வன்னியில் கடந்த மூன்று மாதங்களில் 6500 பொதுமக்கள் படுகொலை; 14000 பொதுமக்கள் காயம்: ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு

இலங்கையின் வன்னி யுத்ததத்தில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் சுமார் 6500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 14 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை இரகசியமாக பேணப்படுவதாகவும், இந்த அறிக்கை இராஜதந்திர வட்டாரங்களுக்கு மட்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

படையினரின் தாக்குதல்களினால் 6432 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 13,946 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள அப்பாவி பொதுமக்கள் பட்டினிப் பிணியை எதிர்நோக்கியுள்ளதாக அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்த பெண்ணொருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இன்னும் 50,000 பொதுமக்கள் சிக்கியிருக்கக் கூடுமென ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் எலிசபத் பயர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக பெருமளவிலான மக்கள் காயமடைந்துள்ளதாக எல்லைகளற்ற வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments