வன்னியில் இன்றும் எறிகணைத் தாக்குதல்: 48 தமிழர்கள் படுகொலை; போருட் நிறுவன பணியாளர் உட்பட 46 பேர் காயம்

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 9 சிறுவர்கள் உட்பட 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அனைத்துலக தொண்டு நிறுவனமான போருட் நிறுவனத்தின் பணியாளர் உட்பட 46 பேர் காயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, பச்சைப்புல்மோட்டை மற்றும் வலைஞர்மடம் பகுதிகள் மீது இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 9 சிறுவர்கள் உட்பட 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் போருட் நிறுவனப் பணியாளர் உட்பட 46 பேர் காயமடைந்துள்ளனர்.

த.வரதராசா (வயது 17)

சி.கோமளதாஸ் (வயது 53)

க.பூரணம் (வயது 47)

கு.சகிலா (வயது 23)

பி.சஜீவன் (வயது 07)

சு.இராஜகோபால் (வயது 61)

த.ஜெயானந்தன் (வயது 28)

க.மாலினி (வயது 33)

கெ.மதிபாலன் (வயது 40)

சி.மதிநிலவன் (வயது 05)

கார்த்தீபன் (வயது 07)

த.காவியர் (வயது 06)

வ.அண்ணாமலை (வயது 60)

கி.தேவகி (வயது 30)

சர்மிளா (வயது 05 மாதங்கள்)

ம.அமுதர் (வயது 21)

ம.சூசைதாசன் (வயது 62)

ஈ.ரஞ்சன் (வயது 35)

செ.தயாநிதி (வயது 27)

சி.கோமாளாதேவி (வயது 52)

அ.புஸ்பரசர் (வயது 38)

மே.விதுசன் (வயது 12)

க.மதீபர் (வயது 23)

செ.சுந்தரம் (வயது 24)

சி.சம்பு (வயது 45)

இ.மேரி (வயது 25)

ம.டிலானி (வயது 01)

ந.அருள்வாசன் (வயது 08)

நா.பாக்கியம் (வயது 69)

மு.சாருஜன் (வயது 09)

கெ.ரதீஸ்குமார்; (வயது 29)

கு.கந்தசாமி (வயது 48)

ம.வெள்ளையன் (வயது 45)

சி.பரமசிவம் (வயது 32)

ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது உயிரிழந்துள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

கெ.நிரஞ்சன் (வயது 35)

சி.சிவலிங்கம் (வயது 45)

சி.கிருபாஜினி (வயது 06)

த.அஜந்தன் (வயது 20)

கொ.ஞானசேகரம் (வயது 30)

கொ.அருந்ததி (வயது 38)

ந.தேவி (வயது 20)

இ.தில்லையம்பலம் (வயது 65)

சி.விமலா (வயது 25)

ம.பரமநாதன் (வயது 45)

பூ.பாவேந்திரா (வயது 31)

க.லக்சிகா (வயது 13)

க.கார்த்திக் (வயது 20)

க.முஜிதா (வயது 15)

த.நாகேஸ்வரி (வயது 35)

சி.இரத்தினசிங்கம் (வயது 68)

செ.நதியா (வயது 21)

தெ. கிருத்திகா (வயது 15)

சி.சதிதரன் (வயது 28)

த.நிரஞ்சலன் (வயது 31)

சு.செல்வராணி (வயது 53)

கு.சுவர்ணா (வயது 26)

இ.மதுசன் (வயது 10)

இ.ரஜனி (வயது 35)

அ.அஜந்மேரி (வயது 31)

சு.கமலாதேவி (வயது 56)

ஆ.அந்தோனி (வயது 61)

வி.கீர்த்தன் (வயது 02)

ஜெ.மரியாயி (வயது 67)

செ.இரஜேந்திரம் (வயது 48)

செ.தர்சன் (வயது 05)

ந.பரமேஸ்வரி (வயது 57)

மு.போல் (வயது 43)

யோ.டிக்சன் (வயது 17)

சு.பசுபதிப்பிள்ளை (வயது 68)

ஆகியோர் காயமடைந்துள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

காயமடைந்தவர்களில் சு.பசுபதிப்பிள்ளை, கிளிநொச்சி கிராமசேவையாளர் என்பதும் த.நிரஞ்சலன், அனைத்துலக தொண்டு நிறுவனமான போருட்டின் முதன்மைப் பணியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments