தமிழக மாணவ பலத்தை நாம் இன்னும் பயன்படுத்தவில்லை. ஏன்? எப்படி பயன்படுத்தலாம். என்ன செய்யலாம்.

தமிழகத்தின் தற்போதைய ஈழ நிலைப்பாடு குறித்து பெரிதாய் விளக்கத் தேவையில்லை. காலத்தின் கட்டாயம், அரசியலில் அதிகாரம் படைப்பவர்களை தேர்வு செய்ய, சில நேரங்களில் நாமே நம் எதிரி வெற்றி பெற உதவ வேண்டிய நிலை.

தமிழகத்தின் தற்போதைய ஈழ நிலைப்பாடு குறித்து பெரிதாய் விளக்கத் தேவையில்லை. காலத்தின் கட்டாயம், அரசியலில் அதிகாரம் படைப்பவர்களை தேர்வு செய்ய, சில நேரங்களில் நாமே நம் எதிரி வெற்றி பெற உதவ வேண்டிய நிலை.

துரோகியை ஆதரிப்பதை விட எதிரிக்கு துணை போகலாம் என்ற தவிர்க்க முடியாத காரணம்தான். தமிழகத்தில், தமிழியக்கங்களும் தங்களை தியாகியாக்கிக் கொண்டு, பெரிய மாற்றத்தை கொண்டுவர இயலாத சிக்கல். படித்த வழக்குரைஞர்களோ திசை திருப்பப்பட்டு, தங்களின் மான மரியாதையை காக்க போராடும் சூழல்.

இருக்கும் சில மாணவ அமைப்புக்களும், சரியான தலைமையில்லாமல் அல்லது தலைமை ஒரு சாராருக்கு சாதகமாக செயல்பட்டு கொண்டிருக்கும் சந்தர்ப்ப அரசியல். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு - எ.ஐ.எஸ்.ஃஎப். நல்லதொரு தளத்தை பெற்று இருப்பினும், இயக்கத்தை நேரிடையாய் ஆதரிக்க இயலாத நிலை. எஸ்.ஃஎப்;.ஐ - மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அங்கம். இவ்வமைப்பின் தலைமையே நம் கருத்தில் முழு உடன்பாடு இல்லை என்பது தெரிந்தது.

அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு - ஒரு பார்ப்பன கும்பலுக்கு அடிவருடிக் கொண்டிருக்கும் மாணவர் அமைப்பு புரட்சிகர மாணவர் முன்னனி என்பது கம்யூனிஸ்ட் எம்.எல்.லின் புதிய சானநாயகத்தின் அங்கம். தமிழக மாணவர் இயக்கம் - பெ.தி.க.வின் ஒரு அங்கம்.

தமிழ் ஈழ மாணவர் போராட்டக் குழு - ஆரம்பத்தில் சில போராட்டங்களை நடத்தி விட்டு தற்போது காணாமல் போயுள்ள மாணவர் அமைப்பு இளந்தமிழர் இயக்கம் - பெ.மணியரசனின் துணை அமைப்பு தமிழ் மாணவர் பேரவை - மற்றைய அரசியல் மற்றும் இயக்கங்களை புறந்தள்ளி, தமிழுக்காக ஆரம்பிப்பதாய் சொல்லி, ஆரம்பித்து தொடக்க விழா கண்டவுடனேயே, அமைப்பின் வழிகாட்டியாக இருந்தவர்கள் தமிழன விரோதிகளா? என்ற கேள்வியுடன் தவித்து நிற்கும் அமைப்பு.

வழக்குரைஞர் மாணவர் கூட்டமைப்பு - சாதிய தீயில் சிக்குண்டு நிற்கும் அமைப்பு இன்னும் சில மாணவர் அமைப்புகள் இருக்கிறது. ஆனால், யாரால் நடத்தப்படுகிறது என்பதே தெரியாது. ஆனால் அவர்களின அறிக்கைகள் மட்டும் வெளிவரும். இவ்வறிக்கைகளை நம்பி வெளிநாட்டிலுள்ள நம்மவர்கள் ஆதரித்து அறிக்கை விடும் ஊடகங்கள் உள்ளன.

