பிறந்துள்ள புதிய வருடம் சந்திக்கப்போகும் சவால்கள்

புதிய ஆண்டுக்குள் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம், இந்த ஆண்டு எமக்கும் உலகிற்கும் எத்தகைய பலன்களை ஏற்படுத்தப் போகின்றது என்ற எதிர்பார்ப்புக்கள் எல்லோரி டமும் உண்டு.உலகை பொறுத்தவரையில் அது எதிர் கொள்ளும் ஆயுத மோதல்களை விட பொரு ளாதார (Economic War) மோதல்கள் தான் அதிக சேதங்களை உண்டுபண்ணியுள்ளன. கடந்த ஆண்டு உலகில் ஏற்பட்ட பொருளாதார சரிவுகள் பெரும் பணக்கார நாடுகளைக்கூட தளர்ந்து போகும் நிலைக்கு தள்ளியிருந்தது.

அதன் தாக்கம் மூன்றாம் உலக நாடுகளை மேலும் பாதித்துள்ளது.இந்த வருடம் பொருளாதார பாதிப்புக்களில் இருந்து வல்லரசுகள் விடுபடுமா? என்ற எதிர் பார்ப்புக்கள் அந்த நாட்டு மக்களிடம் ஏற்பட் டுள்ள போதும் அதற்கான சாத்தியங்கள் மிக வும் குறைவு. அதாவது பொருளாதார வீழ்ச்சி கள் இந்த ஆண்டும் தொடரும் என்பதே பல பொருளியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள் ளது. அமெரிக்கா, பிரித்தானியா, அயர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளை தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளினதும் ஜப்பானினதும் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு தணிய லாம் என்ற கருத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

எனினும் எரிபொருட்களின் விலை புதிய ஆண்டில் மேலும் குறைவடையலாம் எனவும் மசகு எண்ணையின் விலை இந்த வருடத்தில் மேலும் வீழ்ச்சி காணலாம் எனவும் தெரிவிக் கப்படுகின்றது. அமெரிக்காவின் டொலர், பிரித் தானியாவின் ஸ்ரேலிங் பவுண்ஸ் ஆகியன தளம்பல் நிலையை அடைந்துள்ள போதும், இந்த வருட ஆரம்பத்துடன் 10ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ஐரோப்பிய நாடுக ளின் யூரோ உறுதியான நிலையில் உள்ளமை குறிப் பிடத்தக்கது.இந்த பொருளாதார மாற்றங் கள் மற்றும் சீரழிவுகள் மூன்றாம் உலக நாடு களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிலும் குறிப்பாக போரினால் சீரழிந்து வரும் இலங் கையின் பொருளாதாரத்தை அது மேலும் பின் தள்ளக் கூடும். முக்கியமாக இலங்கையின் தொழில்த்துறை நிறுவனங்கள் பல வீழ்ச்சிய டையும் கட்டத்தை அடைந்துள்ளதுடன், தனி யார் வங்கிகளும் பாரிய நெருக்கடிகளை சந்தித் துள்ளன. வைப்பில் இடப்பட்ட பணத்தை வாடிக்கை யாளர்கள் பெருமளவில் மீளப் பெற்று வருவ தும், கடன் மற்றும் கடனட்டைகளுக்கான மீள செலுத்தும் தொகைகளை அவர்கள் செலுத்த தவறுவதும் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தி யுள்ளன.

இதனால் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு தகர்ந்து போகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பங்குசந்தையும் கடந்த வருடத் தில் 41.1 வீதம் வீழச்சி கண்டுள்ளது.இதனை தொடர்ந்து கடந்த செவ்வாய்க் கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அவசர கூட்டத்தில் நிதி நெருக்கடிகளை சமாளிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. எனினும் நிதி நெருக் கடிகள் அடுத்து வரும் சில மாதங்களில் அர சின் கைகளை மீறிவிடலாம் என தெரிவிக்கப் படுகின்றது.

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) காலை 8.30 மணியளவில் கொழும்பின் வடபகுதியில் உள்ள புறநகரான வத்தளை பகுதியில் அமைந்திருந்த ஊர்காவல்படை முகாம் பகுதியில் வெடித்த குண்டு தென்னிலங் கையின் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கை களை தகர்த்துள்ளதுடன், அரசின் பொருளாதா ரத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்த தாக்குதலில் கப்டன் தர அதிகாரி ஒருவர் மற்றும் ஆறு ஊர்காவல் படையினர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதுடன், 18 பேர் காய மடைந்திருந்தனர்.தாக்குதல் நடைபெற்ற முகாமில் 150 இற்கு மேற்பட்ட ஊர்காவல் படையினர் தங்கியிருப் பதுண்டு எனினும் குண்டு முகாமிற்கு வெளி யில் வெடித்ததனால் பாரிய சேதத்தில் இருந்து ஊர்காவல்படை தப்பித்துள்ளது.அதிக படை வளம், அதிக பொருளாதார வளம் கொண்டு விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை உக்கிரப்படுத்துவதே அரசாங்கத் தின் திட்டம்.

ஆனால் மறுவளம் உலகின் பொருளாதார தளம்பல்கள், சுற்றுலாத்துறை யின் வீழ்ச்சி, தேயிலை தொழில்துறையில் ஏற் பட்டுள்ள வீழ்ச்சி, போர் என்பன உட்பட பல காரணங்களால் இலங்கையின் பொருளாதாரம் பாரிய சரிவை சந்தித்து வரும் நிலையில் தற் போது கொழும்பில் நடைபெற்ற தாக்குதலும் மேலதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்த தாக்குதல் பொருளாதாரத்தில் மட்டுமல் லாது வன்னி நோக்கி குவிந்து போயுள்ள படை யினரின் முழு கவனத்திலும் சிதறல்களை ஏற் படுத்தலாம். இந்த நிலையில் கிளிநொச்சி முனையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மூன்று முக்கிய படையணிகளான 57, 58 மற்றும் 63 ஆவது படையணிகள் மேற் கொண்ட முயற்சிகள் கடுமையான இழப்புக் களை சந்தித்ததால் இராணுவம் தனது இலக்கு களை முல்லைத்தீவை நோக்கித் திருப்பியிருந் தது.59 ஆவது மற்றும் 64 (கூகு4) ஆவது படை யணிகள் முல்லைத்தீவை நோக்கிய நகர்வில் ஈடுபட்டுவருகின்றன.

கடந்த வாரத்தின் இறு திப்பகுதியில் முள்ளியவளையை கைப்பற்றி யுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்திருந்த நிலை யில் கடந்த சனிக்கிழமை (27) அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவின் சிலாவத்தை மற் றும் உடுப்புக்குளம் பகுதிகளை நோக்கி முன் நகர்ந்த 59 ஆவது படையணி யின் 11 கெமுனு வோச் மற்றும் 14 ஆவது விஜயபா படையணி களை இடைமறித்த விடுதலைப்புலிகள் கடுமை யான எதிர்த்தாக்குதலை நடத்தியுள்ளனர்.பிற்பகல் 1.00 மணிவரையிலும் நடை பெற்ற உக்கிர மோதல்களின் போது 68 இராணு வத்தினர் கொல்லப்பட்டதாகவும், 75இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ள தாக வும் 17 உடல்கள் உட்பட பெருமளவிலான ஆயுதங் களை கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

மோதலில் 17 வயது நிரம்பிய படை சிப்பாயின் உடல் ஒன் றையும் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்க ளையும் தாம் கைப்பற்றியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ள போதும் படைத்தரப்பு அதனை மறுத்துள்ளது. எனினும் சிலாவத்தை பகுதியில் நடைபெற்ற மோதல்களில் தமது தரப்பில் 31 படையினர் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் 22 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 9 சடலங்களை 59 ஆவது படையணியினர் மீட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த படை நடவடிக்கைக்கு ஆதர வாக வான் தாக்குதலை மேற்கொண்ட எம்.ஐ. 24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்று விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சேதமடைந் துள்ளதாகவும் சில வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிக ளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பதுங்கு குழிகளை அல்லது டாங்கிகளை அழிக்கவல்ல 90 மி.மீ எறிகணை செலுத்திகள்; (குடணிதடூஞீஞுணூஞூடிணூஞுஞீ கீஞுஞிணிடிடூடூஞுண்ண் ஈடிண்ணீணிண்ச்ஞடூஞு அணtடிகூச்ணடு கீணிஞிடுஞுt) இதுவரை கைப்பற்றப்பட்ட ஆயுதங் களில் பல புதிய வகை என்பதுடன், மிகவும் நவீனமானதுமாகும்.

