கொழும்பு பெரியாஸ்பத்திரியில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் ஊடுருவல் திடுக்கிடும் தகவல்

யாழ்ப்பாணத்திலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக கொழும்புவந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு அடிகாயங்களுடன் கண்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளார். கடந்தமாதம் 26 ஆம் திகதி சத்திரசிகிச்சை ஒன்றுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அழைத்து வரப்பட்ட இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார்.

கடந்த 11 ஆம்திகதி வைத்தியசாலை ஊழியரான புஞ்சிபண்டார என்பவரால் இவர் வெளியே அழைத்துச்செல்லப்பட்டபொழுது வைத்தியசாலை வாசலில் வெள்ளைவானில் நின்றவர்களால் இவர் கடத்திச் செல்லப்பட்டதாக மருதானை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது. அதன்பின் 11 நாட்களுக்குப் பின்னர் கண்கள் கட்டப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் ஜா-எலவில் மீட்கப்பட்டுள்ளார்.

கரவெட்டி நெல்லியடியைச் சேர்ந்த 28 வயதான முருகதாஸ் பிரசாத் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல்போய் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டவராவார்.

எனினும் இது தொடர்பாக நாம் ஆராய்ந்தபொழுது. சில திடுக்கிடும் தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. இவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு அழைத்துவரப்பட்டபொழுதே புலனாய்வுப் பிரிவினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பின்தொடர்ந்து அவதானித்து வந்ததாகவும். சத்திரசிகிச்சை முடியம்வரை இவர் தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வந்ததாகவும். பின்னர் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்காக வேலைசெய்யும் வைத்தியசாலை ஊழியரான புஞ்சிபண்டார என்பவரால் இவர் அழைத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலை வாசலில் வெள்ளைவானில் இருந்தவர்களிடம் கொடுக்கப்பட்டதாகவும் வைத்தியசாவையிலிருந்து நம்பகமான தகவலொன்று எமக்குக் கிடைத்துள்ளது.

கொழும்பு தேசியவைத்தியசாலையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்காக வேலைசெய்வதற்காக கொஞ்சம் தமிழ்தெரிந்த சிங்களவர்கள் சிலரை இராணுவ பலனாய்வுப்பிரிவு முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரோஹித் என்பவர் நியமித்துள்ளார். இவர்கள் இவ்வைத்தியசாலையில் பல்வேறு பிரிவுகளிலும் வேலைசெய்து வருகின்றனர். பிரேத அறை, கழிவகற்றும் தொழிலாளர்களாக, நோயாளர்களை பராமரிப்பவர்களாக. வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் என இங்கு இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கொடுப்பதற்காக சிங்களவர்களும் தமிழர்கள் சிலரும் பெருந்தொகையான பணத்தைப் பெற்று வேலைசெய்து வருவதாக தெரியவருகிறது.

அதைவிட வைத்தியசாலைக்கு வெளியில் ஓட்டோ ஓடுபவர்களும் புலனாய்வுப்பிரிவினருக்கு தாம் ஏற்றிச்செல்லும் தமிழர்கள்பற்றிய தகவல்களைக் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றது.

எனவே எமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பல்வேறு தேவைகளுக்காக செல்லும் தமிழ்மக்கள் மிகுந்த அவதானத்துடன் நடக்கும்படியும், அநாவசியமாக எவருடனும் உரையாடவேண்டாம்

Comments