ஐ.நா. பாதுகா‌ப்பு அவை‌யி‌ல் இல‌ங்கை ‌பிர‌ச்சினையை விவாதிக்க அமெ‌ரி‌க்கா ஆதரவு

ஐ.நா. பாதுகா‌ப்பு அவை‌யி‌ல் இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சினை விவகாரத்தை வரும் 26ம் திகதிய அமர்வில் மீ‌ண்டு‌ம் ‌விவா‌தி‌ப்பதை அமெ‌ரி‌க்கா ஆத‌ரி‌ப்பதாக அ‌ந்நா‌ட்டி‌‌ன் ‌நிர‌ந்தர உறு‌ப்‌பின‌ர் சூச‌ன் ரை‌ஸ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ம‌னித அவல‌ம் கு‌றி‌த்து‌ம், இன‌ப்‌ பிர‌ச்சனை‌யி‌ன் த‌ற்போதைய ‌நிலை கு‌றி‌த்து‌ம் அமெ‌ரி‌க்கா ‌மிகு‌ந்த அ‌க்கறையு‌ம் கவலையு‌ம் கொ‌ண்டு‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர் எ‌ன்று ஐ.நா. அலுவலகத்தில் செயல்படும் ஊடகம் ஒன்று (Inner City Press) தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌ந்த ஊடக‌த்‌தி‌ற்கு கட‌ந்த 19ஆ‌ம் தே‌தி, ‌பி‌ரி‌‌ட்ட‌ன் தூத‌ர் ஜா‌ன் சாவெ‌ர்‌ஸ் அ‌ளி‌த்து‌‌ள்ள பே‌ட்டி‌யி‌ல், இல‌ங்கை இன‌ப்‌ ‌பிர‌ச்சனையை ஐ.நா. பாதுகா‌ப்பு அவை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌விவா‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ஐரோ‌ப்‌பிய ஒ‌ன்‌றிய‌த்தை‌ச் சே‌ர்‌ந்த உறு‌ப்‌பின‌ர்க‌ள் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்ததாக‌த் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்த‌க் கோ‌ரி‌க்கையை ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் (security council) தற்காலிக உறுப்பினர்களாக உள்ள ஆஸ்ட்ரியா, மெக்ஸிகோ, கோஸ்டா ரீகா ஆகிய நாடுகளு‌ம் வ‌லியுறு‌த்‌தின. ஆனா‌ல், இதனை பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினரான சீனா எதிர்‌த்து‌ள்ளது.

இலங்கையில் நடைபெறுவது அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனை. அதனால் சர்வதேச அமைதிக்கோ பாதுகாப்பிற்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை, எனவே அதனை பாதுகாப்புப் பேரவையி்ல் விவாதிக்கக் கூடாது என்று சீனா கூறியுள்ளது.

அதேவேளை இலங்கை விவகாரத்தை ஐ.நா. அவையில் மீண்டும் விவாதிக்க சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளதை மீள்பரிசீலைனை செய்து ஒத்துழைப்பு வழங்குமாறு விடுதலைப்புலிகள் சார்பில் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments