கொலைவெறியில் சிங்களம் - கொந்தளிப்பில் தமிழகம் குழிபறிக்கும் முதல்வர்


10-09-08 அன்றைய நாளேடுகளில் ஒரு செய்தி. ஈழ விடுதலைப் போராட் டத்தில், வவுனியா பகுதிய ராணுவத் தளத்தின் மீது புலிகள் நடத்திய விமானத் தாக்குதலில் சிங்களப் படையினர் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தியப் படையிர் இருவர் காய முற்றனர் என்று. இலங்கையில் கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக ஈழ விடுதலைப் போர் நடப்பதும், சிங்களப் படை யினர்க்கும், புலிகளுக்கும் அவ்வப் போது மோதல் நிகழ்வதும் பலருக்கும் தெரியும். நடுவில் 1987இல் இந்தியப் படை அமைதி காப்புப் படை என்கிற பெயரில் ஈழம் சென்று அழியாத கறை களோடு அவமானப்பட்டுத் திரும்பி யதும் தெரியும். அப்படியிருக்க, இந் தியப் படையினர்க்கு தற்போது என்ன அங்கே வேலை என்பது பலருக்கும் கேள்விக்குறியாகியது.

ஏற்கெனவே, தில்லி அரசு, சிங்கள இனவெறி அரசுக்கு ராணுவ உதவிகள் செய்து வருவதும், படைப் பயிற்சிகள் தந்து வருவதும், தமிழகத் தமிழர்கள் மத்தியில் கண்டனத்துக்கு உள்ளாகி யிருந்த நிலையில், இப்படி அளிக்கும் படைப் பயிற்சிகள் போதா தென்று, நேரடியாகவே இந்தியப் படையாளர் களையும் தில்லி, இலங்கைக்கு அனுப்பி ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்களப் படைக்கு உதவி செய்கிறதா என்று தமிழக மக்களிடையே ஆத்திரம் மூண்டது. இது தமிழ்ப் படைப்பாளிகள் மத்தியிலும் பெரும் அதிர்வை ஏற் படுத்த, “தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி” அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்களும், செயற்குழு உறுப் பினர்களும் உடனடியாகக் கூடி நாம் ஏதாவது செய்ய வேண்டும், மக்களின் உணர்வுகளை வெளிப்படுத் தும் படைப்பாளிகள் என்ற வகையில், இது சார்ந்து மக்களின் கொதி நிலையை வெளிப்படுத்த வேண்டும், தமிழகத் தில் உள்ள தமிழீழ ஆதரவுக் கட்சிகள் இத்தருணத்தில் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வலியுறுத்த வேண்டும் என்கிற நோக்கில், இதுபற்றிக் கலந்து பேசி, தமிழகத்தின் அனைத்துப் படைப் பாளிகளையும் திரட்டி, ஏதாவது நட வடிக்கையில் ஈடுபடுவது என்று முடிவு செய்து 22-09-08 அன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ஒரு நாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது. இதனைத் தொடர்ந்து மதிமுக, பாமக, சிறுத் தைகள், சி.பி.ஐ. கட்சிகளும் மற்றும் தமிழின உணர்வு அமைப்பு களும், தன்னியல்பாக பல்வேறு மக்கள் பிரிவி னரும் ஈழ மக்களுக்கு ஆதரவாக பல போராட்டங்களை நடத்தினர்.

ஈழ விடுதலைப் போரில் ஒரு நிகழ்வுப் போக்கைத் தமிழக மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். அதாவது புலிகள் நடத்தும் எந்தத் தாக்குதலும்
அப்பாவிச் சிங்கள மக்கள் மீது அல்ல. அவர்களது இலக்கும் அது அல்ல. ஆகவே அவர்கள் நடத்திய, நடத்துகிற ஒவ்வொரு தாக்குதலும் சிங்கள ராணுவத் தளங்களை குறி வைத்ததாகவே இருக்குமே தவிர, பொதுமக்கள் வாழ்கிற குடியிருப்புப் பகுதிகளோ, பொது இடங்களோ நிச்சயம் இருக்காது. அதில் எப்போதும் மிக எச்சரிக்கையுடனும் தார்மீக அற நெறியுடனும் தங்கள் தாக்குதல் திட்டத்தை வகுப்பவர்கள் புலிகள்.

