புலிகள் எழுவார்களா? விழுவார்களா? அழிவார்களா???

உலகம் இன்று சிரித்துக் கொண்டிருக்கிறது.

ஏன் தெரியுமா? புலிகள் அழிகிறார்கள் என்றும்??

பயங்கரவாதம் என்ற ஒன்று வேரோடு ஒழிக்கப்படுகிறது என்றும், இனிமேல் யாருமே உலகில் தனி நாடு கேட்டுப் போராடமாட்டார்கள் எனும் துணிவிலும் உலகம் இன்று இலங்கை அரசின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை உற்றுப் பார்த்து உதவிகள் பல வழங்கி ஊமையாயிருக்கிறதாம்.

புலிகள் ஒழிகிறார்கள் என்ற போர்வையில் இன்று அழிந்து கொண்டிருப்பது அப்பாவித் தமிழ் மக்கள்?

அந்த அப்பாவிகள் யார்?

இடம்பெயர்ந்து இனியும் ஓட இடமின்றி ‘பிறந்த மண்ணிற்குப் போவதற்குப் பாஸ் எடுப்பதிலும் பார்க்க இறந்து படல் மேல்’ என்ற இறுமாப்போடு இருக்கின்ற பாதுகாப்பு வலய மக்கள்.

பாவம் உலகத்து மனிதாபிமான நடவடிக்கை நலன் விரும்பிகள்? என்ன செய்வார்கள் அவர்கள்? பயங்கரவாதம் ஒழிகிறது என்று நினைத்து முதுகில் தட்டிக் கொடுக்கிறார்கள். பயங்கரவாதம் அழிகையில் அப்பாவிகள் கொல்லப்படுவது நியாயம் என்று நிதானமாக நீண்ட சிந்தனையில் இருக்கிறார்கள். எது பயங்கரவாதம்?

யாராவது விளக்கம் சொல்லுவீர்களா?? எவருக்காவது எது பயங்கரவாதம் என்றால் என்ன என்று வரைவிலக்கணம் கூறத் தெரியுமா??

’பூதகிகள் பாலூட்ட வருகையில் முலையறுப்பதும், கடிக்க வரும் நாயை ஓட வைக்கக் கல் எடுத்து எறிவதும் , கொத்தவெனப் படமெடுக்கும் விசப் பாம்பைக் கொன்று போட நினைப்பதும் தான் பயங்கரவாதமோ?

என்னய்யா வேடிக்கை இது? என்ன மனச்சாட்சி உள்ள உலகம் இது? என்ன மௌனித்துப் போய் விட்டீர்களா? கொஞ்சமாவது உங்கள் வாய்களைத் திறவுங்களேன்?? என்ன பயங்கரவாதம் பாதுகாப்பு வலயத்திற்குள்ளா புதைந்து கிடக்கிறது??

பாவம் எங்கள் உறவுகள்? அம்பலவண் பொக்கணையிலும், வலைஞர்மடத்திலும், புதுமாத்தளனிலும் பதை பதைக்கத், துடி துடிக்க நாளொரு பொழுதாகச் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்? ஈழத் தமிழர்கள் என்ன இருண்ட கண்டத்திலா அந்தரிக்கிறார்கள்? இன்று அஞ்சி ஓடி அவலப்பட்டுச் செத்து மடிபவர்கள் யார்?? அவர்கள் யாரிடம் வேண்டுகை வைப்பார்கள்?

‘நேற்று வரை உலகம் அவர்களையே அதிகமாகப் பேசியது.
வன்னியில் நிமிர்ந்துள்ளோர் என்று உற்றுப் பார்த்து உறவாடியது.
ஆனால் இன்றோ??? அழியட்டும் அவர்கள் என ஆழத் துயில் கொள்கிறது??? என்ன செய்யும் உலகம் எங்கள் உறவுகளுக்கு??

’கையெடுத்த கடவுளருமே ஈழத் தமிழர்களுக்குக் கை கொடுக்கவில்லை?
அப்பமாக, அவல் பொரியாக, மோதகமாக வாங்கி உண்ட கடவுளர்
ஈழத் தமிழரைக் கைவிட்டு விட்டனராம்?


உலகம் மட்டும் இன்று உறக்கத்தில் இருக்கிறதாம்?? விடுதலை வேண்டியவர்களைப் பயங்கரவாதம் என்று சொல்லி வீர முழக்கமிடுகிறதாம் உலகம்? இது என்ன வேடிக்கை பாருங்களேன்??

’பாதுகாப்பு வலயத்திலும் பதுங்கு குழிகள்?
பாதுகாப்பு வலயம் என்பதன் அர்த்தம் என்ன?
ஓ அப்படியாயின் பதுங்கு குழிகளும் உயிர் பறிக்கும் குழிகள் தானே??