ஸ்பெயின் நாட்டு தயாரிப்பான இ90இகீ (M3) வகையை சேர்ந்த இந்த ஆயுதம் 5 கிலோ எடையுள்ளதுடன், கவச எதிர்ப்பு நடவடிக்கையில் 300 மீ தூர வீச்சும், துருப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளில் 800 மீ. தூரவீச்சும் கொண்டது. ஒரு தடவை பயன்படுத்திய பின்னர் கைவிடப்படும் பின் உதைப்பற்ற இந்த நவீன இலகு ரக உந்துகணைச் செலுத்தியை இயக் குவதற்கு மின்கலங்கள் தேவையில்லை. மேலும் அதன் பார்வைப்புல இலக்கு காட்டி (Oணீtடிஞிச்டூ ஙடிஞுதீஞூடிணஞீஞுணூ உடூஞுஞிtணூணிணடிஞி கீஞுஞீஈணிt கீஞுஞூடூஞுது குடிஞ்டt) வெவ்வேறு இலக்குகளை தாக்கும் உந்துகணைகளின் தன்மைகளுக்கு ஏற்ப வேறுபடுவ துடன், அதன் ரைறியம் புள்ளிகள் (கூணூடிtடிதட் ஞீணிtண்) பாதகமான வெளிச் சங்களை கொண்ட சூழ்நிலையி லும் துல்லியமாக இலக்குகளை இனங் காணக் கூடியது.

இந்த உந்துகணை செலுத்திக ளில் கவச எதிர்ப்பு, துருப்பு எதிர்ப்பு, புகை உற்பத்தியாக்கி (கடணிண்ணீடணிணூ ணிதண் ண்ட்ணிடுஞு), பதுங் குகுழி எதிர்ப்பு வகைகள் என்பன உண்டு. பதுங்கு குழி எதிர்ப்பு உந்து கணைகளை பொறுத்தவரையில் அது இரு வெடிமருந்து முனைகளை கொண்டது. முதலாவது வெடி மருந்து முனை காப்பரணின் சுவரில் மோதி வெடிப்பதனால் அதில் துளையை உண்டாக் கும், அதனைத் தொடர்ந்து குண்டு சிதறல்களை கொண்ட வெடிமருந்து முனை உள்ளே சென்று வெடிக்கும்.ஊதிப்பெருத்துள்ள இராணுவத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்கு பாகிஸ் தானில் இருந்து ஆயுதக் கப்பல்களை இலங்கை அரசு தொடர்ந்து தருவித்து வருகின் றது என்ற தகவலை கைப்பற்றப்பட்ட ஆயுதங் களின் புதிய தோற்றங்கள் உறுதிப்படுத்தியுள் ளன.

இருந்த போதும் இந் தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலை அரசை பாதித்துள்ளது. வன்னியில் அரசாங்கம் மேற் கொண்டு வரும் படை நடவடிக்கை பாகிஸ்தானின் உதவியில் தங்கியுள் ளது. பாகிஸ்தான் வன்னி நடவடிக்கை களுக்கு தேவையான ஆயுதங்களை யும் ஏனைய படைத்துறை உபகர ணங்களையும் வழங்கி வரு கின்ற போதும் இந்தியா இலங் கைக்கு தேவையான ஏனைய உதவிகளை வழங்கி வரு கின்றது. போர் தயாரிப்புக்க ளில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் இலங்கைக் குத் தேவையான ஆயுத விநி யோகங்களை மட் டுப் படுத்தலாம் என்பது இலங்கை அரசாங்கத் தின் கவலை.விடுதலைப் புலிகளை பொறுத்தவரை யில் முல்லைத்தீவு பகுதியை இராணுவத்திற்கு எதிரான செறிவான தாக்குதல் மையமாக மாற்றப் போகின்றனர். இதனை நடைபெற்ற சமர்களில் இருந்து உணர்ந்து கொள்ள முடியும்.

முல்லைத்தீவு கள முனையின் கட்டளை தளபதியாக கேணல் சொர்ணம் பணியாற்றி வருகின்றார். இந்த பகுயில் சினைப்பர் படையணிகளையும், கொமோண்டோ பிளட்டூன்களையும், மோட் டார் படையணிகளையும் அவர் நகர்த்தி யுள்ளார். இதனிடையே கடந்த டிசம்பர் 22 ஆம் நாள் அதிகாலை 57 மற்றும் 58 ஆவது படையணி கள் மேற்கொண்ட பல முனைகளின் ஊடான பாரிய படை நகர்வுகளுக்கு எதிராக விடு தலைப்புலிகள் மேற்கொண்ட கடுமையான எதிர்த்தாக்குதலைத் தொடர்ந்து 571 மற்றும் 572 ஆவது பிரிகேட்டுகளின் நடவடிக்கை முடக்க நிலைக்கு வந்த போதும், 58 ஆவது படையணியினர் பரந்தன் சந்தியை நோக்கி தொடர்ந்து நடவடிக்கைகளை மேற் கொண்டு வந்திருந்தனர்.