ஆனால் சிங்கள இனவெறி ராணுவம் அப்படியல்ல. புலிகள் சிங்கள ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால், பதிலுக்கு புலிகளின் முகாம்களை அடையாளம் கண்டு தாக்குதல் தொடுக்க திராணி, திறமையே அற்ற சிங்கள இராணுவம், கோழைத்தனமாகவும், வெறித்தன மாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது தாக்குதல் தொடுப்பதையோ வாடிக்கையாக்கி வருகிறது. தேவா லயங்கள், பள்ளிக் கூடங்கள், பொது இடங்களின் மீது தாக்குதல் தொடுத் தது, செஞ்சோலைச் சிறுமிகள் காப் பகம் மீது குண்டு வீசித் தாக்கி 61 சிறுமி களைக் கொன்றது, என எண்ணற்ற சம்பவங்களை இதற்கு எடுத்துக் காட்டுகளாக அறியலாம்.

அதே போலவே, தற்போதும் வவுனியா பகுதி தாக்குதலுக்கு பதிலடி யாக சிங்கள ராணுவம் தமிழர் வாழும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. ஏற்கெனவே கொழும்பு - யாழ்ப் பாணம் ஏ-9 சாலையை அடைத்தது. தமிழக மக்களுக்கு அவசியப் பொருள் கள் கிடைக்கவிடாமல் கொடுமைக்குள் ளாக்கியது. தற் போதைய தாக்குதலில் 3 லட்சம் மக்கள் தங்கள் குடியிருப்பு களை விட்டு இடம் பெயர்ந்து வன்னிக் காடுகளில், எந்த அடிப்படை வசதியு மின்றி சொந்த மண்ணிலேயே அகதி களாக வதைவது, தற்போதைய பருவ மழையில், ஒண்டவும் இடமின்றி, காடுகளிலும், புதர்களிலும், பாம்புக் கடிக்கும், தேள் கடிக்கும் மத்தியில் ஒவ் வொரு கணமும் உயிர்ப் பயத்தோடு வாழ்கிற நிலை அனைத்தும் அன்றாடச் செய்திகளாக தமிழ் நாளேடுகளில் இடம் பெற, இது தமிழ் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தமிழகமெங்கும் அரசியல் கட்சி களும், தமிழின உணர்வு அமைப்புகளும் போராடத் தொடங்கியதை அடுத்து, பல்வேறு பகுதி மக்களும் ஆங்காங்கே தன்னெழுச்சியாக இதற் காகப் பல போராட்டங்களை நடத்தத் தலைப்பட்டார்கள். இப்படித் தமிழகமெங்கும் தன் னெழுச்சியாக போராட்டங்கள் பொங்கி எழுந்த தருணத்தில்தான் இது இப்படியே போனால் தன் தமிழினத் தலைவர் பட்டம் எங்கே தானாய் பறி போய் விடுமோ என்று அஞ்சிய கருணாநிதி, ஈழச் சிக்கலில் தி.மு.க.வின் நிலைப்பாட்டை விளக்குவது என்கிற பெயரில், 6-10-08 அன்று மாலை மயிலை மாங்கொல்லையில் ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

இந்தத் தருணத்திலாவது கூட் டத்தில் புதிதாக ஏதும் அறிவிப்புகள் வருமோ என்று எதிர்பார்த்த அனை வருக்கும் முற்றாய் பட்டை நாமம் சாற்றி, பிரதமருக்கு தந்திக் கொடுக்கும் அறி விப்பைச் செய்து கவனத்தைத் திசை திருப்ப முயற்சித்தார் கருணாநிதி. இம்முயற்சி பலனளிக்காமல், எதிர்க் கட்சிகளும், தமிழ் உணர்வு அமைப்புகளும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட, கோரிக்கை வைக்க, கடந்த 14-10-08 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டினார்.
அந்தக் கூட்டத்தில் கீழ்க்கண் டுள்ள ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட்டு, அங்கு அமைதி யும் இயல்பு வாழ்க்கையும் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து அதனை நிறைவேற்ற வேண்டும்.

