101 வயது "பயங்கரவாதி"; வயோதிபர் இல்லத்தை தாக்கியது சிறிலங்கா: வன்னியில் இன்று 55 தமிழர்கள் படுகொலை

சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் நான்கு மூதாதையர்கள் உட்பட 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 109 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மூதாளர் பேணலகம்

"அன்புச்சோலை மூதாளர் பேணலக"த்தின் மீது இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 4 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வள்ளி ஆச்சி (வயது 99)

கறுப்பையா (வயது 101)

பொன்னம்மா (வயது 80)

இளையபிள்ளை (வயது 86)

ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

வேலாச்சி (வயது 97)

செல்லையா (வயது 98)

பழனி (வயது 79)

கிருஸ்ணன் (வயது 80)

இராஜேஸ்வரி (வயது 67)

பராமரிப்பாளரான கருணாகரன் (வயது 35)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

புதுமாத்தளன் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிக்குள் இருந்த அன்புச்சோலை மூதாளர் பேணலகம் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீது வேவு பார்த்து தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் சுற்றயல் பகுதிகளில் இன்று சிறிலங்கா வான் படையினர் பொதுமக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தேவிபுரம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் மீது இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 98 பேர் படுகாயங்களுக்கும், எரிகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை நோட்டம் பார்த்து சிறிலங்கா வான்படை வேவு வானூர்தி அடையாளம் காட்டிய போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால்

"மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை 10:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

அன்புச்சோலை மூதாளர் பேணலகம்

இரத்த உரித்துகள் எவரும் இல்லாமல் கைவிடப்பட்ட மூதாளர்களைப் பராமரிக்கும் ''அன்புச்சோலை மூதாளர் பேணலகம்'' மீது சிறீலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நான்கு மூதாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து மூதாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். குறித்த மூதாளர் பேணலகம் சிறீலங்காப் படையினரால் புதிதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தியமான புதுமாத்தளன் பகுதியில் அமைந்திருந்த போதும் அப்பகுதி முழுவதும் படையினர் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொல்லப்பட்ட மூதாளர்கள்

வள்ளி ஆச்சி (வயது 99)

கறுப்பையா (வயது 101)

பொன்னம்மா (வயது 80)

இளையபிள்ளை (வயது 86)

படுகாயமடைந்த மூதாளர்கள்

வேலாச்சி (வயது 97)

செல்லையா (வயது 98)

பழனி (வயது 79)

கிருஸ்ணன் (வயது 80)

இராஜேஸ்வரி (வயது 67)

பராமரிப்பாளரான கருணாகரன் (வயது 35)

புதுக்குடியிருப்பு

புதுக்குடியிருப்பு மக்கள் பகுதி மீது சிறீலங்கா வான்படையினரின் வேவு வானூர்தி இலக்குகளை வழங்க மக்கள் மீது சிறீலங்கா வான்படையினர் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தேவிபுரம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு

தேவிபுரம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் சிறீலங்காப் படையினர் ஏவிய எறிகணைத் தாக்குதல்களில் 36 தமிழர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் 98 தமிழர்கள் எரிகாயமடைந்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால்


மக்கள் பாதுகாப்பு வலமாக பிரகடனப்படுத்தப்பட்ட முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினர் நடத்திய வான் தாக்குதல்களில் 3 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.



Comments