இதன் போது இராணுவத்தின் ஒரு அணியி னர் கடந்த வாரம் கைவிடப்பட்ட வீடு ஒன்றிற் குள் உள்நுளைந்த போது அங்கு பொருத்தப் பட்டிருந்த பொறிவெடிகள் வெடித் ததனால் 11 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல் லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்திருந்தது.எனினும் ஒரு வாரமாக அங்கு நடைபெற்ற மோதல்களை தொடர்ந்து லெப். கேணல் சுராஜ் பன்சயா தலைமையிலான 583 பிரிகேட்டின் இரண்டாவது கொமாண்டோ றெஜிமென்ட், 6 ஆவது மற்றும் 8 ஆவது கெமுனுவோச் றெஜி மென்ட் பற்றலியன்கள் 31 ஆம் நாள் மாலை பரந்தன் சந்தியை அதற்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் ஊடாக நகர்ந்து கைப்பற்றி யுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளதுடன், மறுநாள் 574ஆவது பிரி கேட் கிளிநொச்சிக்கு தென்புற மாக உள்ள இரணை மடு சந்தியை கைப்பற்றியுள்ள தாகவும் அவை தெரிவித்துள்ளன.

அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி யையும் கைப்பற்றியுள்ளதாக படையினர் அறி வித்தனர். அதன் பின்னர் 583 ஆவது பிரிகேட் படை யணி பரந்தன் சந்தியில் இருந்து தெற்கு நோக் கியும், 574 ஆவது பிரிகேட் இரணைமடுவில் இருந்து வடக்கு நோக்கியும், லெப். கேணல் ஹரேந்திர ரணசிங்க தலைமையிலான 571 ஆவது பிரிகேட் படையணியினர் கிளிநொச் சிக்கு வடமேற்குபுறத்தில் இருந்தும், 572 ஆவது பிரிகேட் படையணியினர் கிளிநொச் சிக்கு தென்மேற்குபுறத்தில் இருந்தும் நகர்வு களை ஆரம்பித்திருந்தனர்.

விடுதலைப்புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்திய போதும் தமது படையணிகளை அங்கிருந்து வடகிழக்குபுற மாக வெள்ளிக்கிழமை காலை நகர்த்தியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நண்பகல் 58 ஆவது படையணியும், 57 ஆவது படையணி யும் இணைப்பை ஏற்படுத்தி கிளிநொச்சி நக ரத்தை கைப்பற்றின.போர்களில் களமுனைகளும், நகரங்களும் கைமாறுவது ஒன்றும் புதுமையானது அல்ல. கிளிநொச்சி நகரம் கைப்பற்றப்பட்ட செய் தியை தென்னிலங்கை மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைக்காட்சி மூலம் வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் அறிவித்திருந்தார்.

அவரின் இந்த அறிவிப்பு நிகழ்ந்த 75 நிமிடங்களுக்குள் தலைநகரில் இலங்கை வான்படை தலைமைய கத்தில் மாலை 5.15 மணியளவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் வான்படை சிப்பாய் உட் பட இருவர் கொல்லப்பட்டதுடன், 16 வான் படை சிப்பாய்கள் உட்பட 36 பேர் காயமடைந் துள்ளதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியை கைப்பற்றியமை தொடர் பான அறிவிப்புகள் படைகளில் இளைஞர் களை சேர்ப்பதற்கும், அரசியல் அனுகூலங் களை பெறுவதற்கும் உதவலாம். எனினும் அதனை மாற்றி அமைக்கும் சக்தி வன்னி கள முனைகளில் நடைபெற போகும் எதிர்கால சமர்களுக்கு உண்டு என்பதை நாம் நிராகரித்து விட முடியாது.

