வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சமைத்த உணவு வழங்கல்

வெள்ளம் காரணமாக குடியிருப்புக்களை இழந்து பாடசாலைகளிலும், பொது மண்டபங்களிலும், ஆலயங்களிலும் தொடர்ந்தும் மக்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகளையும், குழந்தைகளுக்கான பால்மா, போசாக்குணவுகளையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடர்ந்தும் வழங்கி வருவதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடகப்பணிப்பாளர் திரு.சீசர் ஐ.பி.சி வானொலிக்கு தெரிவித்தார்.

ஓரளவு பாதிக்கப்பட்ட தற்காலிக வீடுகளுக்குத் திரும்பிச்செல்லும் மக்களுக்கு தரைவிரிப்புக்களை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். விசுவமடு கண்டாவளைப் பிரதேசங்களிலுள்ள இடம்பெயர்ந்தோர் குடியிருப்புக்களில் வசித்த 3162 குடும்பங்கைளைச் சேர்ந்த 14,686 குடும்பங்கள் முழுவதுமாக தங்கள் இருப்பிடங்களை இழந்து 23 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாகவும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தற்போதைய வெள்ளம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments