சிறீலங்கா தூதரகத்தின் சூழ்ச்சியை முறியடித்து, கனடாவில் மாணவர்களால் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்த்தப்பட்டுள்ளது.



மாவீரர் தொடக்க நாளான நேற்று நவமபர் 25 2008ல் புலம்பெயர்ந்து வாழும் கனடா நாட்டின் அனைத்து தமிழ் இளையோரும் ஒன்றிணைந்து இந்நிகள்வை ஆரம்பித்து வைத்தார்கள். பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் மற்றும் உயர்தரப்பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து மண்டபம் நிறைந்த இளைஞர் கூட்டத்துடன் சீன கலாச்சார மண்டபத்தில் (Chinese cultural centre) வெற்றிகரமாக நடாத்தி முடித்திருக்கிறார்கள். இந்நிகழ்வில் பேச்சுஇ கவிதைஇ நடனம்இ நாடகம் ஆகியன மாவீரர்களை நினைவூட்டும் வகையில் இடம்பெற்றிருந்தன.









இந்நிகள்வை நடாத்துவதற்கு பல இடங்களிலிருந்து பல்வேறுபட்ட தடைகள் வந்தன. நிகழ்வு நடாத்தப்பட்ட இடம் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்த போதும் அதற்கான அனுமதி இன்று 25ம் திகதி காலை மறுக்கப்பட்டது. காரணம் கனடாவிற்கான இலங்கைத் தூதுவர் தனது அரசாங்கத்திடம் கதைத்து கனடாவிற்கான சீன தூதுவரின் உதவியுடன் இந்த சீன கலாச்சார மண்டபத்தை அளிக்கவேண்டாமென கூறியிருந்தமையினாலாகும்.

இதை அறிந்த கொதித்தெழுந்த இளையோர் கனடாவின் பாரளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் உதவியுடன் மறுக்கப்பட்ட இடத்தை வெற்றிகரமாக திரும்பப் பெற்று உணர்வுபூர்வமாக இந்நிகள்வை நடாத்தி முடித்தனர்.

எப்பேற்பட்ட தடைவந்தபோதும் நாம் துணிந்து செயற்படுவோமென அவர்கள் இச்செயலின்மூலம் அறிவித்திருக்கிறார்கள்.

இலங்கையில் சிங்கள அரசாங்கம் தமிழரை துன்புறுத்தி நாட்டை விட்டு வெளியனுப்பிய பின்னும் அந்நிய தேசங்களிலும் அது தன் அடக்குமுறையை தமிழர் மீது கட்டவிழ்த்துவிடப் பார்க்கிறது என்பது தெளிவாகப் புலப்படுகிறது. ஆனாலும் எது வந்த போதும் நாம் அஞ்சமாட்டோம் என்று இவ்வெற்றி மூலம் மாவீரர்மீது உறுதிகொண்ட எமது இளையவர் இலங்கை அரசுக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.

Comments