2. இலங்கைக்கு செய்து வரும் ராணுவ உதவிகளையும், படைப் பயிற்சி களையும் மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

3. இலங்கையில் 2 வாரத்துக்குள் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு முன் வராவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும்.

4. போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கு உணவு, உறைவிடம், மருந்துப் பொருள் கள் போன்றவற்றை வழங்க மனிதாபி மான அடிப்படையில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

5. மனிதாபிமான முறையில் பல்வேறு உதவிகளை வழங்க முன் வரும் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் வேறு வழிகளில் திருப்பி விடப் படாமல் பாதிக்கப் பட்டோர்க்கு செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அனைத்து நாட்டு அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

6. தமிழக மீனவர்கள் மீது சிங்கள கப்பற் படையின் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

இந்த ஆறு கோரிக்கையும் தில்லி அரசு இரண்டு வாரங்களில் நிறை வேற்றாவிட்டால், தமிழகத்தில் உள்ள நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர் களும், பதவி விலகி விடுவோம் என்று ஓர் எச்சரிக்கையும் செய்தார். அப்போதே அரசியல் நோக்கர் கள் மத்தியில் இது பற்றிய மதிப்பீடு என்னவாக இருந்தது என்றால்,

1. போர் நிறுத்த அறிவிப்புக்கு இரண்டு வார அவகாசம் என்பது வேண்டியதில்லை. நினைத்தால் இரண்டே நாளில் இதை முடிக்கலாம்,

2. நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் என்பது சும்மா ஊரை ஏமாற்ற முயலும் ஒரு நாடகம். இவர்கள் யாரும் பதவி விலகப் போவதில்லை.

3. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்படியே பதவி விலக நேர்ந்தாலும் பிப்ரவரியில் தேர்தல் வர வாய்ப்புண்டு என்பதால், பெரும் இழப்பு எதுவு மில்லை, எது எதற்கோ பதவி இழந்த நாங்கள் தற்போது ஈழத்துக்காக பதவி விலகினோம் என்று ஒப்பாரி வைத்தே மக்களை மயக்கி வாக்குகளைப் பெற்று விடலாம்.

4. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினாலும், அமைச்சர்களாக உள்ளவர்கள் மட்டும் அப்படியே நீடிப்பது, யாரும் கேட்டால் அமைச்சர் களாகிய நாங்கள் ‘அரும்பெரும்’ திட்டங்களை எல்லாம் தீட்டி நிறை வேற்றக் காத்திருக்கிறோம். அப்படிப் பட்ட பணிகளை இப்படி அரை குறையாக விட்டு வந்துவிட முடியாது என்று சமாளிப்பது.

5. சூழல் கனிவாய் இருந்தால், இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி கூடவே சட்டமன்றத் தேர்தலையும் நடத்தி ஜெயலலிதாவால் வார்த்தைக்கு வார்த்தை மைனாரிட்டி அரசு என்று வர்ணிக்கப்படும் இழிச் சொல்லையும் களைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளலாம்.
தவிரவும், மின்வெட்டு, விலை வாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் முதலிய நெருக்கடிகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பவும் இது பெரு மளவு உதவியாக இருக்கும்.

