ஈழம்.. இந்திய இராணுவத்தின் இறுதித் தாக்குதல்.

கடந்த திங்கட்கிழமை 6 ந்திகதி ஒரு செய்தி.. புதுக்குடியிருப்பில் நச்சு இரசாயனக்குண்டுத் தாக்குதல்.ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் பலி..அதுமட்டுமல்ல புலிகள் இயக்கதின் சில தளபதிகளும் போராளிகளும்.. கொல்லப்பட்டதாக இலங்கையரசாங்கம் செய்திகளையும் வெளியிட்டுச் சில படங்களையும் வெளியிட்டுள்ளது..

உலகத் தமிழர்கள் அனைவரின் உணர்வுகளையும் ஒருகணம் உறையவைத்த இந்தச் செய்தியானது தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ அந்தந்த நாடுகளிலெல்லாம்..இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கெதிரான போராட்டமாக வெடித்துள்ளதுடன் ஜரோப்பிய நாடுகளின் நாடாளுமன்றங்களை முற்றுகையிடும் போராட்டமாகவும் மாறியுள்ளது.

இன்றைய செய்திகளின்படி தமிழ்நாட்டிலும் இந்த நச்சு இரசாயனத்தாக்குதலுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றது. தாக்குதல் நடந்தது புதுக்குடியிருப்பில். பொதுவாக வெளியுலகத்தின் பார்வையில் அங்கு புலிகள் என்கிற ஒரு சிறு அமைப்பிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் சண்டை நடக்கின்றது என்கிற ஒரு மாயைத் தோற்றத்தைக் காட்டி நிற்கும் வேளையில், இந்தத் தாக்குதலில் இந்திய இராணுவத்திற்கும் இந்திய அரசிற்கும் எதிராக ஏன் போராட்டங்கள் நடக்கின்றது?? என்பது பலரின் கேள்வியாக இருக்கும்…

இன்றைய யுத்தத்தில் ஈழத்தமிழர் போராட்டத்தினை எப்படியாவது நசுக்கிவிட வேண்டுமென்று தீர்மானித்துள்ள இந்திய அரசு இலங்கையரசிற்கு ஆயுதங்கள் ஆலோசனைகள் மற்றும் தொழில் நுட்பஉதவிகள் அனைத்தையும் இந்தியாவே வழங்கி வருகின்றதென்பது அனைவரிற்கும் தெரிந்த விடயம். அதனை இந்தியத் தலைமை அமைச்சர் உட்பட இந்திய அதிகாரிகளும் , இலங்கையரசும் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்ட விடயங்கள்தான்.

ஆனால் இதுவரை இந்திய இலங்கை அரசுகளால் ஒப்புக்கொள்ளப்படாத விடயம் என்னவெனில் சுமார் ஜந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவமும் நேரடியாக இலங்கைச் சமர்க்களத்தில் இலங்கை இராணுவத்துடன் புலிகளிற்கெதிரான சமரில் பங்கேற்கிறார்கள் என்பது தான். இருபது மாதங்களிற்கு மேலாக தொடர்ந்து புலிகளுடன் சண்டையிட்டு வரும் இலங்கைப் படைகளின் முக்கிய விசேட படையணியான 58 மற்றும் 59 வது படையணிகள், புலிகளின் ஊடறுப்புத் தாக்குதல்களினால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு இழப்புக்களை சந்தித்து ஆளணியற்று உள்ளிருந்து உதிர்ந்து போன ஒரு கூடாக மாறிவிட்டதனால் ஆலோசனைகளையும் ஆயுதங்களையும் கொடுத்துக் கொண்டிருந்த இந்திய அரசு உடனடியாகவே இலங்கையரசின் இழந்து போன ஆட்பலத்தினையும் ஈடு செய்வதற்காக இந்திய இராணுவத்தினையும் இலங்கையில் களமிறக்கி இலங்கை இராணுவத்தின் 58, மற்றும் 59 வது படையணிகளில் இணைத்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் கர்நாடகா மானிலத்திலுள்ள பெல்கம் இராணுவ முகாமிலிருந்தே கடல்வழியாக அனுப்பப் பட்டிருப்பதால் பெரும்பாலானவர்கள் கன்னடர்களே.

இந்தியாவின் நோக்கம் என்னவெனில் இந்தியாவின் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்னராக என்ன விலைகொடுத்தாவது இந்தமாதம்(சித்திரை) 15 ந் திகதிக்குமுன்னர் புலிகளை முற்றாக அழித்துப் புலிகளின் தலைமையையும் கொலைசெய்து விடுவதோடு ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதேயாகும். அப்படி நடந்து விட்டால் காங்கிரஸ் அரசிற்கு அது ஒரு தேர்தல் பிரச்சாரமாக மட்டுமல்ல தெற்காசிய பிராந்தியத்தில் மாலைதீவிற்கு அடுத்தபடியாக இன்னொரு குட்டி நாடான இலங்கையையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இப்போதைக்கு இந்த இரண்டு நாட்டிற்காவது வல்லரசாக இருந்துவிட்டு போகலாம் என்பது இந்தியாவின் ஆசை.

அதே நேரம் இலங்கையரசிற்கோ ஈழத்தமிழர் போராட்டத்தை நசுக்கிவிட்டால் அது சிங்களவரின் சித்திரைப்புத்தாண்டுச் செய்தியாக அறிவிப்பது மட்டுமல்ல.அடுத்த தேர்தலிலும் ராஜபக்ச சிங்கள இனவாதத்தின் தலைவராகலாம். இது அவருடைய ஆசை.இவை எல்லாவற்றிற்கும் மேலாக மேற்குலகின் நிலை என்னவென்றால் கால் காசிற்கும் பிரயோசனமில்லாத சிறீலங்கா கடன் வாங்கியே சண்டையை நடத்திக் கொண்டிருப்பதால் சரிந்த பொருளாதாரத்தில் தாங்களே தள்ளாடும் பொழுது சிறீலங்காவிற்கு முண்டு கொடுக்க முடியாதது மட்டுமல்ல, *ஈழத்தில் தமிழர் மீதான படுகொலைகளை நிறுத்த உதவுங்கள்* என்கிற புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் வேறு நாளுக்கு நாள் அதிகரித்து மேற்குலகில் அரசு நிருவாகங்களை மட்டுமல்ல அவர்களது நாடாளுமன்றங்களையே முற்றுகையிடும் போராட்டமாக மாறியுள்ளது.

இந்த நேரத்தில் இலங்கை மற்றும் இந்திய அரசுகள்… ஈழத்தமிழர் போராட்டத்தினை நசுக்கியே தீருவோம் என நாட்குறித்து அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள் , அதற்குப் பின்னர் உங்களிற்கும் நிம்மதி எங்களிற்கும் பிரச்சனையில்லையென மேற்குலகிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளதனால் ஈழத்தமிழர் பிரச்சனையைத் துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் மேற்குலகின் தொண்டையில் சிக்கி விழிபிதுங்கி நிற்கும்வேளை எப்படியாவது சித்திரை மாதத்துடன் சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று மேற்குலகின் ஆசை.

இப்படி அவரவருக்குள் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதுதான் கடந்த சனிக்கழைமை 4 ந் திகதி புதுக்குடியிருப்பை நோக்கிப் பலமுனைகளில் முன்னேறிய இராணுவத்தினரை ஊடறுத்து புலிகள் ஒரு தாக்குதலை நடத்தினார்கள். இந்த ஊடறுப்புத்தாக்குதலில் இலங்கை இராணுவம் பாரிய இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தது.. மறுநாள் ஞயிற்றுக்கிழைமை இரவு புலிகள் இன்னொரு களமுனையை திறப்பதற்காக கனரக ஆயுதங்களை நகர்த்திக் கொண்டிருந்தவேளை, புலிகளின் சிறிய அசைவுகளையும் துல்லியமாகக் கவனித்துக் கொண்டிருந்த இந்திய கவீதுகள்(ராடர்கள்) புலிகளின் கனரக ஆயுதங்களுடனான அசைவினைக் கவனித்துவிட்டன. ஏற்கனவே புலிகளின் ஊடறுப்பு தாக்குதலால் இழப்பினைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இலங்கை இந்தியக் கூட்டுப்படையணியால் புலிகளின் இந்தப் புதிய நகர்வினால் எதிர்கொள்வது கடினம் என்று தெரிந்து கொண்ட இந்திய இராணுவ அதிகாரிகள் உடனடியாக அதனைத் தடுத்துநிறுத்தத் திட்டமிட்டுப் பேரழிவினை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட நச்சு இரசாயனக் குண்டுகளைக் தருமபுரம் பகுதியில் அமைந்திருக்கும் இந்திய விசேட படையணி முகாமிலிருந்து புதுக்குடியிருப்பை நோக்கி ஏவப்பட்டது.

இரசாயனக் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததும் காற்றிலே நச்சுத்தன்மை சில கி.மீற்றர்களிற்கு பரவும் என்பதால் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உட்டபட போராளிகளும் மூச்சுத் திணறல் எற்பட்டு இரசாயனத் தாக்கத்தால் மரணமடைந்துள்ளது மட்டுமல்ல, இப்படியான தாக்குதலை இந்திய இராணுவ அதிகாரிகள் திடீரென நடாத்துவார்களென அறியாமல் முன்னேற்றபாடாக நச்சு வாயுவிடமிருந்து காத்துக்கொள்ளும் முகமூடிகள் அணியாமல் அந்தப்பகுதியில் சண்டையில் இருந்த இலங்கை இந்தியப்படைகளும் இறந்துள்ளனர். இந்த விடயத்தினை இரண்டு அரசுகளுமே மூடி மறைத்துள்ளனர்.

ஆனாலும் அதிகாரங்களின் ஆசைகளா?? அல்லது ஈழத்தமிழரின் துயரமும் துன்பங்களும் நிறைந்த அவர்களின் நியாயமான போராட்டமா?? எது வெற்றி பெறும் என்பதனை இனிவரும் சில நாட்கள் தீர்மானிக்கும்.

Comments