முல்லைத்தீவு விடயத்தை சர்வதேசம் ஏன் கவனத்திற்கொள்ளவில்லை - இனர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள்

இலங்கையின் முல்லைத்தீவு கரையோர பாதுகாப்பு வலய பகுதியில் மேற்கொள்ளப்படும் இரத்தபாதையே அமரிக்க ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்திற்கு வந்துள்ள பாரிய முதல் பிரச்சினை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் இணைத்தளத்தின் ஊடாக நடத்திய கலந்துரையாடலில் “நகரத்தில் இருந்து பிரச்சினை” என்ற இனப்படுகொலை சம்பந்தமான நூலின் ஆசிரியையும் அமரிக்க தேசிய பாதுகாப்புத்துறை சிரேஸ்ட பணிப்பாளருமான சமந்தா பவர் என்பவர் சர்வதேசம் ஏன் இந்த பிரச்சினையை ஜி 8 மற்றும் ஏனைய மாநாடுகளில் எடுத்துக்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்தப்படுகொலை திட்டத்தை திட்டமிட்டு செயற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ள இந்த நூலில் இலங்கை அரசாங்கம் கோரியுள்ள 2 பில்லியன் டொலர்கள் கடனில் 1.6 பில்லியன் டொலர்களை போருக்கும் அகதிகளின் தடுப்பு முகாம்களுக்கும் பயன்படுத்தவுள்ளது.

இந்தநிலையில் அமரிக்கா தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த கடனை நிறுத்தவேண்டுடம் என இனர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் கோரியுள்ளனர். கிழக்கு திமோர் விடயத்தில் இந்தோனிசியாவை அமரிக்க பயமுறுத்தியமைக்கு சமமாக இந்த விடயத்திலும் அமரிக்கா செயற்படவேண்டும் என இந்த செய்தியாளர்கள் கோரியுளள்ளனர்

Comments