ஆக, இருக்கிற எதையும் இழக் காமல், அப்படியே இடைக்காலத்தில் எதையாவது இழக்க நேர்ந்தாலும், தொலை நோக்கில் இதை விடப் பலமடங்கு பலன் ஈட்டும் வகையிலேயே கருணாநிதி இந்த அறிவிப்பைச் செய் திருக்கிறார் என்றே மதிப்பீடுகள் நிலவின. இரண்டு வாரங்களும் கடந்தன. இடையில் நடந்த நிகழ்வுகள் நாளேடு களில் அன்றாடம் வந்த செய்திகள், இச் சிக்கலில் இந்திய, இலங்கை அரசுகள் யார், யாரை முதலில் அணுகுவது, சென்று பார்ப்பது என்பதில் கௌரவப் பிரச் சினை. கடைசியில், இலங்கை அரசில் எந்தப் பொறுப்பும் வகிக்காத ஆனால் மஹிந்த ராஜ பக்ஷேவுக்கு சகோதரர் என்கிற ஒரே தகுதியை மட்டுமே கொண்டு இலங்கை அரசின் சிறப்புத் தூதராக பசில் ராஜபக்ஷே தில்லி வந்தது, தில்லியில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தது, இருவரும் தில்லியில் கூட் டாக அறிக்கை விட்டது, பிறகு பிர ணாப் தமிழகம் வந்து முதல்வரைச் சந்தித்து, வெளியே வந்து பத்திரிகை யாளர்களுக்கு பேட்டிக் கொடுத்துச் சென்றது ஆகிய நிகழ்வுகள் நடந்தேறின.

ஆனால் பிரணாப் முகர்ஜி அறி விப்பில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எந்த ஒரு சிறு அசைவோ, முன்னேற்றமோ எதுவுமே இல்லை. மாறாக போராளி அமைப் புக்கு எதிராக சிங்கள அரசு தொடத்து வரும் போரை “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்பதாகச் சித்தரித்து இப்போர் தொடரும் என்றே அறிவித்தார். ஆனாலும், தமிழக மக்கள் தமிழீழ உரிமை காக்கும் சிக்கல்களில், கொந்தளித்து எழும் போதெல்லாம் அவர்களது உணர்வுகளுக்கு குழி பறிக் கும் முதல்வர் இதைத்தான் வரவேற்ப தாக, நிறைவளிப்பதாக அறிவித்தார்.

இது யாரையும் திருப்திப்படுத் தாத நிலையில்தான் “நாப்பதாண்டு சிக்கல் நாலு நாளில் தீர்ந்துவிடுமா” என்று புதிய கண்டு பிடிப்பை வெளி யிட்டு, துன்பத்தில் உழலும் யாழ் மக்களுக்கு 800 டன் உணவுப் பொருள் அனுப்ப இருப்பதாக அறிவித்து, ஈழ மக்கள் துயர் துடைக்க நிதி வழங்கும் அறிவிப்பைச் செய்து, தற்போது நிதி திரட்டும் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். அதாவது ஈழச்சிக்கலின் தற் போதைய கொடுமைகளையும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தையும் மக்கள் மறக்கும் வகையில், அல்லல்படும் ஈழ மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற இரக்க உணர்ச்சியையும், மனிதாபி மானத்தையும் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, அதன்பால் மக்களின் கவனத்தைத் குவிக்கச் செய்து அடிப்படையானவற்றில் காலை வாரி விடும் முயற்சியில் இயங்கினார்.

இதில் நமக்குக் கேள்விகள் :

1. ஈழச் சிக்கல் 40 ஆண்டுகாலச் சிக்கல் இது நாலு நாளில் தீராது என்றும், ஒரு நாடு இன்னொரு நாடடின் விவகாரங்களில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்றும் இப்போது கூறும் கருணாநிதிக்கு அன்று தீர்மானம் நிறைவேற்றும்போது இது தெரி யாதா?

2. தற்போது ஈழ மக்களுக்கு உணவுப் பொருள்கள் அனுப்புவதாக நிதி திரட்டி அனுப்பி இருப்பதாகச் சொல்லும் முதல்வருக்கு, அது நேரடி யாய் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையும் என்பதற்கு என்ன உறுதிப் பாடு வைத்திருக்கிறார்.

