போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்: ஜி-8 நாடுகள் அவசர கோரிக்கை

வன்னிப் பிராந்தியத்தில் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள 'ஜி-8' எனப்படும் உலகில் முன்னணியில் உள்ள எட்டு செல்வந்த நாடுகளின் அமைப்பு, போர்ப் பகுதிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கும் தனது ஆதரவைத் தெரியப்படுத்தியிருக்கின்றது.

"போர் நடைபெறும் பகுதியில் தற்போதும் சிக்கியுள்ள மக்களுடைய அவல நிலை மற்றும் போரால் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் தொடர்பாகவுமே நாம் எமது கவனத்தைச் செலுத்த வேண்டியவர்களாகவுள்ளோம்" என இது தொடர்பாக 'ஜி-8' நாடுகள் அமைப்பின் தலைவரால் இன்று சனிக்கிழமை ரோம் நகரத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகுந்த செல்வந்த நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரித்தானியா, இத்தாலி, ரஷ்யா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இந்த 'ஜி-8' நாடுகளின் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பு பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள இந்த அறிக்கையில், பொதுமக்களின் உயிரிழப்புக்களை மேலும் தவிர்க்கும் வகையில் அவசியமான நடவடிக்கைகளை இருதரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments