பெருகிச் செல்லும் தமிழக பதில் குறிகள்

கிளிநொச்சிப் போரின் பின்னர் இலங்கையின் இனக் குழும அரசியலின் பாரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. கிளிநொச்சியை விட்டு விடுதலைப் புலிகள் முல்லைத்தீவை நோக்கிச் செல்ல, முல்லைத்தீவு அருகாமை வரை அரச படைகளும் தங்கள் தாக்குதலை மேற்கொள்கின்றன.

இந்தத் தாக்குதல்களின் பிரதான அம்சங்கள் விமானங்களிலிருந்து குண்டு போடுவதும் அதற்கும் மேலாக ஷெல் தாக்குதல்களும் ஆகும். விமானங்கள் போடுகின்ற குண்டுகளைப் பொறுத்த வரையில் மக்கள் பாதுகாப்புத் தேடுவது அத்துணை சிரமமல்ல. ஆனால், ஷெல் வீச்சைப் பொறுத்த வரையில் ஷெல் எப்பொழுது வரும் எங்கு வெடிக்கும் என்பது பற்றிய தயார் நிலை இருக்கவே முடியாது. அதுவும் மக்கள் குடிபெயரத் தொடங்கிய நிலையில் இந்த ஷெல் வீச்சுகள் பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

யாழ்ப்பாண தீபகற்பத்திலே போலல்லாது வன்னிப் பகுதியில் குடியிருப்புகளுக்கு இடையே கணிசமான தூர இடைவெளியுண்டு. குறிப்பாக, பரந்தன், கிளிநொச்சி, முறிகண்டிப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் வயற் செகை வட்டத்தைக் கொண்டே குடியிருப்புகள் காணப்படும். இதனால் ஒரு குடியிருப்பிலிருந்து மற்றைய குடியிருப்புக்குச் செல்வது இடைவெளி தூரம் பற்றிய பிரச்சினையாகியுள்ளது.

குடியிருப்புகளிலும் அது மாத்திரமல்லாமல் நகர்வு நிலையிலும் ஷெல் வீச்சுகள் பாரதூரமாக பாதிக்கின்றன. உண்மையில் சிவிலியன் மக்களின் இறப்புத் தொகை இப்பொழுது கூடியுள்ளது. இதனால் மக்களின் இன்னல்கள் அதிகரிக்கின்றன. இச்சம்பவங்கள் பற்றிய செதிகளில் ஒரு சமச்சீரின்மையை அவதானிக்கலாம்.

அரசாங்க ஊடகப் பிரிவு தெரிவிப்பதற்கும் விடுதலைப் புலிகள் தெரிவிப்பதற்கும் இடையில் "கணித' வேறுபாடு உள்ளது. பி.பி.சி. போன்ற நிறுவனங்களின் தெரிவிப்பாளர்களும் அதிகம் செல்ல முடியாத சூழல். உண்மையில் வவுனியாவின் மாணிக்கவாசகம்தான் தரவுகளுக்கான ஒரு தரவு தொடர்பாளராக விளங்குகின்றார். பி.பி.சி. தமது நம்பகத்தன்மையை நிறுவிக் கொள்வதற்காக மாணிக்க வாசகத்தை மேற்கோளாகப் பயன்படுத்துகின்றது.

தமிழகத்தில் இந்த யுத்த சூடு அதிகரிப்பும் குறிப்பாக, மக்கள் மரணங்களும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சென்றவாரத்து தமிழக நிகழ்ச்சிகளில் இரண்டு தமிழகத்திலே கிளம்பும் பதிற்குறிகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. ஒன்று, 22 ஜனவரியில் தினமணி எழுதிய ஆசிரியர் தலையங்கம். இரண்டாவது, வெள்ளியன்று இடம்பெற்ற சட்டமன்ற கூட்டமும் அதிலே எடுக்கப்பட்ட தீர்மானமுமாகும்.

