புலத்தில் பொங்கி எழுவாய் தமிழா! இன்று 15. 04. 2009 பேர்ண் பாராளுமன்றம் முன்பாக: சுவிஸ் தமிழ் இளையோர்கள் உரிமையுடன்...

இன்று 15. 04. 2009 பேர்ண் பாராளுமன்றம் முன்பாக மாலை 16 மணியளவில் நடைபெறவிருக்கும் இரவு பகலான தொடர் போராட்டத்திற்கு உங்கள் தொடர்ச்சி முறையிலான மாபெரும் ஆதரவை சுவிஸ் தமிழ் இளையோர்கள் உரிமையுடன் வேண்டி நிற்கின்றனர். ஆகவே இனியும் தயக்கம் வேண்டாம.

தாயகத்தில் எமது இனம் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு வருகிறது. இரத்தமும் தசையுமாக எமது உறவுகள் விசக்குண்டுகளால் கிழித்துக் கொன்றொழிக்கப்படுகிறார்கள். காலில் ஒரு பகுதியையும் கையில் ஒரு பகுதியையும் உயிருடன் உள்ள போதே இழந்து விட்டு எஞ்சிக் கிழிந்து தொங்கும் உறுப்புக்களுடன் இரத்தம் ஓட ஓட அழும் எமது சிறார்களின் அழுகைக் குரல்கள் இன்னும் செவியில் ஒலிக்கவில்லையா?

மார்பும், பிறப்புறுப்பும் சிதைக்கப்பட்ட எமது தாய்க்குலத்தின் அகோரக் காட்சிகளை இன்னும் பார்க்கவில்லையா?

தினந்தோறும் 100 உயிர் துடிக்கத் துடிக்க கொல்லப்படுவதை இன்னுமே அறியவில்லையா? நிச்சயமாக இதை நினைத்துத் துடிக்கும் தமிழர்களில் நீங்களும் ஒருவர்.

தினந் தினம் அங்கு மரணச்சடங்குகள் நடக்கும் நேரத்தில் இன்னும் நாம் தெருவில் இறங்கத் தயங்குவதேன்? சர்வ உலகெங்கும் தமிழினம் வீதியிறங்கிப் போராடும் நேரம் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் ஆகிய நாம் எமது தார்மீக ஆதரவை வழங்காது ஒழிந்து ஒதுங்கியிருப்பது ஏன்?

ஆகவே இனியும் தயக்கம் வேண்டாம. இன்று 15. 04. 2009 பேர்ன் பாராளுமன்றம் முன்பாக மாலை 16 மணியளவில் நடைபெறவிருக்கும் இரவு பகலான தொடர் போராட்டத்திற்கு உங்கள் தொடர்ச்சிமுறையிலான மாபெரும் ஆதரவை சுவிஸ் தமிழ் இளையோர்கள் உரிமையுடன் வேண்டி நிற்கின்றனர்.

தயவுசெய்து சமுகமளிப்பவர்கள் அவ்விடத்திலே தங்குவதற்கான ஏற்பாடுகளுடன் வரவும்.

உரிமையுடன் உங்கள் அன்புப் பிள்ளைகள்.

அநுராதபுரம் அதிர்ந்தது எல்லாளனால்! சுவிஸ் அதிரவேண்டும் எல்லாளன் வால்களால்!. இளையோர் புரட்சி தொடரட்டும்.

Comments