Samooka Neethi Thamizh Thesam
அன்னைத் தமிழீழம் அறைகூவி அழைக்கிறது

தமிழீழம் தன் விடுதலைப் போர் வரலாற்றில் மிக நெருக்கடியான காலப்பகுதியின் ஊடாகப் பயணிக்கிறது. 1917இல் உலகின் முதல் சோசலிசப் புரட்சியை நடத்திய சோவியத்து நாட்டு மக்கள் சந்தித்த நெருக்கடியை, தமிழீழ மக்கள் இன்று எதிர்கொண்டு நிற்கின்றனர். 1917இல் புதிதாக உருவாகிய இளம் சோசலிச நாட்டையும் அதன் தலைவர் வி.இ. லெனினையும் உலக வல்லாதிக்க நாடுகளின் இராணுவம் முற்றுகையிட்டு அழித்து விட முனைந்த பொழுது, தேசிய இனங்களின் விடுதலைக்கு இலக்கணம் வகுத்துச் செயல்படுத்திய மாபெரும் தத்துவத் தலைவர் லெனின் சோவியத்து மக்களுக்கு ‘அன்னை நாடு’ அழைக்கிறது என்ற அழைப்பை விடுத்தார்.

இன்று தமிழீழம் அதே நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. உலக வல்லா திக்க நாடுகளின் இராணுவத் தளவாடங்கள், ஆலோசனைகள் ஒரு புறமும், தென் ஆசிய வல்லரசாகத் துடிக்கும் இந்தியப் பேரரசு மறுபுறமும் தமிழீழத்தை உலக வரைபடத் திலிருந்து துடைத்து விட, 21ஆம் நூற்றாண்டின் அனைத்து வகையான நவீன இராணுவ சாதனங்களையும் போரியல் உத்திகளையும் செயற்கைக்கோள் வழி இராணுவ உளவுத் தகவல் களையும் சிங்களப் பேரினவாத அரசுக்கு வழங்கி வழிகாட்டி நிற்கின்றன.

21ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் பல்வேறு தேசிய இனங்கள் (கூடுதலாக இந்தியத் துணைக் கண்டத்தில்) தங்களின் தேசிய இன விடுதலைக்கு வழிதேடும் அரசியல் நெருக்கடியில் சிக் குண்டு கிடக்கும் வேளையில், ஒரு தேசிய இனம் பெருந் தேசிய இனத்தின் இராணுவ அழிப்பிலிருந்து விடுபடவும் அதன் அரசியல் பொருண் மியப் பண்பாட்டு விழுமியங் களைப் பாதுகாத்துக் கொள்ளவும் வீரஞ் செறிந்த ஆயுதப் போராட்டம் வழிதிறக்கும் என்பதை நிரூபிக்கும் நிலையில் தமிழீழம் உயர்ந்து நிற்பதை, தேசிய இனங்களின் விடுதலையை ஏற்காத, தேசிய இனங்களை ஒடுக்கும் அனைத்து நாடுகளும் எதிர்த்து நிற்கின்றன. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத் தேசிய இனங்களின் விடுதலை வரலாற்றுக்குரிய வழியைக் காலம் தமிழீழத்தின் தலையில் சுமத்தியுள்ளது.

தமிழீழம் ஒரு சின்னஞ்சிறிய நாடு. அதுவும் அதன் பிறப்புக் காலம் தொட்டு எண்ணற்ற இராணுவ முற்றுகைகளை உடைத்து, மனிதப் பேரவலத்தை எதிர்கொண்டு, எந்தச் சூழலிலும் விடுதலைப் போரைக் கைவிடோம் என்று முழக்கமிட்டு நிற்கும் நிலையில் தமிழீழ விடுதலைப் போர் வீரன் சிங்களப் பேரினவாத அரசின் பாசிசப் படையாளை மட்டும் எதிர்த்து நிற்கவில்லை. உலகம் முழுவதும் உள்ள இன ஒடுக்குமுறையாளர் களின் இராணுவத் தாக்குதலுக்கு ஒரு முனையில் முகம் கொடுத்துப் போரிடுகிறான் என்பதுதான் உண்மை. தேசிய இன விடுதலைக்குரிய வழியை எட்டிய தமிழீழம் அதற்குரிய விலையையும் வழங்கி நிற்கிறது. எந்த ஒரு நாட்டின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவும் இன்றி புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் அளப்பரிய பங்களிப்பில்தான் தமிழீழம் உயிர் வாழ்கின்றது. களத்தில் நிற்கும் தமிழீழ விடுதலைப் போராளிகள் உலகில் அண்மை யில் விடை காண முடியாத ஒரு வினாவிற்கு விடை தேடிப் போரிடுகிறார்கள்.

எந்த ஒரு நாட்டின் நேரடி யான இராணுவத் தளவாட உதவியுமின்றி, பொருள் உதவியுமின்றி ஒரு பேரின வாதப் பாசிசப் படையினரை, அதுவும் உலக நாடுகளின் அனைத்து வகையான முட்டுக் கொடுப்புகளுடன் எதிர்நிற் கும் படையினரை வென்று விட முடியுமா? என்ற வினா விற்குத் தமிழீழ விடுதலைப் போர் வீரன் தன் குருதியால் விடை எழுதிக் கொண்டு நிற் கிறான். இதில் கண்ணீர் விட, கசிந்து உருக ஏதும் இல்லை.

இட்லரின் கொடிய நாசிப் படைகள் கூட போரில் மரண முற்ற பெண்களைப் புணர்ந்த தாக வரலாறு இல்லை. சிங்களப் பேரினவாத பாசிசப் படைகளின் இவ்வித ஈனத் தனமான செயலை உலகில் நியாயம் தேடும் எந்த ஊடகங்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. பிரபாகரன் எங்கே, பிரபா கரன் பதுங்கு குழியில் குண்டு மழை, பிரபாகரன் பிடிபடு வார் என்றெல்லாம் தலைப் பிடும் எந்தத் தமிழ்நாட்டு நாளிதழும் இக்கொடுமை யைக் கண்டுகொள்ள வில்லை. வீரஞ் செறிந்த ஒரு தேசிய இனத்தின் தலைவரை கொச்சைப்படுத்துவ தில் பேரார்வம் காட்டும் தமிழகப் பார்ப்பன நாளிதழ்கள் ஈழத் தமிழர்களின் அவலம் பற்றிக் கண்டு கொள்ளாததில் வியப்பொன்றும் இல்லை. பிணத்தைப் புணர்ந்த சிங்களப் படையினரை விட தமிழகப் பார்ப்பன ஊடகர்கள் பேராபத்தானவர்கள்.

ஓர் இனத்தின் விடுதலைப் போர் வரலாறு எந்தத் தனிமனிதர்களுடனும், எந்தத் தலைமுறை யினருடனும் முடிந்து விடாது. விடுதலையைப் பெற்றால் அன்றி விடுதலைப் போர் முடிவுறாது. வருங்காலத் தமிழீழ வரலாறு சிங்களப் பேரினவாதத்திற்கு இதனைப் புரிய வைக்கும்.

-அமரன்-

Comments