படையிரால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் படையினரது எறிகணையில் பொதுமக்கள் 105 பேர் பலி

வன்னியில் சிறீலங்கா படையினரால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் சிறீலங்கா படையினராலேயே கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சிறார்கள் உட்பட பொதுமக்கள் 105 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தில் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் பொதுமக்கள் 49 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

புதுமாத்தளனில் பொதுமக்களில் தற்காலிய தரப்பாழ்கள் மீது வீழ்ந்த எறிகணையில் 6 தரப்பாழ்களுக்குள் தங்கியிருந்த மக்களில் 16 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதேபோன்று அனைத்துல செஞ்சிலுவைச் சங்கம் காயமடைந்த மக்களை ஏற்றிச் செல்லும் கடற்கரைப் பகுதியில் இருந்து 300 மீற்றர் தொலைவில் காலை 11:00 மணியளவில் வீழ்ந்த எறிகணையில் பொதுமக்கள் நால்வர் கொல்லப்பட்டிருந்தனர்.

நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் பொக்கணையில் வீழ்ந்த எறிகணை ஒன்றில் பொதுமக்கள் 6 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டிருந்தனர். இதேபோன்று முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், மற்றும் வலைஞர்மடம் போன்ற பாதுகாப்பு வலயப் பிரதேசங்களிலும் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதற்கு முன்னதாக கடந்த வியாழக்கிழமை 11 சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் 39 பேரும், புதன்கிழமை பொதுமக்கள் 17 பேரும் சிறீலங்கா படையினரது கோரத்தனமான எறிகணைத் தாக்குதலில் பாதுகாப்பு வலயத்தில் கொல்லப்பட்டிருந்தனர்.

Comments