புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினர் எறிகணை தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பின் தென்பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அப்பாவி பொதுமக்கள் உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு தெற்கு 9 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை இரவு எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இந்த எறிகணைகள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த பொதுமக்கள் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன.



இதில் வீடொன்றின் மீது வீழ்ந்து வெடித்துள்ள எறிகணைகளால் முல்லைத்தீவு சிலாவத்தையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான

காத்தான் துரைச்சாமி (வயது 60)
துரைச்சாமி சின்னம்மா (வயது 55)
துரைச்சாமி தமிழினி (வயது 17)

ஆகியோருடன் சிறுவனான சு.தவக்குமார் (வயது 17) என்பவரும் கொல்லப்பட்டுள்ளனர்.



கலாதீபன் திவ்யா (வயது 05)
கலாதீபன் மஞ்சு (வயது 25)
மரியம்மா (வயது 60)
ச.சுப்பையா (வயது 62)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சுப்பையா தனது கால்களை இழந்துள்ளார்.





Comments

Thamizhan said…
படங்களை அனுப்ப வேண்டிய அனைத்துலக நிறுவனங்களுக்கும்,பத்திரிக்கைகளுக்கும் அனுப்பவேண்டும்.
அதுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும்.