இலங்கை பற்றிய இந்திய ஆர்வம்



தமிழக முதல்வரின் கண்டிப்பு நிறைந்த வேண்டுகோள் காரணமாக மன்மோகன் சிங் பிர்ணாப் முகர்ஜியை அனுப்புவதென தீர்மானித்திருந்தார். ஆனால், இப்பொழுது வந்திருப்பது சிவ்சங்கர் மேனனே. அவர் ஜனாதிபதியையும் பிரதம மந்திரியையும் சனிக்கிழமையன்று சந்தித்தார். அதற்கு முன் தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட பலபக்க நியாயங்களை இந்தியா ஹவுஸில் வைத்தே அவர் கேட்டறிந்தாரென செய்திகள் கூறுகின்றன. பிரணாப் முகர்ஜியின் வருகையை எதிர்த்த ஜே.வி.பி., சிவ்சங்கர் மேனனின் வருகைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்திய வெளியுறவு செயலர் வருவதை உத்தியோகபூர்வமாக எதிர்ப்பது சிரமமே. ஏனெனில், இலங்கையில் இந்தியாவின் ஸ்தானிகராலயம் ஒன்றுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்கள் ஏறத்தாழ எல்லோருமே இலங்கையின் பதவிக்காலம் முடிந்ததும் இந்திய வெளியுறவு முக்கிய பதவிகளுக்கோ அல்லது முக்கிய நாடுகளுக்கோ இந்திய ஸ்தானிகர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். இப்பொழுது இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கையைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தவரென கூறப்படுகின்றது. ஜனாபதியே அவரை அழைத்து உரையாடியதுண்டு. ஆனால், இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனனே வந்துள்ளார். இந்த நடவடிக்கைக்கான காரணம் யாதென்பது பற்றி அரசியல் விமர்சகர்கள் தத்தம் ஊகங்களைத் தெரிவித்துள்ளனர். இந்தக் "கதை' ஓட்டத்தின் கதையை விளங்கிக் கொள்வதற்கு நாம் இதன் தொடக்கத்திலேயே தொடங்க வேண்டும்.

கிளிநொச்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அரச தாக்குதல் காரணமாக தமிழ் சிவிலியன்கள் பலர் இறக்கின்றனர் என்ற செய்தியும் தென்னிந்திய கடற்கரையை வந்தடையும் இலங்கை தமிழ் அகதிகள் கடலிலேயே இறப்பது பற்றிய செய்தியும் காரணமாக தமிழகத்தில் மக்கள் மயப்பட்ட ஒரு எழுச்சி இருந்தது. தெரிந்த கதையை மீண்டும் சொல்வதாக கொள்ளாமல் அந்த சம்பவத்தின் முக்கியத்துவத்தை நோக்க வேண்டும். அண்மைக்கால தமிழக வரலாற்றில் முன்னரில்லாத வகையில் கருtநிதி, இராமதாஸ், ஜெயலலிதா, சி.பி.ஐ. (சற்று பின்னர்) சி.பி.எம்.மும் தமிழர் நிலைமையைப் பற்றிய ஆதங்கங்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

உலக நிலையில் பல இடங்களில் வன்னிப் பகுதியில் தமிழர் அனுபவிப்பது மிகுந்த அனுதாபத்துடன் பேசப்படுகின்றது. ஆனால், கொழும்பின் நிலை வேறு.

கிளிநொச்சி வெற்றியை காலக்கோடாகவே அரசு பார்த்து "புலிப் பயங்கரவாதத்தின்' தோல்வி வற்புறுத்தப்பட்டது. சிங்கள மக்கள் சகலரும் இதனை வரவேற்றனர். தமது ஆதரவைத் தெரிவித்தனர். இராணுவ வீரர்களின் திறமையையும் சாதனையையும் எல்லோரும் பெரிதும் போற்றினர்.

இந்த பின்புலத்திலேயேதான் இந்தியாவில் பிரtப் முகர்ஜி செல்வது கூறப்பட்டது. ஆனால், டில்லியில் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு நடவடிக்கை வேகங்கள் அமையவில்லை. பிரtப் முகர்ஜிதான் செல்லப் போவதாகவும் திகதி நிச்சயமில்லையெனவும் தெரிவித்தார். திடீரென சிவ்சங்கர் மேனன் பயணம் மேற்கொண்டார்.

கொழும்பைப் பொறுத்தவரையில் இந்திய வெளியுறவு அமைச்சரே வருவதென்பது அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அமைச்சர் வருகின்ற போது அது அரசியலாகிவிடுகின்றது.

இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் தனக்குள்ள அசௌகரியத்தை எடுத்து புதுடில்லிக்கு விளக்கியிருக்கலாம். புதுடில்லியைப் பொறுத்தவரையில் இலங்கையை ஒரு கட்டத்துக்கு மேல் பாகிஸ்தான் பக்கமோ சீனா பக்கமோ தள்ளிவிடாது பார்ப்பது அவசியமானது. ஆனால், இந்திய உள்ளக தேவைகளுக்காக (தமிழகம் கருtநிதி 40 எம்.பி.க்கள்) உயர் நிலை தொடர்பு அவசியமாயிற்று.

ஏனெனில் இலங்கையரசாங்கத்தின் பீதியில் தென்னிலங்கை பின்புலத்தை நோக்கும் போது நியாயம் இருப்பது தெரியும். ஐ.தே.க.வினர் எப்படியும் எதிர்ப்பர். ஆனால், ஜே.வி.பி. இந்த இந்திய விஜயத்தை பெரிதும் விரும்பப் போவதில்லை. எதிர்பார்த்தபடி அவர்கள் இந்தியாவின் இந்த பதிற்குறியை இலங்கை இறைமைக்கு எதிரானதென கூறினர். இது டில்லிக்கு இருதலைக் கொள்ளி எறும்பு நிலையை ஏற்படுத்திற்று.

