பிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி பேச்சுக்கு பின்னூட்டங்கள்

e0ae95e0aeb0e0af81e0aea3e0aebee0aea8e0aebfe0aea4e0aebfஇலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையில் வியாழக்கிழமை தமிழர் பேரணி நடைபெற்றது அல்லவா..?

அந்தப் பேரணியின் முடிவில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி இப்படிச் சொல்கிறார்…

“இலங்கையில் இப்போது நிகழும் சூழ்நிலைகளைப் பார்க்கும்போது இரண்டுவிதமான முடிவுகள்தான் எடுக்க முடியும். ஒன்று அங்கு போர் நிறுத்தம் செய்வது. மற்றொன்று போரின் முடிவு நமக்குத் தோல்வியாக இருந்தால் சட்டப்பேரவையில் ஜெயலலிதா தீர்மானம் போட்டதைப்போல பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வேண்டியது.

பல நாடுகளை தனது சாம்ராஜ்யத்தின்கீழ் கொண்டுவந்த மாவீரன் அலெக்சாண்டர், கடைசியாக போரஸ் மன்னரை வென்றபோது அவரை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டான். ஒரு மன்னனாக நடத்த வேண்டும் என்று போரஸ் மன்னன் கூறினார். அதையேற்று அவரை சகல கெளரவங்களுடன் சரிநிகர் சமமாக நடத்தினார் அலெக்சாண்டர். அதைப்போல போரின் முடிவு இப்படியிருப்பின் போரஸ் மன்னரை அலெக்சாண்டர் நடத்தியதைப் போல பிரபாகரனை மரியாதையாக நடத்த வேண்டும்…”

// இலங்கையில் இப்போது நிகழும் சூழ்நிலைகளைப் பார்க்கும்போது இரண்டுவிதமான முடிவுகள்தான் எடுக்க முடியும். ஒன்று அங்கு போர் நிறுத்தம் செய்வது. மற்றொன்று போரின் முடிவு நமக்குத் தோல்வியாக இருந்தால் சட்டப்பேரவையில் ஜெயலலிதா தீர்மானம் போட்டதைப்போல பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வேண்டியது.//

* தேர்தல் காரணமாக இங்கே ஜெயலலிதாவை இழுக்கிறீர்களா? அதாவது, புலிகள் மீது உங்களுக்கு மிகுந்த அக்கறை உள்ளது என்பதை இப்படி வெளிப்படுத்துகிறீர்களா?

* பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டனை கொடுக்க வேண்டியது குறித்து மத்திய அரசுக்கு நினைவூட்டுகிறீர்களா?

// பல நாடுகளை தனது சாம்ராஜ்யத்தின்கீழ் கொண்டுவந்த மாவீரன் அலெக்சாண்டர், கடைசியாக போரஸ் மன்னரை வென்றபோது அவரை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டான். ஒரு மன்னனாக நடத்த வேண்டும் என்று போரஸ் மன்னன் கூறினார். அதையேற்று அவரை சகல கெளரவங்களுடன் சரிநிகர் சமமாக நடத்தினார் அலெக்சாண்டர். அதைப்போல போரின் முடிவு இப்படியிருப்பின் போரஸ் மன்னரை அலெக்சாண்டர் நடத்தியதைப் போல பிரபாகரனை மரியாதையாக நடத்த வேண்டும்.//

* இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட சாத்தியமில்லை என்று ஆணித்தரமாக நம்புவதால், உங்களது இரண்டாவது முடிவுக்கு, புலிகளுக்குத் தோல்வி ஏற்பட்ட பிறகு, செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று யோசனை தெரிவிக்கிறீர்களா?

* பிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் என்ற பேச்சின் உள்ளர்த்தம் என்ன?

* பிரபாகரன் பிடிபட வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

* பிரபாகரன் விரைவில் பிடிபட்டு விடுவார் என்று ஆணித்தரமாக நம்புகிறீர்களா?

* ஆக… இரண்டாவது முடிவைத் தான் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்களா?

* இதனை முழுவதுமாக உணர்ந்துதான் ‘இறுதி’யாக ஊர்வலம் நடத்தினீர்களா?

சொல்லுங்கள் எங்கள் தமிழினத் தலைவரே?


Comments