முரசுமோட்டை மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 4 அப்பாவி பொதுமக்கள் படுகொலை; 15 பேர் படுகாயம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முரசுமோட்டையில் உள்ள முருகானந்தா மகா வித்தியாலயத்துக்குப் பின்புறமும் சேத்துக்கண்டி மக்கள் குடியிருப்புக்களையும் இலக்கு வைத்து இன்று புதன்கிழமை காலை 8:30 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தின.

இதில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். பொதுமக்களின் ஆறு வீடுகள் அழிந்துள்ளதுடன் பாடசாலையும் சேதமடைந்துள்ளது.





சிவானந்தன் (வயது 30), மரியம்மா (வயது 55), சகாயம் மக்கிரட்ஸ் (வயது 24) மற்றும் சந்திரபோஸ் (வயது 36) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இராகுலன் (வயது 21)

சந்திரகுமார் (வயது 43)

புலேந்திரன் (வயது 33)

சரவணபவானந்தன் (வயது 62)

றஞ்சிதமலர் (வயது 56)

நிர்மலன் (வயது 17)

சந்திரமாரி (வயது 42)

சின்னக்குமார் (வயது 40)

பழனியப்பன் (வயது 52)

சுப்பிரமணியம் (வயது 52)

ஜெயக்குமார் (வயது 38)

பாலசுந்தரம் ராகசிறீ

அன்னக்கொடி

குமணன் தேவராசா

ஆசீர்வாதம் றெனிநாத்

ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.







மேலும் கிளிநொச்சி கரைச்சி பிரிவில் உள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது சிறிலங்கா வான்படை இன்று பிற்பகல் 12:30 நிமிடமளவில் நடத்திய குண்டுத் தாக்குதலில் நடமாடும் மருத்துவ சேவைப் பிரிவு சேதமடைந்துள்ளதுடன் பொதுமக்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.

மாரிமுத்து வியாகலக்ஸ்மன் (வயது 24)

யூக்காஸ் கொலம்பியன் (வயது 24)

தவராசா தவநேசன் (வயது 36)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.







Comments