தினமணி பத்திரிகை தமிழகத்தின் மிகக் காத்திரமான தமிழ் நாளிதழ். அதிலே பரபரப்பான செதிகளும் விறுவிறுப்பான செதித் தலைப்புகளும் இருப்பதில்லை. அது ஒரு நிதானமான பத்திரிகை. தனிப் பத்திரிகையும் அல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸை வெளியிடும் கொயாங்கா குழுவினரின் பத்திரிகை. தமிழகத்தில் காத்திரமான வாசகர் எல்லோரும் தினமணியையே வாசிப்பார்கள். சென்ற வியாழன்று தினமணியில் வந்துள்ள ஆசிரியர் தலையங்கம் முக்கியமானது. அதில்வரும் இறுதிப்பகுதி மிக மிக முக்கியமானது:

கடைசிவாப்பு என்னும் தலைப்பில் எழுதிய ஆசிரிய தலையங்கத்தில் போர் நிறுத்தம் என்ற கோரிக்கையை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான விடயமாக இலங்கை அரசு கருதக்கூடும். ஆனால், தமிழர்களைப் பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயர்வதை உலக நாடுகள் அனைத்தும் மனிதநேயமாக மட்டுமே பார்க்கும். இவர்கள் இடம்பெயர்வதற்கு ஓரிரு வாரம் போர் நிறுத்தம் அவசியம். இதைச் செது முடிக்க தமிழக அரசு தனது அரசியல் பலத்தைக் காட்டாவிட்டால் பிறகு அதற்கு வாப்பே இல்லாமல் போகும். இதெல்லாம் தெரிந்தும் வாமூடி மௌனம் சாதித்து கடைசி வாப்பையும் நழுவவிட்டு விட்டு ஈழத் தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்து தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களை "ஏ தாழ்ந்த தமிழகமே...' நீ தாங்கிக் கொள்வாயா! என்று கூறியுள்ளது. இந்த மேற்கோளில் வரும் "தாழ்ந்த தமிழகமே' என்ற சொற்தொடர் முதல்வரை நோக்கிய பலமான கிண்டலாகும்.

தி.மு.க.வின் தொடக்க காலத்தில் அண்ணா உட்பட்ட தி.மு.க.தலைவர்கள் அடிக்கடி பயன்படுத்திய சொற்தொடர் தாழ்ந்த தமிழகமே என்பதுதான். உண்மையில் கலைஞர் செயல்திறனுடன் எதனையும் செயவில்லையென ஒரு சாட்டைச் சொடுக்குடன் கூறுவதுபோல் உள்ளது. இது ஒரு புறமாக மறுபுறத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் உண்ணாவிரதப் போர், அதிலும் பார்க்க, சி.பி.ஐ.யின் பாண்டியனுடைய ஆவேசமான தாக்குதல் உண்மையான தமிழக மனநிலையை எடுத்துக் காட்டுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழக, இந்திய மட்டத்தில் அண்மைக்கால தமிழக அவலத்தை முன்னிலைப்படுத்தியது. சி.பி.எம்.மாக்ஸிட், பொதுவுடமைக் கட்சி, பொதுவாக இத்தகைய விடயங்களில் அபரிமிதமான நிதானம் கவனத்தைச் செலுத்த விரும்புவது அது இலங்கைத் தமிழ் மக்களின் இன்னல்களை அழுத்தமாகக் கூறியுள்ளது.

இவ்வாறாக தமிழகத்தின் எல்லா மட்டங்களிலும் பதிற்குறிகள் ஏற்படத் தொடங்கி சில இடங்களில் பஸ் எரிப்பு போன்ற வன்முறைச் சம்பவங்கள் ஏற்படத் தொடங்கவே தமிழக அரசினால் இவற்றைப் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருப்பது தி.மு.க.வுக்கு பலத்த சிக்கலை ஏற்படுத்திற்று.

கருணாநிதி ஏற்கனவே கூட்டுக் குழுவை அமைத்து அந்த கூட்டுக் குழுவுடன் டில்லி சென்று வந்தார். அதனைச் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. சிவ்சங்கர் மேனனின் இலங்கை வருகையிலும் வரும் பொழுதோ திரும்பிச் செல்லும் போதோ அவர் சென்னைக்கு வராது சென்றமை கருணாநிதியின் கௌரவத்தை வெகுவாக பாதித்த விடயம் என்பதை அழுத்திக்கூற வேண்டும்.

இலங்கைத் தமிழர் அவல விடயத்தில் மற்றைய கட்சிகளின் முதன்மைக்கு இடங்கொடாது அவற்றை தனதாக்கிக் கொண்டு தனக்கேயுள்ள சில வழிகளில் (கவிதை எழுதல், மடல் தீட்டுதல்) பேசிக் கொண்டிருந்தார் கலைஞர். டில்லி அரசாங்கத்தின் நடத்தை ஏறத்தாழ ஒரு புறக்கணிப்பாகவே அமைந்தது எனலாம்.