இந்த சூழ்நிலை யிலே தான் வெளி ளியுறவுச் செயலாளரை அனுப்புவதென தீர்மானிக்கப் பட்டது. அமைச்சர் நிலையிலிருந்து அமைச்சின் செயலாளர் நிலைக்கு வந்ததும் (ககீOகூOஇOஃ இராஜரீக நடைமுறை மரியாதை) வித்தியாசம் ஏற்படும்.

இந்த நிலையில் இலங்கை அமைச்சரொருவர் கட்டுநாயக்கா செல்ல வேண்டிய தேவையில்லை. சிவ்சங்கர் மேனனின் வருகை முழுக்க முழுக்க புரட்டக்கோல் முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்திற்று. அந்த அளவில் இலங்கையரசின் நிலைப்பாட்டுக்கான அரசியல் நிலை அச்சுறுத்தல் இந்தியாவால் ஏற்பட்டதென கூறிவிட முடியாது.

ஆ?ல் பிரச்சினை தீர்வதற்கான வழிவகைகள் பற்றி பேசுவதற்கான அதிகார பூர்வமான குரல் தேவைப்பட்டது. சிவ்சங்கர் மேனன் சனிக்கிழமையன்று ஜனாதிபதியை சந்தித்து எந்தெந்த விடயங்களை அழுத்துவார் என்பது குறித்து பெரியதொரு தெளிவு இருக்குமென கூறமுடியாது. சிவ்சங்கர் மேனனின் வருகை ஒரேநேரத்தில் இந்தியாவில் தோன்றிய இலங்கை பற்றிய ஆதங்கங்களையும் இலங்கையின் அச்சங்களையும் உருவகித்து நிற்கின்றதெனலாம்.

சிவ்சங்கர் மேனனுக்கு முக்கியமான இக்கட்டு நிலையுண்டு. "பயங்கரவாதத்தை' தடுப்பதற்கும் அதற்கெதிராக போரிடுவதற்கும் இந்தியா தனது எதிர்ப்பை தெரிவிக்க முடியாது. இந்தியாவின் மும்பை தாக்குதல் அதனை தடைசெய்யும்.

சிவ்சங்கர் மேனனின் வருகையை இந்த பின்புலத்திலேயே பார்க்க வேண்டும். இந்த நிலையில் ஒன்றன் பின் ஒன்றாக வரும் இராணுவ வெற்றியீட்டல்களை ஒரேயடியாக இந்தியா கண்டிக்க முடியாது. இது உண்மையான இக்கட்டு நிலையாகும். இந்த நிலைமையில் தமிழ் பத்திரிகைகளின் கடமையானது தமிழ்ப் பக்கத்து நியாயப்பாடுகளை வலுவுடன் எடுத்துக் கூறுவதாகும். இந்தவெற்றிகள் அடுத்து வரப்போகின்ற இடைத் தேர்தல்களிலும் அரசாங்கத்தின் சர்வதேச கடன்கோரிக்கைகளிலும் நன்கு தெரியப்போகின்றது.

இவையாவுமே ஒரு மிக முக்கியமான உண்மையை தெளிவுற எடுத்துக் காட்டுகின்றன. அதாவது இலங்கைத் தமிழர் பிரச்சினையை இலங்கையரசாங்கம் ஒரு புறத்தில் இராணுவ நடத்தல் ஊடாகவும் மறுபுறத்தில் தேசிய, சர்வதேசிய அரசியல் பிரச்சினையாகவும் கொண்டு போவதாகும்.

இப்பொழுது வடக்கு கிழக்கென்ற பேச்சுக்கே இடமில்லை. கிழக்கு தனி வடக்கு தனியென்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலைமைக்கு தமிழ் நிலைப்பாட்டினர் எவ்வாறு முகம்கொடுக்கப் போகின்றனரென்பதே முக்கியமாகும். இது முக்கியமான அரசியல் பிரச்சினையாகும். மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்படவேண்டியது யாதெனில் தமிழர் நிலைப்பாட்டின் அடிப்படை நிலைமையாது அது நன்கு சொல்லப்படுகின்றதா? இதுவொரு முக்கியமான கட்டம். பிரிட்டிஷ் பிரதமர் கோல்டன் பிறவுண் இதனை ஒரு பிரதான பிரச்சினையாக கொள்வது மாத்திரமல்லாது பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் கதைக்கப் போவதாக அதாவது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைத் தமிழரின் நிலைபற்றி தனது அபிப்பிராயத்தை கோரப் போகின்றது.

தன் கண்ணோட்டத்தில் இலங்கையில் நடப்பது பற்றி மங்கள சமரவீர ஹிலாரி கிளிண்டனுடன் உரையாடப்போவதாக கூறப்படுகின்றது. ஹிலாரி கிளிண்டன் ஏற்கனவே எல்லா அரச எதிர்ப்பு இயக்கங்கள் மீதும் பயங்கரவாத முலாத்தை பூச வேண்டாமெனக் கூறியுள்ளார்.

இந்த வேளையில் உண்மையில் தமிழ் எம்.பி.க்களின் கடமை பெரிதாகின்றது.

இந்தியாவின் இலங்கை பிரச்சினை பற்றிய பார்வையை சிவ்சங்கர் மேனன் காய்தல் உவர்த்தல் இல்லாமல் பார்க்கப் போவது திண்ணம் இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொள்கின்ற அரசியல் பிரக்ஞை இலங்கைத் தமிழரிடம் உண்டா?

பீஷ்மர்

Comments