பல மாணவ அமைப்புக்கள் தமிழரல்லாதாரால் நடத்தப்பட்டு வருகிறது. அனால், இதை வெளியில் தெரியாமல் தாங்கள் தமிழருக்காக உயிரை கொடுப்பவர்கள் என வேடமணிந்து கொண்டு செயல்படுபவர்கள். இச்செய்தி மாணவர் அமைப்புகளுக்கு மட்டுமல்ல, பல எழுத்தாளர்கள், நடிகைகள், நடிகர்கள், அரசில்வாதிகள், ஊடகத்துறையினர், இயக்கங்களின் தலைமைகள் என எல்லா இடங்களிலும் இருக்கின்றனர். இந்த எமது கட்டுரையையே நீங்களே, நீங்கள் தமிழர்கள் என நம்பிக் கொண்டிருக்கும் சிலருக்கு அனுப்பலாம்.

ஆயினும் அவர்களில் பலர் வேற்று மொழிக்காரர்களே. இவர்களால் தான் நமது பண்பாடு, மொழி, காலச்சாரம் என அனைத்து மழுக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உணர்வுகளும் தேய்ந்து போவதற்கும் இவர்கள் தான் காரணம். ஆனாலும், நம்மவர்கள் இவர்களை நம்புவார்கள். ஏனெனில், இவர்கள் தான் உண்மைத் தமிழர்களாக நடித்துக் கொண்டிருப்பவர்கள்.

ஏன் இந்த நிலை. வரலாறு செய்த கோலம். நம் முன்னோர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி சுமார் 50 - 200 ஆண்டுகளுக்குள் நம்மிடையே வந்து நுழைந்த வந்தேரிகள். இவர்களின் பேச்சில், செயல்பாடால், நடத்தையால் இவர்களை அவ்வளவு எளிதில் அடையாளம் காண இயலாது. இது நீண்டு கொண்டே போகும். இது குறித்து பிறகு பார்ப்போம்.

இது தவிர கட்சிகள் சார்ந்த பல மாணவ அமைப்புகள் உள்ளன. பலம் பொருந்திய, ஆனால் படித்துக் கொண்டிருக்கும், மாணவ சமுகத்தை சரியான வழிகாட்டல் இல்லாமல் அல்லது மாணவர்களின் நம்பிக்கையை பெற முடியாத தலைமைகளால், முத்துக்குமார் போன்று தூய்மையான, தியாக மனப்பான்மையுடைய தமிழக மாணவர்கள் இருந்தும் இந்த பலத்தை ஒன்று கூட்டி அழைத்துச் செல்ல யாருமில்லை என்பது வேதனையான ஒன்று.

நாமும் இப்படிப்பட்ட மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலுரைக்க முடியாமல் போனதுண்டு. இம்மாணவர்கள் 'காம்பர்மைஸ்" செய்ய முடியாது. ஆதனால் தான், தெளிந்த நீராக உள்ளனர். நாமும் இம்மாணவர்களின் போக்கிற்கு நல்ல வடிகால் அமைக்கும் பணியை மட்டும் செய்து வருகிறோம்.

இப்படிபட்ட மாணவர்கள் நமக்கு தெரிந்து, தமிழகம் முழுக்க குறைந்தது 300 பேர் தற்போது உள்ளனர். இவர்களுக்கு சரியான வழிகாட்டிகளாக மட்டும் நாம் இருந்தால் போது. இவர்களுக்கு நாம் பக்க பலமாய் மட்டும் இருந்து விட்டு, செயல்பாடுகளை வகுத்துக் கொடுத்தாலே போதும்.

இதுகுறித்து மாணவர்கள் நம்மிடம் அவ்வப்போது தொடர்பெடுத்து வந்ததன் விழைவாய், சரியான அமைப்பை உருவாக்க சொல்லியுள்ளோம். ஒத்த கருத்துடைய தமிழகத்திலுள்ள மாணவர்களை ஒன்று திரட்டி வைக்க சொல்லியுள்ளோம்.

மீண்டும் சொல்கிறோம், இவர்களுக்கு நாம் பக்கபலம் மட்டுமே. அவர்களின் கருத்துகளுக்கு நாம் தடை போடப்போவதில்லை. வழிகாட்டியாக இருக்கப்போகிறோம். இதற்கு உங்கள் ஆதரவு எமக்கு தேவை.

என்றென்றும்,

எப்போதும்.... அக்னி

Comments