ரொறன்ரோன்ரோவில் இன்று நடைபெறவிருந்த அடங்காப்பற்று நிகழ்வு ஒத்திவைப்பு

கனடாவின் ரொறன்ரோ நகரில் இன்று நடைபெறவிருந்த 'அடங்காப்பற்று' நிகழ்வும் மனிதச் சங்கிலிப் போராட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக கனடியத் தமிழ் மாணவர்களும் கனடியத் தமிழர் சமூகமும் தெரிவித்திருப்பதாவது:

பல தரப்பினரது அவசர வேண்டுகோள்களுக்கு இணங்க ரொறன்ரோவின் நகரின் மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (05.05.09) நடைபெறவிருந்த 'அடங்காப்பற்று' மற்றும் மனிதச்சங்கிலி - 3 ஆகிய நிகழ்வுகள் தற்காலிகமாக பின்போடப்படுகின்றது.

அதேவேளையில் ஒன்ராறியோ மாநில நாடாளுமன்றம், குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெறும் உண்ணாநிலைப் போராட்டம் உறுதியுடன் பாரிய அளவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

எமது தாயக அவலம் தீர்க்கும் வரை என்றும் அடங்காது எமது 'அடங்காப்பற்று'.

'அடங்காப்பற்று' மற்றும் மனிதச்சங்கிலி - 3 ஆகிய நிகழ்வுகளின் மேலதிக விபரங்களை விரைவில் அறியத்தரப்படும்.

இந்த அவசர அறிவித்தலை உடன் எமது தமிழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரும் வேண்டப்படுகின்றனர்.

உறுதியும், ஓர்மமும் கொண்ட ஒற்றுமைப்பட்ட சமூகமாக எமது தாயக அவலம் தீரும்வரை தொடர்ந்தும் முன்னெறுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Comments