3. ஏற்கெனவே சுனாமி பாதிப் புக்கு வந்த சர்வதேச உதவிகளை, சும்மா ஒப்புக்குக் கொஞ்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காட்டி மற்றதை சிங்கள அரசே ஏப்பம் விட்ட கதைபோல தற்போது தமிழக மக்கள் தரும் உதவி களை, உலகத்தின் பார்வைக்கு கண் துடைப்பாக கொஞ்சம் ஈழத்தமிழர் களுக்கு தந்துவிட்டு, பிற பெரும் பகுதி யையும் தமிழீழ மக்களைக் கொல்லும் ராணுவமே பயன்படுத்திக் கொள்ள முயலாதா?

4. ஏற்கெனவே போர்க்களப் பகுதியில் உள்ள செஞ்சிலுவை சங்க அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், அனைத்து நாட்டு அமைப்பு பார்வை யாளர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் சிங்கள அரசால் முற்றாக வெளியேற்றப் பட்டு, களத்தில் என்ன நடக்கிறது என்றே வெளியுலகால் அறியப்படாத நிலை தற்போது நீடிக்க, இந்தப் பொருள்கள் எப்படியாகின்றன என்பது யாருக்குத் தெரியும்.

5. போர் நிறுத்தம் செய்யப் படாமல், அப்பகுதியில் அமைதி திரும் பாமல், இயல்பு நிலைக்கு உத்திர வாதம் இல்லாமல் இப்பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்ற டைவது என்பது எப்படி சாத்தியம்?

என இப்படி இதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன, சிக்கல்கள் இருக்கின்றன. இச்சிக்கல்கள் ஏதும் முதல்வர் கருணாநிதி அறியாத தல்ல. இருந்தும் இந்த அறிவிப்பைச் செய் திருக்கிறார் என்றால் மக்களது கவனத் தைத் திருப்ப வேண்டும். அதே வேளை ஈழத்துக்கு ஏதோ செய்வது போன்ற மனநிலையும் ஏற்படுத்த வேண்டும் என்கிற உத்தியிலேயே இதைச் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டுவது, வரலாற்றில் தாயக மண்ணுரிமை, மொழியுரிமை, மனித உரிமை காப்பதில், ஒடுக்கப் பட்ட மக்கள் உலகின் எந்த மூலையில் போராடினாலும், அதற்கு ஆதரவளிப் பதில் தமிழக மக்கள் ஒருபோதும் பின் வாங்கிய தில்லை. உரிமைக் குரல் எங்கே எழுந்தாலும் அதற்காகப் பொங்கி யெழுந்து போராட அவர்கள் தயாராகவே இருக் கிறார்கள். ஆனால் அவ்வுணர்வைக் கெடுப்பது, திசை திருப்புவது, தணிப்பது ஆகிய காரியங் களைச் செய்வதெல்லாம் தமிழினத் துரோக தலைவர்கள்தான். ஆகவே இப்படிப்பட்ட தமிழின துரோகத் தலைவர்களிடமிருந்து தமிழக மக்களை மீட்டு அவர்களது உணர்வு களைத் தணிய விடாமல், பாதுகாப்பதே தற் போது நம் முன் உள்ள முக்கிய கடமை யாகும்.