உலகம் எல்லாம் வாய் நிறையப் புன்னகையோடு வாழும் மனிதர்களே?
எப்படி வாய் நிறைய அழுகிற இந்த மனிதர்களைப் பார்க்க முடிகிறது உங்களால்??
என்ன செய்யப் போகிறீர்கள்?


கரங் கொடுத்து இவர்களின் கண்ணீரைத் துடைக்க மாட்டீர்களா??
இவர்களின் வாழும் உரிமையை வரமளிக்க மாட்டீர்களா?
இவர்கள் பட்டினியில் சாக ஒரு பிடி உணவையேனும்
உங்களால் ருசித்து உண்ண முடியுமா??


மனிதர்களின் மனச் சாட்சி அதற்கு இடம் தருமா??

உலகம் இதயமின்றி இரங்க மனமின்றி இறுமாப்போடு இருக்கிறதாம்?? யாரிடமும் சொல்லி அழ முடியாதுள்ளவர்கள் வேறிடம் சென்று வாழ மாட்டார்கள்??


’சொந்த நிலத்தில் குந்தி இருக்க ஓர் குடி நிலம் கேட்பது தப்பா?? யாரும் ஏதும் சொல்லாமல் உறங்கிக் கிடக்கிறீர்கள் போலும்??? அழியும் நிலையில் இருப்பவர்கள் நிச்சயம் ஒரு நாள் அடக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள்??

மீண்டும் அவர்களின் வாசற் கதவுகள் திறக்கப்படும்! மீண்டும் ஆண்ட பரம்பரை தேராவில் வீதியிலும், ஆனையிறவுப் பெரு வெளியிலும், அம்பகாமத்திலும் அச்சமின்றி அகலக் கால் வைக்கும்? இதுவெ உலக நியதி? இன்று புலிகள் அழிந்து விட்டார்கள் என எல்லோர் முகங்களும் புன்னகை புரியலாம்? இன்னும் இருப்பது ஐந்து கிலோமீற்றர்கள் தூரமே என இசைப்பாட்டும் இயற்றிப் பாடலாம்? குண்டு துளைப்பினும் பிரபாகரன் படைகள் சாகமல் குறி தவறாமல் தாக்குகிறார்கள் எனப் பெரும் கோசமும் எழும்பலாம்?? வந்த பகையை நிச்சயமாய்த் தமிழன் வெல்லுவான் என்பதும் நாளை ஓர் வரலாறாக மாறலாம்???

தர்மம் அழிந்ததாகவோ, அதர்மம் மோலோங்கியதாகவோ இது வரை யாரும் இலக்கணம் சொன்னதில்லை??? தர்மம் வெல்லும் என்பது வரலாறு??

‘இப்போது இங்கு வரும் காட்சிகளை நீங்கள் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தோ
மெத்தையில் இருந்தோ பார்த்து மகிழலாம்?

புலிகள் எப்போது அடிப்பார்கள்? என நானும் நீங்களும் புலத்தில் இருந்து புதிய கவிதைக்கான தலைப்பும் தேடலாம்????

புலிகள் அடிக்கையில் கொடியோடு வீதியில் இறங்கி வீராவேசம் காட்டப் புலத்தில் இருந்து நானும் நீங்களும் புறப்படலாம்??

குளிரூட்டிய அறைக்குள் இருந்து நானும் நீங்களும் புலிகள் அடித்தால் மகிழ்ச்சியாகவும், அடிக்கவில்லை என்றால் துக்கமாகவும் எங்கள் காலத்தைக் கழிக்கலாம்???

‘வன்னிக் குழந்தையாயிற்றே என்று வகை பிரித்து இந்தத் துயர் நிறைந்த காட்சிகளைக் கண்டு உலகம் தூங்கியிருக்கலாம்??? அவர்கள் காத்திருக்கிறார்கள் தங்கள் சொந்த ஊரிற்குப் போவதற்காக?? அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் உலகத்து மனிதர்களைப் போலத் தாமும் உரிமையோடு வாழ்வதற்காக?? வழிகளைத் திறவுங்கள் உலகத்து மனிதர்களே இவர்களுக்காக??

அடக்கு முறைக்கு எதிராகப் போராடியவர்கள் வீழ்ந்ததாக வரலாறு இல்லை.. நாளை நானும் நீங்களும் புலிகள் அழிந்து விட்டால் புலம் பெயர் வாழ்வின் பரவசத்தில் எம்மை நாமே மறந்து, வரலாறுகளைத் தொலைத்தவர்களாய் வண்ண வண்ணக் கனவுகளோடும் வலம் வரலாம்? ஆனால் அடக்கப்பட்ட இனத்திலிருந்து மீண்டும் ஓர் பிள்ளை பிறப்பான்? அவன் பனங்காம மண்ணுள், வன்னிக் காட்டுப் பற்றைகளுக்குள் புதைந்துள்ள துப்பாக்கியினைத் தேடி எடுப்பான்? அவனிலிருந்தும் மீண்டும் ஒரு சரித்திரம் ஆரம்பமாகும்?? அவன் மீண்டும் தன் முந்தையர் வீரத்தை நிலை நிறுத்தப் புறப்படுவான்?

