லட்சம் தமிழர்களை கொன்ற இராகுல் காந்தியே திரும்பிப் போ! - மன்சூர் அலிக்கான் திடீரென கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

இராஜிவ் காந்தியின் மகனும் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களுள் ஒருவருமான இராகுல் காந்தி உலங்கு வானூர்தி மூலம் மக்களாவை பிரச்சாரத்திற்காக மாலை திருச்சிக்கு வந்து சேர்ந்தார்.

அப்போது மக்களவையின் திருச்சி வேட்பாளரும் நடிகருமான மன்சூர் அலிக்கான் மத்திய பேருந்து நிலையத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து, கையில் கருப்பு கொடியேந்தி, 'லட்சம் தமிழர்களை கொன்ற இராகுல் காந்தியே திரும்பிப் போ!", தமிழின துரோகி இராகுல் காந்தியே தமிழகத்தில் கால் வைக்காதே!" என்று முழக்கமிட்டனர்.

முன்னறிவிப்பு ஏதுமின்றி, திடீரென மத்திய பேருந்து நிலையம் முன் முழக்கமிட்டதால், காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இராகுல் காந்தியின் உலங்கு வானூர்தி வெஸ்ட்ரீ என்னும் பள்ளி மைதானத்தில் இறக்கப்படும் இடம் மத்திய பேருந்து நிலையம் அருகில் இருந்ததால், காவல்துறையினர் அதிர்ச்சிக்கு காரணம். காவல்துறையினர், உடனடியாய் முழக்கமிட்ட அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

மன்சூர் அலிக்கான் அவ்வப்போது, அதிரடியாய் பல நிகழ்வுகளை செய்து வருவது, திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இராகுலின் வருகையையொட்டி திருச்சி முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர்.

இத்தோடு மதுரை செல்லும் சாலை போக்குவரத்து ஒரு மணி நேரமாய் ஸ்தம்பித்துள்ளது. காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments