மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இன்று சிறிலங்கா உலங்குவானூர்தி- எறிகணை தாக்குதல்கள்: 219 தமிழர்கள் படுகொலை; 408 பேர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை, வான், பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 219 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 408 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலயங்களான முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று புதன்கிழமை காலை தொடக்கம் இரவு வரை சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை, பல்குழல் வெடிகணை, வான், பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் முள்ளிவாய்க்கால் மக்கள் குடியிருப்பு பகுதி மீது இன்று முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.





இதேவேளையில் மாத்தளன், வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் பகுதியில் இன்று மாலை 6:00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி பீரங்கி, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்க பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களையும் சமநேரத்தில் படையினர் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல்களில் 172 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 326 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றைய தாக்குதல்களில் 219 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 408 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டோரின் பெயர், விபரம்:

மருதமலை செவ்வானம் (வயது 05)

கனகையா பார்த்தீபா (வயது 10)

கதிரமலை மருதன் (வயது 11)

கருணை கோபிதாஸ் (வயது 13)

மூர்த்தி முகுந்தன் (வயது 14)

பேபிறோசா (வயது 34)

ரகுதாஸ் சுபோதினி (வயது 19)

மகாலிங்கம் கற்பகாதேவி (வயது 58)

பாலசுப்பிரமணியம் இலக்குமி (வயது 42)

மயில்வாகனம் புவனேஸ்வரி (வயது 53)

மகேந்திரன் தெய்வானை (வயது 50)

கறுப்பையா சத்தியகலா (வயது 24)

செல்வரட்ணம் கலாவதி (வயது 55)

செல்வராசா டயஸ்குமார் (வயது 20)

சிங்கராசா பிரதீபன் (வயது 27)

சிவகணேசமூர்த்தி பிரதீட்சா (வயது 02)

செல்வகதிர் பலோமினி (வயது 18)

சின்னராசா (வயது 70)

கனகரட்ணம் பானுமதி (வயது 38)

மயில்வாகனம் செபமாலை (வயது 58)

தங்கராசா பழனி (வயது 68)

பேச்சிமுத்து கண்ணாயி (வயது 48)

சோதரன் மருதமலை (வயது 45)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர், விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.






Comments