அப்போது நானும், நீங்களும் எங்கள் பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் இனி எப்போது புலிகள் அடிப்பார்கள்? எத்தனை ஆமி செத்தவனாம் என்று கேட்டு இன்ரநெற்றைத் தட்டிக் கொண்டிருப்போம்? அட விழுந்தாலும் இவர்களுக்கு மீசையிலை மண் ஒட்டவேயில்லை என்று றம்புக்வெலவினதும், கோத்தபாய, மகிந்தவினதும் வம்சக் குழந்தைகள் மீண்டும் ஓர் சமாதானத்திற்கான யுத்தம் என்ற போர்வையில் எஞ்சியுள்ள மெலிவதற்கு இடமுமின்றி, பட்டினியால் வாடி, எலும்பும் தோலுமாக உள்ள தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருப்பார்கள்??

உலகம் அப்போது தான் விழித்துக் கொள்ளும்? பழைய விண்டோஸ் விஸ்டாவில் பதியப்பட்ட வன்னிப் படுகொலைகளைத் தூசு தட்டிப் பார்த்து விட்டு ‘அட நாங்கள் எல்லோரும் பிழை விட்டு விட்டோம்? எங்கள் முந்தையர்களாவது தமிழர்களுக்குத் தனி நாட்டினைக் குடுத்திருக்கலாம்?? விழுந்தாலும் மானத்தோடு விழுபவன் தமிழன் அல்லவா?? இனிமேலும் தமிழர்களைப் பணியவைக்க முடியாது என்று சொல்லி தங்கள் மூதாதையர் தமிழர்களின் தனி நாட்டினைக் கண்டு கொள்ளவில்லையே என மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுத் தமிழர்களுக்கென்று தனி நாட்டினை வழங்கி உலகம் மகிழ்வெய்தும்?? அப்போது நான் என்ன செய்வேன்?? நீங்கள் என்ன செய்வீர்கள்?? ‘பிஸ்ணஸ் கிளாஸில்(Bussiness Class) பிளைட் ரிக்கற் புக் பண்ணிக் கிளிநொச்சிக்குச் சென்று இப்போது உள்ள வன்னிப் படுகொலைகள் நிறைந்த வீடீயோக்களும், சண்டைக் காட்சிகளும் கலந்த திரைப்படம் திரையிடப்படுகையில் பின்னிருக்கையில் அமர்ந்து விசிலடித்துப் பார்த்து மகிழ்வோம்?? இது தானே எம்மால் முடிந்தது??? சீ….தூ…..
(இன்னும் ஒரு இரண்டு மாசம் பொறுங்கோ?? இதில் உள்ள நிறைய விடயங்கள் உங்களுக்குப் போகப் போகப் புரியும்??????)

‘அடங்கா மண்ணுக்கு விலங்கிடுதல் சாத்தியமோ??
பனங்காம மண் பணிந்ததாக வரலாறும் உண்டோ???

’வேரிழந்து ஊரிழந்து ஓடி வந்தவர்- நாங்கள்
வீதியெங்கும் நாதியற்று வெந்து நொந்தவர்??
போருக்கென்றும் ஆதரவாய் நாமிருந்தவர் எல்லைப்
போரின் படையாகிப் புலியோடு நின்றவர்??
எம் தலைவா எங்களுடன் நின்று எடுப்பாய்- மீண்டும்
எங்கள் ஊரில் சென்று வாழ வென்று கொடுப்பாய்???
ஆவி உடல் யாவும் உமக்காகக் கொடுப்போம்-தம்பி
அச்சமின்றி உம் அருகில் என்றும் இருபோம்???

எனும் பாடல் காற்றில் கலந்து கந்தகத்துகள்களின் வாசனைகளின் நடுவே பரவும் ஓர் நாள்??

வாழ்வளித்த வன்னி மண்ணே உன்னைக் கொஞ்சவா- நாங்கள்
பட்ட கடன் உந்தனுக்குக் கொஞ்ச நஞ்சமா??
……………………………..
மீதமுள்ள ஊர்களையும் நாளை பிடிப்போம்- எங்கள்
ஊரில் ஏறி வந்த பகை யாவும் துடைப்போம்
நாளை தமிழ் ஈழம் என நம்பியிருபோம்
அந்த நாடு வரும் நேரத்திலே நின்று சிரிப்போம்..!

எனும் புதுவையின் பாடலும் மொழிபெயர்ப்பு இலக்கிய வரிசையில் தனக்கென ஓர் தன்யிடத்தையும் பிடிக்கலாம்??? என்ன ஏதாவது புரிகிறதா?? போகப் போகப் புரியும்??

Comments