிகளையும் வழங்கி வருவதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் வாரங்கள் படைத்துறை ரீதியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பது படைத்துறை அவதானிக ளின் கருத்து.

- அரூஷ்-

Comments