புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தொடர்ந்து எறிகணை தாக்குதல் நோயாளர்கள் அவசர அவசரமாக வெளியேறுகின்றனர் - ஐ.சி.ஆர்.சி


சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு வலயம் என தெரிவித்த புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தொடர்ந்து எறிகணை தாக்குதல் நோயாளர்கள் அவசர அவசரமாக வெளியேறுகின்றனர் என ஐ.சி.ஆர்.சி பேச்சாளர் சரசி விஜயரெட்ண தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் பலர் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பேச்சாளார் சரசியும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்

சர்வதே மனிதாபிமான விதிகளுக்கு அமைவாக மருத்துமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என்றும் ஆனால் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படுவது வேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய பாதுகாப்பு உத்தரவாதத்தை அடுத்தே தொடர்ந்தும் மருத்துவமனையில் தங்கியிருக்க தாங்கள் முடிவு செய்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய தகவல்களின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நோயாளர்களும் படையினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரியவந்துள்ளது

Comments

Anonymous said…
Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team