விடுதலைப்புலிகளுக்கு வெங்காயம் போகிறது வெடிகுண்டு போகிறது என்பதைக் கண்காணிக்கும் இந்தியக் கடற்படையினர், கராட்சியில் இருந்து மும்பாய் வரை கண்காணிக்கவில

குமுதம் ரிப்போட்டர் 11.12.2008ல் திரு.சோலை 'பயங்கரவாத கோரமுகம்' என்ற தலைப்பில் மும்பாயில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிய கருத்துக்களை எழுதும் போது இவ்வாறு கேட்டிருக்கிறார்.

விடுதலைப்புலி களுக்கு வெங்காயம் போகிறதா வெடிகுண்டு போகிறதா என்பதனை இராமேஸ்வரம் கடற்பரப்பை கடலோரக் காவல்படை கண்காணித்து வருகிறது. அதேபோல கராச்சியிலிருந்து மும்பை வரையுள்ள கடற்பரப்பை கடலோரக் காவல்படை கண்காணிக்கவில்லையா?

விடுதலைப்புலிகளின் மையங்களை இந்திய செயற்கைக்கோள் துல்லியமாகப் படம்பிடித்துத் தருகிறது. அந்தப் படங்கள் சிங்கள ராணுவத்திற்குச் சென்று சேருகின்றன. அதே போல் அரபிக் கடல் அலை அடிக்கும் நமது கடற்கரையை செயற்கைக் கோள்கள் படம் பிடிப்பது இல்லையா?

இதே குமுதம் ரிப்போட்டரில் வந்த வம்பானந்தாப் பகுதியில்
திருமாவளவனுடன் காங்கிரஸ் தலைவர்கள்!

திருமாவளவன் சென்றால் நாங்கள் உடன் செல்ல மாட்டோம் என்று மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் குறிப்பிட்டிருந்தபோதும், டெல்லியில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்தித்தபோது, திருமாவளவனுடன் காங்கிரஸ் தலைவர்களும் உடன் சென்றிருந்தார்கள். இத்தனைக்கும் `எல்லாருமாக முடிவு செய்தால் அவர்களுடன் செல்ல வேண்டாம்; மேலிடத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன்' என்று மேலிடப் பார்வையாளர் அருண்குமார் கூறியிருந்தாராம்.

இதுபற்றி விசாரித்தபோது, `அப்படியா, தெரியவில்லையே' என்று குறிப்பிட்ட காங்கிரஸ் வட்டாரங்கள், `உடன் சென்றதால்தான் பிரதமர் முன் திருமாவளவன் தெரிவித்த கருத்துகளை மறுத்து தங்களுடைய நிலையையும் தெளிவுபடுத்த முடிந்தது' என்கின்றன.

நெடுமாறன் தவிர்க்கப்பட்டது ஏன்?

டெல்லி சென்ற குழுவில் யார் யாரோ இடம் பெற்றிருந்தபோதிலும், மறைந்த பிரதமர் இந்திரா காந்தி காலந்தொட்டு இலங்கைத் தமிழர் பிரச்னையில் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வரும் நெடுமாறன் தவிர்க்கப்பட்டிருக்கிறார். `இதுதொடர்பாகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இவரைப் போன்ற சிலர் வலியுறுத்தியதன் காரணமாகத்தான் எம்.பி.க்கள் ராஜிநாமா செய்வது பற்றிய முடிவெடுக்கப்பட்டது. மீண்டும் அத்தகைய ஒரு தர்மசங்கடம் வந்துவிடக் கூடாது என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருக்கலாம்' என்று தெரிவிக்கின்றன நெடுமாறனுக்குநெருக்கமான வட்டாரங்கள்.

இந்தச் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா. பாண்டியன் உள்பட 23 தலைவர்கள் கலந்துகொண்டனர். `ரஷியாவிலிருந்து திரும்பும் வழியில் டெல்லியில் இருந்தேன்; கலந்துகொண்டேன். இதற்கும் கூட்டணி விஷயங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை' என்றிருக்கிறார் தா. பாண்டியன். பிரதமர் முன் கலைஞர் உள்பட ஏழு அல்லது எட்டுத் தலைவர்கள் பேசினார்களாம். `நாங்களும் வலியுறுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்' என்பதுதான் பிரதமர் சொன்ன பதிலாம்! இந்தச் சந்திப்பில் பிரதமரிடமிருந்து எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இல்லாததால் முதல்வர் அப்செட் என்றும் தகவல்.

குமுதம் 10.12.2008ல் அரசு பதில்கள் பகுதியில் வாசகர் ஒருவர் கேட்ட கேள்வியும் பதிலும்

என். சிவபுண்ணியம், தர்மபுரி.

இலங்கையில் தமிழன் செத்து மடிவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாததற்குக் காரணம்?

இந்தியாவை ஒப்பிடும் போது 69 மடங்கு சிறிய தீவான இலங்கையின் சிங்கள ராஜ தந்திரத்தின் முன்னால் இந்தியா காலம் காலமாகத் தோற்று வருவதுதான்.

இலங்கையின் முதல் பிரதமரான சேனநாயகா முதல் இன்றைய ராஜபக்ஷே வரை நம் முகத்தில் கரி பூசுவதில் எல்லோருமே கை தேர்ந்தவர்கள். நம் தரப்பில் சுதாரிப்பாய் இருந்த ஒரே பிரதமர் இந்திராதான்.


Comments