தமிழர் திருநாளில் உறுதி கூறுவோம் எம் உறவுகளைக் காப்போம்



இலட்சிய வெற்றிவரை ஓயோம் கனடியத் தமிழர் அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து வெளியிட்டுள்ள அவசர அறிக்கை

தை பிறந்துள்ளது. உழவர் திருநாளாம் பொங்கல் மட்டுமல்ல, உலகில் பழைமை வாய்ந்த தொன்மையான தமிழினத்தின் புத்தாண்டும் கூட. ஆனால் பொங்கிப் பிரவகித்து, கூடிக் குதூதுகலிக்க எம்மால் முடியவில்லையே! ஏம் உறவுகள் ஈழத்தில் வாழ்வுக்காக ஒரு குருதியாற்றையே கடந்து கொண்டிருக்கிறார்களே! எம்மால் எப்படி முடியும்? உலகின் எட்டுக்கோடி தமிழினமும் தம் தொப்பூழ் கொடி உறவின் நிலை கண்டு தவித்து நிற்கிறதே! தை பிறந்தால் தமிழர் வாழ்வில் வழிபிறக்கும் என நம்பிக்கை கொள்பவர்கள் நாம். ஏம் உறவுகளின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றுவோம்.

அவர்களின் பேரவலத்திற்கு மருந்தாவோம். அதற்காக விரைந்து அனைத்தையும் செய்வோம் என உறுதி கொள்வோம். ஈழத்தமிழன் கேட்பது பிச்சையல்ல. உரிமை வாழ்வை. அவனது உண்மைக்கான போராட்டம், சத்தியத்திற்கான போராட்டம். உரிமைக்கான போராட்டம். அது வென்றேயாக வேண்டும். அது தான் உலக வரலாறு. தமிழன் விடயத்தில் இதனை உலகம் எதிர்த்தாலும், மிதித்தாலும், எட்டு கோடி தமிழர் நாம் இருக்கின்றோம். துணை நிற்போம்.உலகில் புதிய சர்வாதிகார ஆட்சியின் நாயகனே! சிங்கள இனவெறி ஆக்கிரமிப்பு அழிப்பின் கொடுன்கோலனே, ராசபக்ச, உன்னை உன் கூட்டத்தையும், உங்கள் நோக்கையும் தமிழினம் முழுமையாக அறியும்.

உன்னைப் பார்த்து, உன் வார்த்தைகளை நம்பி உலகம் மயங்கலாம், ஆனால் தேர்ந்து தெளிந்த தமிழினம், ஈழத்தில் மட்டுமல்ல உலகின் எட்டுத் திசைகளிலும் தெளிவாகவே உள்ளது.உன் கொடிய தமிழின அழிப்புப்போரை நிறுத்து, ஈழத்தமிழர்களின் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்ட தாயகம், தேசியம், சுயநிர்ணயத்தை ஏற்று இலங்கைத்தீவில் அமைதி வாழ்விற்கு அனுமதி என உலகத்தமிழினம் இறுதியாக மீண்டும் வேண்டுகிறது.ஏம் தொப்புழ் கொடி உறவுகளே! கடந்த சில மாதங்களாக தாய் தமிழகத்திலும், தமிழர் வாழும் தேசங்களிலெல்லாம் நீங்கள் எட்டுக்கோடி பேரும் ஈழத்தமிழ் மக்களை நோக்கிக் காட்டும் ஒன்றுபட்ட எழுச்சி கனடிய தமிழ் மக்களாகிய எமக்கு நிறைவு தருகின்றது. எனினும், எம்முடைய முயற்சி முழுமையான வெற்றிபெற நாம் மேலும் இரண்டு மடங்கு கடுமையாக உழைக்கவேண்டும் என்பதே ஈழத்தில் எமது உறவுகளின் பேரவலம் சொல்லும் இன்றைய செய்தி.