தமிழீழ விடுதலை ஆதரவு உணர்வு என்பது தமிழக உரிமைகளுக் கான போராட்ட உணர்வோடு தொடர் புடைய தாகும். இதனால்தான் தில்லி அரசு இதற்கு எதிராக இருக்கிறது. ஆனால் தில்லி அரசு ஈழ விடுதலைக்கு ஆதரவாக இருந்தாலும், எதிராக இருந் தாலும், எந்த நாளிலும், எந்த வகை யிலும், தமிழ், தமிழக உரிமைகளுக் கான போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. நிலவும் புறநிலை மேலும் மேலும் இதற்கு ஆதரவாகவே கனிந்து கொண்டு வருகிறது.
ஏற்கெனவே காவிரி யுரிமையை, முல்லைப் பெரியாறு, பாலாற்று உரி மையை, கச்சத் தீவை இழந்து நிற்கின்ற தமிழர், தற்போது ஈழத்துக்கு ஆதரவாக பேசவோ, குரல் கொடுக்கவோ, கண் ணீர் சிந்தவோ, அழவோ கூட உரிமை யற்றவராக கருத்துரிமை, பேச் சுரிமை மறுக்கப்பட்டு, வாய்ப்பூட்டு போடப் பட்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையை உணரும் தமிழன் நாளை விழிப்படையும்போது, ஈழத் திற்காகக் கொடுக்கும் அந்த ஆதரவுக் குரல் உணர்வு, தமிழகத்தின் நிலை யையும், சிந்திக்க வைக்கும். தமிழகத் திற்காகவும் போராட வைக்கும். ஆகவே, இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி ஈழ ஆதரவு உணர்வுடன், தமிழக உரிமை காப்பு உணர்வையும் நாம் தட்டி எழுப்ப வேண்டும். அதாவது சுருக்கமாக, ஒடுக்கப் பட்ட உலக நாடுகளின் உரிமைக்காக எழுப்பப்படும் ஆதரவுக் குரல், உள் நாட்டு உரிமைகளுக்கான போர்க் குர லோடு தொடர்புடையது. ஒன்றுக் கொன்று எதிர்வினை புரியக் கூடியது என்பதை உணர்ந்து, தற்போது தமிழக மக்களிடையே பொங்கி எழுந்துள்ள ஈழ மக்களது விடுதலை ஆதரவு உணர்வை, அம்மக்களுக்கான அனுதாப அலை யைத் தணிய விடாமல் பாது காத்து முன் னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக நாம் செய்ய வேண்டு வதெல்லாம்,

1. ஈழ விடுதலைக்காக, ஈழ மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக் கும் சக்திகளையெல்லாம் நாம் ஒன்று திரட்டி ஈழ ஆதரவு அணியை வலுப் படுத்த வேண்டும்.

2. அதே வேளை, ஈழ மக்கள் சிக்கலை தங்களது அரசியல் ஆதாயத் துக்குப் பயன்படுத்தும் போலி ஆதரவாளர்களின் முகமூடியையும் கிழித்து அவர்களை அம்பலப்படுத்த வேண் டும்.

3. ஈழத்தில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யவும், இந்திய அரசு அளித்து வரும் ராணுவ, படைப் பயிற்சி களை நிறுத்தவும், ஏற்கெனவே அளித்த வற்றைத் திரும்பப் பெறவும், தில்லி அரசைத் தொடர்ந்து வற்புறுத்த வேண்டும்.

4. தமிழ்நாட்டில் திரட்டப்படு நிதியும் இங்கிருந்து அனுப்பப்படும் உணவுப் பொருள்களும் முறையாக பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய உறுதிப்பாட்டையும், நம்பகத் தன்மை யையும் அரசு ஏற்படுத்த வலியுறுத்த வேண்டும்.

5. போராளி அமைப்புகள் மீதான தடையை நீக்கி, ஈழமக்கள் தமிழகம் வந்து செல்லவும், தங்களுக்கு வேண்டிய உதவிகளைப் பெறவுமான இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து நாம் விடாப்பிடியாக இயக்கம் நடத்துவதும், மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்துவதும், ஈழ மக்கள் ஆதரவு உணர்வை பரந்து பட்ட அளவில் கொண்டு செல்வதும், வளர்த்தெடுப் பதும் அத்தணலைத் தணிய விடாமல் பாதுகாப்பதுமே தற்போது நாம் ஈழ மக்களுக்குச் செய்ய வேண்டிய தலை யாயப் பணியாகும். தற்போது நாம் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையும் அதுவே.

-கணியன்-


Comments