'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது தொடரும் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்: 65 தமிழர்கள் படுகொலை

வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது நேற்றும் நேற்று முன்நாளும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 65 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 79 பேர் காயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீது நேற்று சிறிலங்காப் படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளனர்.

சி.ரக்சன் (வயது 09)

காமந்தனி (வயது 55)

நா.முருகேசன் (வயது 28)

க.சுஜீபா (வயது 24)

கு.எசாயா (வயது 12)

ஆ.செல்லத்துரை (வயது 75)

நா.பிரபு (வயது 16)

இ.கிளாசினி (வயது 30)

ம.குணசீலன் (வயது 24)

செ.இராமச்சந்திரன் (வயது 32)

த.நாராயணன் (வயது 18)

க.கண்மணி (வயது 63)

ம.கந்தசாமி (வயது 50)

த.சொர்ணலதா (வயது 26)

த.சிறிதரன் (வயது 32)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளையில் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' பகுதிகள் மீது நேற்று முன்நாள் மாலை தொடக்கம் நேற்று காலை வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகளை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 20-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஐ.சண்முகம்

த.சச்சிதாநந்தன்

க.தங்கமலர் (வயது 48)

க.கருணாகரன் (வயது 47)

க.சிவராசா (வயது 40)

முத்தையா (வயது 60)

ச.வெண்ணிலா (வயது 15)

ச.கிருபாலினி (வயது 24)

கவிநிலவன் (வயது 02)

சி.புகழேந்தி (வயது 16)

ச.வள்ளிப்பிள்ளை (வயது 71)

தீ.குகதாசன் (வயது 12)

சி.பாக்கியம் (வயது 83)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மாத்தளன் பகுதியில் நேற்று சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 6 தமிழர்கள் காயமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் இருந்த 4 மீன்பிடிப் படகுகள் அழிந்து நாசமாகியுள்ளன.

Comments