சிறிலங்காவின் கோரத் தாக்குதலில் வன்னியில் நேற்று 44 தமிழர்கள் படுகொலை; 170 பேருக்கு காயம்

வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய அகோர எறிகணைத் தாக்குதலில் 44 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 170 காயமடைந்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9:40 நிமிடம் தொடக்கம் 10:40 நிமிடம் வரை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியில் உள்ள முள்ளிவாய்க்கால்- பொக்கணை- மாத்தளன் பகுதிகளில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 19 தமிழர்களும், இரணைப்பாலை- ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 13 தமிழர்களும் கொல்லப்பட்டுள்ளதுடன் 98 பேர் காயமடைந்துள்ளனர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

கொல்லப்பட்டவர்களில் அக்கராயன் பலநோக்கு கூட்டுறவுச் சங்க களஞ்சிய முகாமையாளரான 3 பிள்ளைகளின் தந்தை கணபதிப்பிள்ளை பரமாநந்தம் என்பவரும் அடங்குகின்றார்.

மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத நிலையில் பல உடலங்கள் உள்ளன. அடையாளம் காணப்பட்ட சிலரின் விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கிறேசியன் கியுர்தன் (வயது 08)

செல்வரட்ணம் நிதுர்சிகா (வயது 11)

கிருபாகரன் மல்லிகா (வயது 47)

சதாசிவம் ஆறுமுகநாதன்

சத்தியாப்பிள்ளை கிரேசியன் (வயது 32)

கந்தையா லட்சுமி (வயது 70)

நல்லநாதன் மாதவி (வயது 34)

கிருபாகரன் (வயது 47)

ஆகியோரின் உடலங்கள் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியான வலைஞர் மடத்தில் மட்டும் நேற்று இரவு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 72 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தோரில் -

சிறீஸ்கந்தராசா சதீஸ்குமார் (வயது 26 )

இராஜசேகரம் சித்திவிநாயகம் (வயது 68)

பரணிரூபசிங்கம் பாலநடேசன் (வயது 72)

கணபதிப்பிள்ளை சோமசுந்தரம் (வயது 51)

சிவராசா சுகிர்தன் (வயது 36)

சிவலோகநாதன் கீர்த்தனா (வயது 10)

பொன்னம்பலம் சச்சிதானந்தன் (வயது 59)

குமணன் குமனசாந்தி (வயது 32)

புசலவன் புஸ்பராணி (வயது 28)

கந்தையா சுபாகரன் (வயது 40)

நடராஜா யோகமலர் (வயது 59)

இராசையா யோகேஸ்வரி (வயது 17)

கருணாநிதி யோகேஸ்வரி (வயது 32)

இரத்தினசிங்கம் கருனாநிதி (வயது 32)

பாலசிங்கம் பாலகுமார் (வயது 37)

றொபேர்ட் சேமேஸ்வரி

சுப்பிரமணியம் லட்சுமி (வயது 60)

சரவணமுத்து பரமேஸ்வரி (வயது 47)

குணலிங்கம் இன்பத்தேவன் (வயது 23)

சந்திரசேரம் சந்திரா (வயது 50)

கலைச்செல்வன் நிசாந்தினி (வயது 24)

நடேசன் பிரதீபா (வயது 24)

சௌதாமணி (வயது 55)

நடேசன் ராஜேஸ்வரி (வயது 65)

புஸ்பரசா தனுஜன் (வயது 14)

வடிவேல் கதிர்காமநாதன் (வயது 60)

புஸ்பராசா அருள்தாஸ் (வயது 13)

கதிர்வேல் தேவதாசன் (வயது 27)

நடேசப்பிள்ளை சிவகுமார் (வயது 34)

நடேசப்பிள்ளை யோககுமார் (வயது 32)

சின்னையா (வயது 50)

கோபால் செல்வநாயகி (வயது 32)

கோபால் பூபதி (வயது 67)

ராஜன் வள்ளியம்மா (வயது 57)

சின்னையா சூரியகுமார் (வயது 38)

செல்வராசா வசீகரன் (வயது 34)

சின்னையா இரத்தினம் (வயது 50)

பாக்கியநாதன்

றஞ்சன் வரதராசா (வயது 29)

வரதராசா விமலாதேவி (வயது 29)

நந்தகோபால் சரஸ்வதி (வயது 46)

ஜெயரட்ணம் கலைமகள் (வயது 04)

கார்த்திகேசு சிவலிங்கம் (வயது 57)

செல்லம் துரைராசா (வயது 45)

சோமபாலன் மகேந்திரம் (வயது 23)

மகேந்திரன் யுவராணி (வயது 22)

பொன்னம்பலம் பத்மநாதன் (வயது 36)

பத்மநாதன் சுதர்சன் (வயது 12)

ஆரோக்கியநாதன் அருளப்பு (வயது 67)

கிருஸ்ணன் பத்மபூசனி (வயது 35)

இரத்தினசிங்கம் வசந்தராசா (வயது 27)

கிருஸ்ணன் ஜெசீரன்

பத்மநாதன் செல்வமதி (வயது 26)

ஜெகநாதன் கஜேந்தினி

ஜெசீரன் பத்மலோஜினி (வயது 24)

வைரவநாதன் மாரியம்மா (வயது 48)

செல்வரத்தினம் மகாலட்சுமி

சிவலிங்கம் சிந்து (வயது 05)

சிவலிங்கம் ஜெலதா (வயது 30)

விஜபாலன் கரன்திவியா (வயது 07)

ஜோசப்மோகன் ரோகினி (வயது 36)

ஞானசீலன் நிவேதனா (வயது 18)

கிருகாபரன் மல்லிகா (வயது 47)

சிதம்பரநாதன் லதுசிகா (வயது 13)

சிவஞானம் மயூரன் (வயது 20)

சதாசிவம் நவமணி (வயது 45)

யோகேஸ் உசாநந்தினி (வயது 34)

பொன்னுத்துரை வரதராணி

விநாசித்தம்பி ஜெகதீஸ்வரன் (வயது 45)

க.வெற்றி (வயது 42)

முருகையா யோகேஸ் (வயது 37)

சிறீஸ்கந்தராசா சதீஸ்குமார் (வயது 26)

தாமோதரம்பிள்ளை ரவிகரன் (வயது 35)

சுப்பையா பொன்னையா (வயது 52)

ஆகியோரின் விவரங்கள் கிடைத்துள்ளன.

அதேவேளை, மாத்தளன் பகுதியில் இன்று சனிக்கிழமை முற்பகல் 11:00 மணியவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 சிறுவர்கள் இருவர் உடல் கருகிய நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.


Comments