மனிதாபிமான அடிப்படையிலான போர்நிறுத்தத்திற்கு ஜேர்மனி அழைப்பு

இலங்கை தீவில் உடனடியாக மனிதாபிமான ரீதியில் யுத்தநிறுத்த்தை ஏற்படுத்தி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வதியும் மூன்று இலட்சம் மக்களுக்கு உதவிப்பணிகள் சென்றடைய ஆவன செய்யவேண்டும் என்று ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் மதிப்புக்குரிய திரு.பிராங் வோல்ட்ரர் ஸ்ரெயின்மேயர் அழைப்பு விடுத்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் பிராந்தியத்தில் உள்ள மூன்று இலட்சம் பொதுமக்களுக்கும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உதவிகள் சென்றடையாத நிலையையிட்டு தான் கவனம் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் மிக முக்கியமாக இப்போது நாம் செய்யவேண்டியது போர்நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையும் மருத்துவ மற்றும் உதவிப்பொருட்கள் போர்பிராந்தியத்திற்கு அனுப்பப்படுதலுக்கான ஏற்பாடும் ஆகும் என்றும் தெரிவித்தார்.



Comments