அனைத்துலக சமூகம் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும்: பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள்

அனைத்துலக அரசுகளும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு போன்ற அனைத்து நிறுவனங்களும் அமைப்புக்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவியின் நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழர்களுக்கு நீதியையும், இலங்கையிலும் தெற்காசியாவிலும் அமைதியையும் கொண்டு வரவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழமே நிரந்தரமான ஒரே தீர்வு என இந்தியாவின் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தெரிவித்த ஆணித்தரமான கருத்தை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைப்புக்களுடன் பிரித்தானிய தமிழர்களும் இணைந்து வரவேற்கின்றனர். அத்துடன் இது எம்மை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் 60 மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழர்களின் முதலமைச்சராக இரண்டு தடவைகள் இருந்த தமிழ்த் தலைவரின் இந்தக் கூற்று எமது பிரச்சினை தொடர்பாக வெளியிடப்பட்ட இந்தக் கருத்து, மிக முக்கியமாக கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது. 

தமிழர்களின் கோரிக்கைகளுக்கு நீண்ட காலமாக உணர்வுபூர்வமாக ஆதரவளித்து வரும் தமிழகத்தின் தமிழ் தலைவர்களுக்கு எமது நன்றியறிதலை வெளிப்படுத்தும் இதேவேளை, தமிழரின் போராட்டம் மிக முக்கியமான காலகட்டத்தில் உள்ள இந்த தருணத்தில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் வெளியிட்ட இந்த கருத்து எம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

இந்நிலையில் அனைத்துலக அரசுகளும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு போன்ற அனைத்துலக நிறுவனங்களும் அமைப்புக்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவியின் இந்த நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழர்களுக்கு நீதியையும், இலங்கையிலும் தெற்காசியாவிலும் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டு வருமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.

தொடர்புபட்ட செய்திகள்:

Ø ஜெயலலிதாவின் குரல் ஈழத்தில் விடியலை உறுதிசெய்ய வேண்டும்: மலேசிய தமிழர்கள் வாழ்த்து

Ø "ஈழத் தமிழர்களுக்கு நீங்களே இன்று எதிர்காலம் பற்றிய நம்பிக்கை": ஜெயலலிதாவுக்கு கனடிய தமிழர் பேரவை வாழ்த்து

Ø "உங்கள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைய வேண்டும்": ஜெயலலிதாவுக்கு பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் வாழ்த்து

Ø இருளினைத் துடைத்தெழுந்த உதயதாரகை போல உங்களின் தனித் தமிழீழ அறிவிப்பு: ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் இருந்து அமைதிகாண் அமைப்பு வாழ்த்து

Ø எம்.ஜி.ஆரின் கொள்கை உறுதிப்பாட்டை உங்களில் காண்கின்றோம்: ஜெலலிதாவுக்கு நோர்வே அன்னை பூபதி கலைக்கூடம் பாராட்டு

Ø
உங்கள் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் பின்னால் உலகத் தமிழனம் துணையிருக்கும்: ஜெயலலிதாவுக்கு நோர்வே தமிழர்கள் ஆதரவு

Ø இதயக் கதவுகள் திறந்து 'தனி ஈழம்' அமைப்பேன் என்ற நீங்களே எம் நம்பிக்கை ஒளி: இத்தாலிய தமிழர்கள் ஜெயலலிதாவுக்கு நன்றி

Ø தமிழீழ விடுதலையை ஜெயலலிதாவின் பாசப் பிணைப்பு விரைவுபடுத்தும்: சுவிஸ் தமிழர் பேரவை

Ø உலகம் கைவிட்ட மக்களை ஈழம் அமைத்து நீங்கள் காப்பாற்றுங்கள்: ஜெயலலிதாவிடம் கனடிய தமிழ் பட்டதாரிகள் வேண்டுகோள்

Ø நீங்களே எங்கள் நம்பிக்கை; புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் நீங்கள் வாழுங்கள்!: ஜெயலலிதாவுக்கு அவுஸ்திரேலிய தமிழர்கள் வாழ்த்து

Ø "ஈழத் தமிழர் ஆதரவுக் கோட்டை வெல்லட்டும்!" - ஜெயலலிதாவுக்கு அமெரிக்க தமிழர்கள் வாழ்த்து!

Ø ஜெயலலிதாவுக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவிப்பு

Ø ஜெயலலிதாவின் "தனி ஈழ" நிலைப்பாடு: கனடிய தமிழர்கள் மகிழ்வு; வரவேற்பு!

Comments