வல்லரசுகளின் நோக்கங்களும் இலங்கை விவகாரமும்

உலகின் அனைத்து நாடுகளும் பொருளாதார அரசியல் இராணுவ கேந்திர வலிமைகளையும் முக்கியத்துவங்களையும் கொண்டே மதிப்பிடப்பட்டு பிரிவு படுத்திப்பார்க்கப்படுகின்றன.

பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ச்சியடையும் நாடுகள், வளர்ச்சியடையாத மூன்றாம் உலக நாடுகள் என நாடுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கை வளர்ச்சியடையும் குழுமத்தில் இருக்கின்றது. அமெரிக்கா தற்பொழுது பொருளாதாரத்தில் தளர்ச்சி பெற்றிருந்தாலும்

பொருளாதார, இராணுவ வலிமை கொண்ட நாடாகவே முதல் நிலையில் இருந்து இப்பொழுதும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இரண்டாம் நிலையில் சீனா, ரஷ்யா உள்ளதென கணிக்கப்படுகின்றது.

உலகின் "பொலிஸ்காரன்' என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நிலைப்பாட்டையும் முடிவையும் விரும்பியோ, விரும்பாமலோ ஐரோப்பிய நாடுகளும் ஏனைய நாடுகளும் எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் ஏற்றுக் கொண்டு வருகின்றன.

உதாரணமாக ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கெதிராக தன்னிச்சையான படையெடுப்புகள் அத்துடன் இஸ்ரேல் உலகச் சட்டங்களையும் ஐ.நா.வையும் அலட்சியப்படுத்தி லெபனான் நாட்டை ஒரு மாத காலமாக குண்டு போட்டழித்தமை காஸாவில் இருபத்தொரு நாட்களாக தரை, வான், கடல் வழியாக தாக்குதல்கள் நடத்தி 1000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை ழுழு உலகமும் பார்த்துக் கொண்டிருக்க கொன்று சிதறிய கொடூரச் செயல்கள் அமெ?க்காவின் ஆசீர்வாதம் அதற்கு இருந்தமையே இக் கைங்கரியம் செய்வதற்கான முதல் காரணமாக இருந்தது.

ஏனைய நாடுகள் கவலை அறிக்கைகளையும் சில கண்டன அறிக்கைகளுடன் தமது கடமைகளைச் செய்து முடித்தன.

அமெரிக்கா உலக வல்லரசாக ஆதிக்கத்தைக் கொண்டிருந்தாலும் பிராந்திய வல்லரசுகள் நிலையில் சீனா, இந்தியா போன்றவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

தென் ஆசிய நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவுகள், பூட்டான், நேபாளம், பாகிஸ்தான் போன்றவை மீது இந்தியாபொருளாதார, இராணுவ மக்கள் பலம் கூடிய வல்லரசாக ஆதிக்கம் செலுத்தும் நிலையிலுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவிற்கு சவால் விடுக்கும் நிலையிலிருந்தாலும் இந்தியாவை கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை.

இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்த நாடெ ன்பதாலும் இருபது மைல்களாலேயே பிரிக்கப்பட்டு இருப்பதும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் தொப்புள்கொடி உறவு முறையே இருக்கின்றதெனக் கூறலாம். மேலும் கலாசார, சமய, மொழி ஒற்றுமைகள் இரு நாட்டையும் பிணைத்து நிற்கின்றன. பொருளாதார ரீதியில் இலங்கை இந்தியாவிடமிருந்தே பெரும்பாலான பொருட்களை இறக்குமதி செய்கின்றது.

இக் காரணங்களால் இலங்கை இந்தியாவின் தொடர்புகளை எக்காலத்திலும் துண்டிக்க முடியாத நிலையில் இருக்கின்றது.

இதே காரணங்களுக்காக இந்தியாவும் தனது இராணுவ, பொருளாதார பலங்களினால் இலங்கையை கட்டுப்படுத்த கூடிய நிலையிலும் இருந்து வருகின்றது. இலங்கை விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவைப் பகைத்துக் கொள்ள முடியாத நிலையிலும் தொடர்புகளைத் துண்டிக்க முடியாத நிலையிலும் இருந்து வருகின்றது.

இந்திய ஆதிக்கத்துக்கான எதிர்ப்புணர்ச்சிகளை இந்தியாவின் எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தானுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நட்புறவை வளர்க்கும் முயற்சிகளிலீடுபடுவதன் மூலம் நிதியுதவி, இராணுவ உதவிகளைப் பெறும்போது இந்தியா இதற்கு இரண்டுபடி மேலாக தனது இராணுவ, நிதியுதவிகளை அளிப்பதற்கும் தள்ளப்படுகின்றது.

எவ்வாறாயினும் சரித்திர சம்பவங்களும் தமிழக படையெடுப்புகள் போன்ற கடந்த கால கசப்பான அனுபவங்கள் சிங்கள தேசத்தில் பயம் கலந்த பீதியை நிரந்தரமாகவே ஏற்படுத்திவிட்டிருக்கின்றதெனலாம்.

2015 ஆம் ஆண்டளவில் இந்தியா முழு அந்தஸ்தை கொண்ட வல்லரசாக மாறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தெற்காசியப் பிராந்திய நாடுகளின் பெரிய அண்ணனை இந்தியாவிற்கு பாகிஸ்தான் எரிச்சலூட்டும் செயல்பாடுகளை மேற்கொண்டாலும் இந்தியாவின் ஆதிக்கம் பாதிக்கப்படமாட்டாது.

இந்தியாவின் நேரடி, மறைமுகமாக ஆதிக்க வெளிப்பாட்டுச் செயல்கள் இலங்கை, பங் களாதேஷம், நேபாளம், பூட்டான், மாலைதீவுக ளில் கணிசமான அளவுக்கு பொருளாதார இரா ணுவ உதவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பொருளாதாரமும் உலக சந்தையில் அதன் பங்களிப்பும் முக்கியத்துவம். அமெரிக்கா உட்பட ஏனைய ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தின் வளர்ச்சியு டன் பின்னிப் பிணைந்து நிற்கின்றன. மேலும் அமெ?க்காவும் சீனாவின் வல்லரசு நிலையை யும் வலிமையையும் கட்டுப்படுத்தும் நோக்கத் துடன் இந்தியாவும் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டு வருகின்றது. இதற்கு உதா ரணமாக அமைந்தது அண்மையில் செய்யப் பட்ட அணு சக்தி ஒப்பந்தம்.

இக்காரணங்களால் இலங்கை போன்ற நாடுகள் மீதான இந்தியாவின் அரசியல், இராணுவ நகர்வுகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளோ, அமெரிக்காவோ, ஜப்பானோ, சீனாவோ குரல் எழுப்ப முடியாத நிலையிலிருக்கின்றன. ஒரு வேளை இந்தியா, இலங்கை மீது தற்காலிக படையெடுப்பை மேற்கொண்டு ஒரு அரசியல் தீர்வைத் திணித்தாலும் அதுவும் உலக நாடுகளின் எதிர்ப்பின்றி முடிவடையுமெனக் கூறலாம்.

இவ்வாறான உலகச் சூழ்நிலையில் இந்தியாவால் மட்டுமே இலங்கையைத் தட்டிக்கேட்க முடியும். அல்லது முதுகில் தட்டி உற்சாகமளிக்கும். இந்தியாவின் மத்திய அரசு இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை நினைத்தால் இருபத்தி நான்கு மணித்தியாலயங்களில் யுத்தத்தை நிறுத்தி ஒரு மாத காலத்தில் அரசியல் தீர்வை காணமுடியும். ஆனால் இது நடக்குமா? நடக்காதெனவே கூறலாம்.

ஏனெனில் இந்தியா தற்பொழுது பல்வேறு காரணங்களுக்காக புலிகளை அழிக்கும்த்துஇன்னொரு நோக்க டன் உள்ளது.

இதன் முழு நிதி, இரா ணுவ உதவிகளும் தாராளமாக இலங்கைக்கு கிடைத்து வருகையில் இது இலங்கை அரசாங்கத்திற்கு பாலில் விழுந்த பழம்போல் உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுத்திருக்கின்றது.

புலிகளின் நியாயபூர்வமான போராட்டத்தையும் தமிழர்கள் இலங்கையில் அனுபவித்து வரும் அவல நிலைமைகளை வெளியுலகத்திற்கு காட்டி பல சவால்களையும் முறியடித்து அடிபணியாது நின்ற கொள்கைகளையும் புறந்தள்ளி புலிவேட்டையென ஒரு இனத்தையே அழித்துவரும் செய்கைக்கு உதவுவது தமிழினத்தின் மீதுள்ள வெறுப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகின்றதெனலாம்.

தமிழ் மக்களின் வாழ்வு, வளம், கல்வி, சொத்துக்கள் அழிக்கப்பட்டு வருவதை இந்தியாவாலேயே தடுக்க ?டியும். ஆனால் தடுக்க மாட்டாது போலவே தான் தோன்றுகின்றது. ஏனைய நாடுகளுக்கும் இது பற்றிய கரிசனையும் இல்லை.

இலங்கைக்கு ஒரு இயற்கை வளம் பொரு ளாதார பலம், இராணுவ கேந்திர முக்கியத்துவங்களை (திருகோணமலை, காலி துறைமுகங்கள் போர்க் காலங்களில் பயன்படுத்தக் கூடியவை என்பதைத் தவிர) கொண்டிருக்காமை இதற்கான காரணங்களாகும். மேலும் மேல் நாடுகளின் பாரிய முதலீடுகளைக் கொண்டிராத நாடாகவும் இலங்கை விளங்குகின்றது.

இதனால் இலங்கைத் தமிழர்களை காக்கும் தலைவிதி தற்பொழுது எந்த நாட்டிடமுமில்லை. ஒருவேளை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை, பொதுச் சபைகளில் எந்த நாடாவது இலங்கைப் பிரச்சினையை எடுத்து வர முயற்சித்தாலும் அதுவும் இந்தியாவால் முறியடிக்கப்பட்டு விடுமெனச் சொல்லலாம். இதற்கு முன்பு ஐ.நா. சபையில் மனித உரிமை குறித்த விடயங்களில் இலங்கையை இந்தியா காப்பாற்றியது தெரிந்ததே.

இதற்கப்பால் ஐ.நா. சபை அமெரிக்காவின் நிலைப்பாடுகளுக்கு முன்பாக பல்லில்லாத பாம்பு போல் சீறிக் கொள்ளுமே தவிர கடிக்க முடியாத நிலையிலேயே பல சந்தர்ப்பங்களிலும் இருந்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வாழ்வா, சாவா என்ற நிலைமையில் இலங்கைத் தமிழர்களை யார் காப்பாற்றுவார்? ஈழத் தந்தை செல்வநாயகம் கூறியபடி "கடவுள் தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றார்'. ஆனால் இதுவரை இந்தக் கடவுள் காப்பாற்றவில்லை. இனிமேல் காப்பாற்றுவாரா என்பதும் இந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

கடவுள் வந்து காப்பாற்றுவதற்கு முன் காப்பாற்றக் கூடியவர்களாக இருப்பவர்கள்இலங்கை இந்திய புலம்பெயர் இளைய சமூதாயத்தினரே. குறிப்பாக மாணவ சமுதாயத்தையே சார்ந்திருக்கின்றது. இந்த மாற்றம் வரும் வரையும் இலங்கைத் தமிழர்கள் கண்டன அறிக்கைகளையும் கவலை அறிக்கைகளையும் உலக நாடுகளிலிருந்தும் ஐ.நா. சபையிலிருந்தும் கேட்டுக் கொண்டே தான் காலத்தை கழிக்க வேண்டும்

Comments