இந்த நெருக்குவார சூழலில் தினமணி போன்ற பத்திரிகை கிண்டல் நிறைந்த கண்டிப்புகளை எழுத கருணாநிதி தனது நிலையைப் பேண வேண்டியது அவசியமாயிற்று.

இலங்கைத் தமிழர் அவல விடயத்தை தனது கட்சியினுடைய ஈடுபாட்டுப் பொருளாகக் கொண்ட அவருக்கு டில்லியின் நடத்தைகள் மௌன அடிகளாகவே விழுந்தன. சிவ்சங்கர் மேனன் இந்தியா சென்ற பின்னர், இந்த விடயம் பற்றியே பேசவில்லை.

கருணாநிதி மீது பலத்த அடிவிழுந்தது போன்ற நிலைமையாகிவிட்டது! அவர் தன் இருப்பை தமிழகத்தில் நிலைநிறுத்திக் கொள்வதுடன் டில்லிக்கு தனது பலத்த அதிருப்தியைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

உடனடியாக சட்டமன்ற கூட்டத்தை ஏற்பாடு செது அதிலே தீர்மானமொன்றை நிறைவேற்றினார். தமிழக சட்டமன்றம் இலங்கைத் தமிழர் பற்றிப் பேசிய இரண்டாவது தடவை இதுவாகும். கருணாநிதி அந்த சட்டசபைக் கூட்டத் தீர்மானத்தை தனது இறுதி வேண்டுகோளாக முன்வைத்தார். இங்கும் இறுதி வேண்டுகோள் என்னும் சொற்தொடர் மிக மிக முக்கியமானதாகும்.

இறுதி வேண்டுகோள் என்பது டில்லிக்கான வேண்டுகோளாகும். இந்த வேண்டுகோளையும் டில்லி ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் என்ன செவீர்கள் என்று கேட்டதற்கு அதற்கான பதிலைக் கூறும்பொழுது அப்படி அவர்கள் கவனிக்காது விட்டால் தி.மு.க. செயற்குழுவைக் கூட்டி தி.மு.க.முடிவெடுக்கும் என்று கூறினார். இலங்கையில் போர்நிறுத்தம் இப்பொழுது கருணாநிதிக்கு அரசியல் தேவையாகியுள்ளது. இது அண்மைக்கால இலங்கைத் தமிழர்கள் அவலம் ஏற்படுத்திய முக்கிய தாக்கமாகும்.

இத்தகைய சூழலிலேதான் தமிழகத்தின் பாரம்பரியமான சமூக பிளவு தலைதூக்கும். அதாவது, பிராமணர் பிராமணரல்லாதோர் என்ற நிலைமை ஏற்படும். பிராமணர் அல்லாதோருக்கு வன்னித் தமிழ் மக்களின் இன்றைய நிலை முக்கியமாகும். ஆனால் சி.பி.எம்.முடைய தீர்மானம் இலங்கைத் தமிழர் அவலத்தை (மாக்ஸிட் பொதுவுடமை கட்சி) அதனைக் கண்டிப்பது இந்த வட்டத்துக்கு மேலே இதனை முழு தமிழகத்தினதும் பிரச்சினையாகின்றது. தினமணியின் தலையங்கம் முழுத் தமிழகத்தினதும் அங்கலாப்பினை எடுத்துக் காட்டுவதாகவேயுள்ளது.

இந்த நிலை இலங்கைத் தமிழ் மக்கள் மீதும் தமிழ்த் தலைமைகள் மீதும் பாரிய பொறுப்பை ஏற்படுத்துகின்றது. அடிக்கடி இப்பத்தியிலே கூறுவதை மீண்டும் அழுத்திக் கூறவேண்டியுள்ளது. இது இலங்கையில் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அந்தஸ்து, அரசியல் நிலைமை பற்றியதாகும். இது முற்றுமுழுதான அரசியல் பிரச்சினை. அரசியல் பிரச்சினைகளை அரசியல் நிதானத்துடன் அணுகுதல் அவசியம். நிலம் நிலைப்பட்ட அதிகாரப்பிரச்சினை யுத்த நடவடிக்கைகளால் மாத்திரம் தீர்மானிக்கப்படுவதில்லை. போருக்கு யுத்தவலு அவசியமெனினும் இந்த உரிமைப் போராட்டத்தில் சரியான அரசியல் நோக்கே வலுவான சுக்கான் ஆகும்.

பீஷ்மர்

Comments