மூன்று நிமிட நேரத்தை ஒதுக்கி, வன்னி வாழ் மக்களுக்கு உதவிகள் சென்றடைய அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தைக் கோருங்கள்

எமது மூன்றே நிமிட நேரத்தை ஒதுக்கி, வன்னி வாழ் மக்களுக்கு உதவிகள் சென்றடைய அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தைக் கோருவோம்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மட்டும் தான் ஒரே ஒரு வெளிநாட்டு அமைப்பு இப்போதும் வன்னியில் இயங்கி வருகின்றது. அதனிடம் தமது அவலங்களை வெளிப்படுத்தி வன்னி வாழ் தமிழ் மக்கள் மிகப் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை அண்மையில் நிகழ்த்தியிருந்தது நாம் எல்லோரும் அறிந்ததே.

புலம்பெயர்ந்த நாடுகளில் பரந்து வாழும் தமிழர்களாகிய நாம் எல்லோரும் இந்த மிக முக்கியமான கட்டத்தில் வன்னி மக்களுடன் இணைய வேண்டும். அவர்களின் துயரங்களை நீக்க நாமும் ஒருமித்த குரலில் பேச வேண்டும்.

உலகெங்கும் வாழும் தமிழர்களாகிய நாம் மூன்றே நிமிட நேரம் செலவிட்டால் எமது குரல் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்குக் கேட்கும்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் (Link ) இணைப்பை அழுத்தி அதன் பின்னர் உங்கள் பெயரையும், முகவரியையும் கொடுக்கப்பட்ட இடங்களில் நிரப்புங்கள். பின்பு, "Send E-mail" ஐ அழுத்தினால் உங்கள் கடிதம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆணையரை உடனடியாகச் சென்றடையும்.

http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=pearl&hotissue=27


உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லோரையும் இதனைச் செய்யச் சொல்லுங்கள். அவர்களின் பெயர்களில், அவர்களின் அனுமதியுடன் நீங்கள் கூட கடிதங்களை அனுப்பலாம்.

வன்னி வாழ் மக்களுக்கு உரிய உதவிகள் சென்றடையவும், அதற்குரிய பாதையைத் திறக்கவும் சிறிலங்கா அரசு மீது அழுத்தம் போடுங்கள் என்ற கோரிக்கையையே நாம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினருக்குத் தெரிவிக்கின்றோம். உங்கள் எல்லோரினது ஒத்துழைப்பும் அதற்கு முழுமையாகத் தேவை.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எத்தனை கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன என்பதை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் அறியத் தருவோம். தற்போதைய எண்ணிக்கையை கீழே பாருங்கள்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களாகிய நாங்கள் ஒருமித்த குரலில் பேச வேண்டும்.

http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=pearl&hotissue=27

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு, நாடுகள் வாரியாக இதுவரை அனுப்பப்பட்டுள்ள கடிதங்களின் எண்ணிக்கை: 437+…

அனைத்துலக நாடுகளாவிய ரீதியில் அனுப்பப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கை விவரம்:

Australia - 22
Canada - 86
Cayman Islands - 1
Denmark - 7
France - 5
Germany - 6
India - 13
Italy - 3
Madagascar - 1
Malaysia - 4
New Zealand - 1
Norway - 10
Qatar - 1
Singapore - 3
Sri Lanka - 5
Sweden - 2
Switzerland - 3
United Kingdom - 44
United States – 220


Comments