ஏனெனில் விடுதலைப்புலிகள் தமது படை பலத்தை தக்கவைத்துள்ளனர் என் பதுடன் அவர்களின் இணைந்த நடவடிக்கை செயற்பாடுகளிலும் எந்த மாற்றங்களும் ஏற்பட வில்லை என்பதை வெள்ளிக்கிழமை நடை பெற்ற சம்பவங்கள் எடுத்து காட்டியுள்ளன.கிளிநொச்சியை நோக்கிய நடவடிக்கை மேற் கொண்ட காலப்பகுதியில் இலங்கை வான் படை பெருமளவில் குண்டு வீச்சுக்களையும் வன்னி பகுதியில் நடத்தியுள்ளது.கடந்த மாதம் 31ஆம் நாள் மற்றும் இந்த வருடத்தின் ஆரம்ப நாட்களில் பரந்தனை அண்டிய முரசுமோட்டைப் பகுதி யில் வான் படையின் மிகையொலி விமானங்கள் நடத்திய தாக்குதலில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்ட துடன், 40 இற்கு மேற்பட்டோர் காய மடைந் துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரி வித்துள்ளன.

பலஸ்தீனத்தின் காஸா பகுதி யில் இஸ்ரேலின் வான்படை மூர்க்கத்தன மான குண்டு வீச்சுக்களை நிகழ்த்தி வருகையில் உலகின் கவனம் அங்கு திருப்பப்பட்டுள்ளது, இந்த நிலையில் அரசாங் கம் வான் தாக்குதல்களை வன்னியில் தீவிரப் படுத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக் கது.இடம்பெயர்ந்து வாழ்வதாலும், அத்தியா வசிய மற்றும் மருந்துப் பொருட்களின் பற்றாக் குறையினாலும் பெரும் துன்பங் களை எதிர் கொண்டு வரும் வன்னி மக்களை தொடர்ச்சி யான வான் தாக்குதல்களும், எறிகணை வீச்சுக் களும் மேலும் கடுமையான துன்பங் களுக்குள் தள்ளியுள்ளது.

வன்னியில் நடக்கும் சம்பவங்க ளுடன் ஒப்பிடும் போது வெளியில் தெரியவ ரும் தகவல்கள் மிகவும் குறைவு, அரசாங்கம் போர் தொடர்பான தகவல்களை இருட்டடிப்புச் செய்துள்ளது. பரந்தன் சந்தியையும் கிளிநொச்சியையும் இராணுவம் கைப்பற்றியிருந்தாலும், வடபோர் முனையின் கிளாலி முகமாலை நாகர் கோவில் முன்னணி அச்சுக்களில் விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல் பலம் குன்றிவிடும் என்று கருத முடியாது. பரந்தன் சந்தியில் இருந்து கிழக்காகச் செல்லும் ஏ35 நெடுஞ் சாலையை ஊடறுத்து செல்லும் பல சிறிய பாதைகளின் ஊடாக அவர்கள் தமது விநி யோகங்களை மேற்கொள்ள முடியும்.இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை யில் பாரிய படை வளங்கள் மற்றும் ஆயுத வளங்களுடன் ஒரு தொடர்ந்த முற்றுகை சமரை நடத்துவதன் மூலம் விடுதலைப்புலிகளை முறி யடித்து விடலாம் என நம்புகின்றது.

ஆனால், இராணுவத்தின் போரிடும் வலுவை உடைப்ப தற்கு ஏற்ற களமுனையாக முல் லைத்தீவு கள முனையை பயன்படுத்த விடுதலைப்புலிகள் தீர்மானித்துள் ளனர். அதற்கேற்ப படை அணிகளையும் அவர் கள் நகர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படு கிறது. புதிய ஆண்டு களமுனைகளில் சில மாற்றங் களுடன் மலர்ந்தாலும் துன்பத்தில் மூழ்கியுள்ள வன்னி மக்களை அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் வான் தாக்குதல்கள் கடுமையாக பாதித்து வருகின்றது.

இதற்கான எதிர்த்தாக்கங் கள் என்ன? அது ஏற்படுத்த போகும் மாற்றங் கள் களத்தில் மட்டும் எதிரொலிக்குமா அல்லது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சீரழித்து அதன் அரசியல் அடித்தளத்தையும் ஆட்டம் காண வைக்குமா? என்பதற் கான விடைகளை தொடரப்போகும் மோதல்கள் எடுத்து காட்டும்.

- வேல்ஸிலிருந்து அருஷ்-

[நன்றி - வீரகேசரி வாரவெளியீடு]

Comments