காலை இழந்தவனுக்கு செருப்பை கொடுத்து ஏமாற்றப் பார்க்கும் இந்தியா

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாண சபை அமைப்பானது அந்தந்த மாகாணங்களை சேர்ந்தவர்களே ஆள வேண்டுமென்ற நோக் கத்துக்காக உருவாக்கப்பட்டதாகும்.

விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்க ளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தமது தாயகப் பிரதேசங்களின் ஆட்சியு?மைக்கான சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவின் அழுத்தம் காரணமாக இந்த மாகாண சபைகள் அமைக்கப்பட்டன.

தற்போது வடக்கில் மாகாணசபை செயற்பட வில்லை.நடைமுறையிலுள்ள மாகாண சபைகளில் கிழக்கு மாகாணசபை தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண சபைகளும் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றன. மத்திய அரசுடனான பரஸ்பர புரிந்துணர்வு, ஒரே இனம் என்ற உணர்வுடன் சிங்களப் பிரதேச மாகாண சபைகளின் அனைத்துச் செயற்பாடுகளும் மேலோங்கி வருகின்றன.

சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணங்கள் என்பதால் எதிர்க்கட்சிதான் மாகாண சபை அதிகாரத்திலிருந்தாலும் மத்திய அரசின் தாராளத்தன்மை இந்த மாகாணங்களுக்குக் கிடைக்கின்றனவென்பதே யதார்த்தம். அதனை நடைமுறையிலும் அறியக் கூடியதாகவே உள்ளது.

இலங்கையில் தற்போது நிழல்த் தன்மையுடன் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கும் ஒரேயொரு மாகாண சபையான கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் தமிழ் பேசுவோரிடமிருந்தாலும் அதன் நிர்வாக இயந்திரம் சுயமான செயற்பாட்டைக் கொண்டதாக அமையவில்லை யென்பதனை நாம் அதன் செயற்பாட்டு நடைமுறையை அவதானிக்கும் போது காணக்கூடியதாக உள்ளது. மத்திய அரசாங்கத்தின் பிடி அங்கு உள்ளதென்பதே இதன் அர்த்தமாகும்.

இந்த மாகாணத்தை ஆட்சி புரிவோர் கூட இதனை உணர்ந்துள்ளனர். கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இந்த மாகாண சபையின் குறைபாடுகளை பொதுக் கூட்டங்களில் பகிரங்கமாக விமர்சித்துக் கவலை தெரிவித்துள்ளார். மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூட அதனை மறுக்கவில்லை.

எந்த மக்களுக்காக மாகாண சபை முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதோ அந்த மக்களுக்கு இதன் மூலமான அதிகாரமும் உச்சபயனும் சரியாகச் சென்றடையவில்லையென்பதே உண்மையாகும்.

இந்த மாகாண சபைக்கு?ய சாதாரண அதிகாரங்களை மட்டுமல்ல, சலுகைகளைக் கூட இன்னும் மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டிய நிலையே உள்ளது.

தமிழ்பேசும் மக்களுக்கான மாகாண சபைகள் தொடர்பாக அண்மைக்காலமாகப் பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

மாகாண சபை முறைமையை தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று ஏற்றிருந்தால் இன்று இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது என்பது இந்தியாவின் கருத்து.

மாகாண சபைக்கும் மேலான அதிகாரங்களை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க இந்தியா ஆவன செய்ய வேண்டுமென்பது தமிழக முதல்வரின் ஆதங்கம்.

கிழக்கு மாகாண சபைக்கான அதிகாரங்கள் இன்னும் சரியான முறையில் கிடைக்கவில்லை. மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டியே உள்ளதென்பது முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் கவலையாகவுள்ளது.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழு நூறு தடவைகள் கூடி ஆராய்ந்து ஒரு தீர்வுத் திட்டத்தை சிபாரிசு செய்யத் தயாராகவிருக்கும் நிலை யில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமான மாகாண சபையா? அதற்கு இடமளிக்க முடியாதென்பது மற்றொரு சாராரின் கருத்து. இவ்வாறு பல்வேறு வகையான வாதப் பிரதிவாதங்கள்.

தமிழ் பேசும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபையும் வடக்கில் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள மாகாண சபையும் அண்மைக் காலமாக இவ்வாறானதொரு சிலந்தி வலைச் சிக்கலுக்குள் சிக்கி பலராலும் பல்வேறு விமர்சனங்களுக்கும் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது ஆனால், இன்றைய கேள்வி, மாகாண சபை ஆட்சி முறையானது தமிழ் மக்களின் அனைத்து அபிலாஷைகளையும் நிறைவு செய்யும் அதேவேளை, மத்திய அரசுடனான கெஞ்சல் தன்மையற்ற சுயமான கௌரவமான ஒரு நிர்வாகக் கட்டமைப்புக்கு உகந்ததா என்பதே.

இதற்கான பரிசோதிப்பின் முடிவு இல்லையென்ற முடிவையே தரும்.

ஜே.ஆர் ஜயவர்தன, பிரேமதாச காலத்தில் வடக்குகிழக்கு இணைந்த நிலையில் செயற்பட்ட மாகாண சபையின் நிர்வாக இயந்திரம் எவ்வாறு மத்திய அரசினால் முடக்கப்பட்டதென்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்று பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கில், தற்போதைய கிழக்கு மாகாண சபையின் வேகமற்ற செயற்பாடுகளின் மூலமாக வெளிப்படுத்தப்படும் அதிகாரமற்ற தன்மையும் இதனை நமக்கு நன்கு புலப்படுத்துகின்றன.

சர்வகட்சிக் குழுவில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்கூட மாகாண சபை ஆட்சி முறையின் அதிகாரமற்ற தன்மையை பூஜ்ஜியத்துக்கு ஒப்பிட்டு கருத்துகளைத் தெ?வித்துள்ளது. சர்வகட்சிக்குக் குழுவின் சிபார்சுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ் மக்களுக்கு ஓரளவேனும் விமோசனம் கிடைக்கலாம் என்பதும் இக்கட்சி முன் வைக்கும் கருத்தாக உள்ளது.

அதற்காக சர்வகட்சிக் குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையிலான தீர்வுகள்தான்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கான தெய்வபலம் என்று இங்கு கூற வரவில்லை. அது நடைமுறைப்படுத்தப்படும் போதே தெரியவரும்.

இவ்வாறானதொரு நிலையில் இந்திய மத்திய அரசின் கவலையும் ஏக்க?ம் எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடியதொன்றல்ல.

தனது மாகாண சபைக்கு கொழும்பு அரசாங்கம் அதிகாரங்களைத் தர மறுக்கிறதென அதற்கான ஆதாரங்களைப் பகிரங்கமாகத் தெரிவித்து அறிக்கை விட்டவர்தான் வரதராஜப் பெருமாள். அப்போது இந்திய மத்திய அரசு வாய்மூடி மௌனியாக இருந்தது ஏன்? மாகாண ஆட்சி முறைக்கு வழிவகுத்த இந்திய அரசு அதற்கான அதிகாரங்களை வழங்க வேண்டுமென அந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசை வலியுறுத்தாதது ஏன்?

இன்று மட்டும் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலிருந்து தாம் தப்பிக் கொள்ள வேண்டுமென்பதற்காக இவ்வாறு சாக்குப் போக்குச் சொல்லிக் கொள்வதில் எவ்வித அர்த்த?மில்லை.

இன்றைய கிழக்கு மாகாண சபையும் அதிகாரம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றதென்ற உண்மை தெரிந்திருந்தும் இது குறித்து இலங்கை அரசிடம் இந்தியா எதுவும் தெ?விக்கவில்லை.

இது இவ்வாறிருக்க, அண்மையில் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்திருந்த இந்திய உயர் ஸ்தானிகர் அலோக் பிரசாத் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்ட மொன்றில் உரையாற்றும் போது. கிழக்கு மாகாண அபிவிருத்தியில் இதுவரை காலமும் இந்திய அரசு சின்னச் சின்ன உதவிகளையே வழங்கியதாகவும் தற்போது மாகாண ஆட்சி முறை இருப்பதால் பெரிய உதவிகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அடிப்படை மற்றும் சமகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதிலும் இந்தியா உண்மையான அக்கறையுடன் செயற்பட்டு உதவியிருந்தால் இன்றைய பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக மாறி யிருக்கவும் மாட்டாது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அழிந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தும் வாழும் அவல நிலை ஏற்பட்டிருக்கவும் மாட்டாது.

இதனை விட்டுவிட்டு இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவி வருவதாகவும் உதவப் போவதாகவும் கூறுவதில் என்ன அர்த்தம்? இவ்வாறு கூறுவதன் ?லம் இலங்கைத் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியுமென இந்தியா எதிர்பார்த்தால் அது கூடத் தப்புக் கணக்காகவும் வெட்கம் கெட்ட தனமாகவுமே இருக்கும்.

அதி வேகப் பாதைகளும் தகவல் தொழில்நுட்பக் கூடங்களும்தான் தமிழ் மக்களின் இன்றைய தேவையா?

இலங்கையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களின் அபிவிருத்திக்கு இதயசுத்தியுடன் உதவும் எண்ணம் இந்தியாவுக்கு இருந்திருந்தால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் அநுருத்த ரத்வத்தையால் சிங்கக் கொடியேற்றப்பட்ட யாழ். மாவட்டத்துக்கு அன்றிலிருந்து இன்றுவரையும் தாராளமாக உதவிகளை வழங்கியிருக்கலாமே.

நூலகங்களுக்குப் புத்தகங்களையும் பாடசா லைகளுக்கு கணனிகளையும் வழங்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கு உதவுகிறோமென்று கூறுவதில் என்ன ம?யாதைத் தனம் உள்ளது? மாகாண சபை அமைப்பு முறை இருந்தால் மட்டும்தான் உதவ முடியுமா?

இந்தியாவால் காலிழந்தவனுக்குச் செருப்பைக் கொடுத்து ஏமாற்ற முடியாதென்பதனை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் .

----காரியப்பர்----


Comments