தமிழர் தலைவர்களே! முதல்வர் கலைஞரே, அறிக்கைகளும் கவிதைகளும் ஈழத்தமிழர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை மாறாக மேலும் பேரவலத்தை அனுமதித்துள்ளது என்பதே இன்றைய யதார்த்தம். மேலும் தாமதியோம். ஓன்றுபட்ட இனமாக, ஓர்மம் கொண்ட மக்களாக காலத்தின் தேவைகருதிய காத்திரமான முடிவுகளை தமிழுக்காக, தமிழருக்காக உடன் எடுப்போம், விரைந்து செயற்படுவோம் என உறுதி கொள்வோம். செயலாற்றுவோம்.மனித குலத்தின் சீரிய வாழ்வே எமது விருப்பு எனக்கூறி விலங்குகளுக்கே சட்டம்போட்டுக் காக்கும் சர்வ உலகமே, உனக்கு ஈழத்தமிழினத்தின் அழிப்பில் மட்டும் ஏன் இந்தப் பெருமகிழ்ச்சி? கூடவே கொலையாளியுடன் கைகோத்து படுகொலைக்கு வேறு உடந்கை.

அதிலும் காந்திதேசத்தில் இருந்துமா இந்தத் துரோகம்? வேண்டாம் இந்த இரட்டை வேடம்;. ஈழத்தமிழினத்தின் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்ட உரிமைகளை உடன் அங்கீகரியுங்கள். கொடுங்கோல் சிங்கள ஆட்சியைப் புறம் தள்ளுங்கள்.எட்டுக்கோடி தொப்புழ் கொடி உறவுகளே! தமிழர் இல்லாத தேசம் இல்லை இன்று. ஆனால் தமிழருக்கொன்றொரு தேசம் இல்லாமையால் தெரு நாய்களிலும் கேவலமாகியுள்ளது எம் வாழ்வு. வேண்டாம் இவ்இழிநிலை. ஈழத்தில் எம் உறவுகளைக் காப்போம். அவர் தம் வாழ்வியலை நிமிர்த்துவோம். உறுதியான தமிழர் தேசமாக நிலைநிறுத்துவோம். எம் இனத்திற்காக வாழ்வையே துறக்கும் வீரமா மறவர்களை என்றும் நினைவில் கொள்வோம்.

அவர்தம் கரங்களைப்பற்றி உறுதிகொள்வோம். கனடியத் தமிழ் மக்கள் நாம,; உங்கள் அனைவருடனும் இணைந்து இன்றைய தமிழர் திருநாளில் உறுதிகொள்கின்றோம். இலட்சிய வெற்றிவரை ஓயோம் நாம்.அறிக்கையில் இணைந்து கொள்ளும் கனடிய தமிழர் அமைப்புக்கள்:

1. துன்னாலை கரவை மக்கள் ஒன்றியம்
2. கனடியத் தமிழர் மையம்
3. வட்டுக்கோட்டை மூளாய் வீதி ஒன்றியம்
4. சுழிபுரம் கிராம ஒன்றியம்
5. மதங்க சூலாமணி கலைக்கோயில்
6. கனடிய தமிழர் விளையாட்டுத்துறை
7. சதங்கை நத்தனாலயம்
8. மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம்
9. நெல்லியடி மத்திய மகாவித்தியாலம் பழைய மாணவர் சங்கம்
10. உருத்திரபுரம் உதவும் கரங்கள்
11. தமிழ் இளையோர் அமைப்பு
12. வதிரி மக்கள் மன்றம்
13. இன்டோ கனடா டான்ஸ் அகடமி
14. அபிநயாலய நாட்டியாலயம்
15. நாட்டியா அபிநய சமப்பண கலைக்கூடம்
16. பருத்தித்துறை ஒன்றியம்
17. வரணி ஒன்றியம் இ
18. ராமநாதபுரம் மக்கள் ஒன்றியம்
19. முரசுமோட்டை-கண்டாவளை மக்கள் ஒன்றியம்
20. கெருடாவில் மக்கள் ஒன்றியம்
21. மட்டக்களப்பு நலன்புரிச்சங்கம்
22. தமிழர் தகவல் நிலையம்
23. கனேடிய வதிரி மக்கள் மன்றம்
24. உருத்திரபுரம் அபிவிருத்திக் கழகம்
25. டூறம் தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம்
26. மட்டுவில் வளர்மதி இளைஞர் ஒன்றியம்
27. யோர்க் கலைப்பண்பாட்டு கழகம்
28. அனலைதீவு கலாச்சார ஒன்றியம்
29. திருகோணமலை நலன்புரிச்சங்கம்
30. கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் - ரொரன்ரோ
31. கனடா மாதகல் நலன்புரிச்சங்கம்
32. டூறம் தமிழ் ஒன்றியம் நல்லூர்
33. மேம்பாட்டுச்சபை
34. வேலணை மத்திய மகாவித்தியாலயம்
35. நயானாதீவு கனடய அபிவிருத்திச் சங்கம்
36. கரவெட்டி ஒன்றியம்
37. கலைக்கோயில் நுண்கலைக்கல்லூரி
38. காவியாலய நடனப்பள்ளி
39. சிதம்பர கலைமன்ற நாட்டியாலயா
40. மண்டைதீவு மக்கள் ஒன்றியம்
41. கனடா காரை கலாச்சார மன்றம்
42. மயிலிட்டி மக்கள் மன்றம்
43. வல்வெட்டி மக்கள் ஒன்றியம்
44. ஊரெழு மக்கள் ஒருங்கிணைப்புக் கழகம்
45. பீல் கலைப்பண்பாட்டு கழகம்
46. கனடா சாவகச்சேரி நட்புறவுச் சங்கம்
47. கொக்குவில் இந்துக்கல்லூரி
48. பழைய மாணவர் சங்கம்
49. பூநகரி சமூக அபிவிருத்தி ஒன்றியம்
50. நெல்லியடி மக்கள் ஒன்றியம்
51. சண்டிலிப்பாய் ஐக்கிய சங்கம்
52. வட்டக்கச்சி ஒன்றியம்
54. தொண்டைமானாறு மக்கள் ஒன்றியம்
55. அளவெட்டி மக்கள் ஒன்றியம்
56. சென் கென்றீஸ் பமைய மாணவர் சங்கம் - இளவாலை
57. தென்மராட்சி சேவை நிறுவனம்
58. இராமநாதன் கல்லூரி பழைய மாணவர் சங்கம்
59. ஸ்காபுரோ கலைப்பண்பாட்டு கழகம்
60. கைதடி மக்கள் நலன்புரிக்கழகம் - கனடா
61. நாரந்தனை மக்கள் ஒன்றியம் - கனடா
62. உடுப்பிட்டி நலன்புரிச்சங்கம்
63. சிலம்பொலி நாட்டியாலயம்
64. பாலவிமல நர்த்தனலயம்
65. நித்திய கலாஞ்சலி கலைக்கல்லூரி
66. கைதடி பாடசாலை முன்னேற்றச் சங்கம்
67. துணுக்காய் பாண்டியன்குளம் மக்கள் ஒன்றியம்
68. கரம்பன் சமூகநாத வித்தியாலய பழைய மாணவர் சங்கம்
69. அரியாலை ஒன்றியம் வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கம்
70. கோண்டாவில் கலைமகள் ஒன்றியம்
71. காட்லிக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்
72. சரவணை சேவா மன்றம்
73. பாடுமீன்களின் பொழுது
74. கனடிய தமிழ் இளையோர் முன்னேற்ற நிலையம்
75. தென் கோப்பாய் ஐக்கிய மன்றம்
76. கனடா தமிழ் கலைஞர்கள் சங்கம்
77. இணுவில் திருவூர் ஒன்றியம்
78. திலக நர்த்தனாலயம்
79. ரொரன்ரோ மத்தி கலைப்பண்பாட்டு கழகம்
80. வர்ண இசை நுண்கலைகூடம்
81. தென்மராட்சி சேவை நிறுவனம்
82. கனடிய தமிழ் மகளீர் மாமன்றம்
83. கனடா தமிழீழ மாலுமிகள் சங்கம்
84. கோண்டாவில் குமர கோட்டம்
85. முல்லை மாவட்ட மக்கள் ஒன்றியம்
86. அல்லாய் மக்கள் ஒன்றியம்
87. தரதாலய நாட்டியப்பள்ளி
88. குருநகர் சமூக சேவை அமைப்பு - கனடா
89. மட்டுவில் நலன்புரிச்சங்கம்
90. கனடிய புத்தூர் வாழ் மக்கள்
91. ஆனைக்கோட்டை அடைக்கல மாதா கோவில் பங்கு மக்கள் ஒன்றியம்

மேலும் பல அமைப்புக்கள் மேலதிக விபரம் விரைவில்....


Comments