மருத்துவர்கள் என்ற போர்வையில் வந்துள்ள குழுவினர் அனைவரும் இந்திய இராணுவத்தின் புலனாய்புப் பிரிவினரால் “றோ” அமைப்பைச் சேர்ந்தவர்கள்

இந்திய மருத்துவக்குழுவில் 1987ம் ஆண்டு வந்த இந்திய அமைதிப்படையினரும் அடங்குகின்றனர் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிகிச்சையளிக்கும் நோக்கில் இலங்கை வந்து புல்மோட்டை பகுதியில் மருத்துவ வசதிகளை வழங்கிவரும் இந்திய மருத்துவர்களின் உள்நோக்கம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

மருத்துவர்கள் என்ற போர்வையில் வந்துள்ள குழுவினர் அனைவரும் இந்திய இராணுவத்தின் புலனாய்புப் பிரிவினரால் “றோ” அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்தள்ளது. மக்களுக்கான உதவி என்ற போர்வையில் வன்னியிலுள்ள மக்களை படுகொலை செய்யும் சிங்கள இராணுவத்திற்கு பெரும் உதவிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முல்லைத்தீவு பகுதியில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் ஆட்லறி, பீரங்கித் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தேவையான தொழிநுற்ப உதவிகளை வழங்கிவருகின்றனர். அத்துடன் விமானத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தகவல்களை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவத்திற்கு இராணுவத் தளபாடங்களை ரஸ்யா, சீனா, ஈரான், இந்தியா வழங்கி வருகின்ற போதிலும் இந்தியா வன்னி போர் களத்தில் நேரடியாக தலையிட்டு இலங்கை இராணுவத்தினரை நெறிப்படுத்திவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments