இறுதித் தமிழன் இருக்கும் வரை ஈழப் போராட்டம் தொடரும்......

உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா ஈழத் தமிழர்களே இவன் பகத் சிங்கின்

ஜாலியன் வாலாப் படுகொலை என்பது இந்தியாவில் 1919 ஏப்பிரல் மாதம் 13 நாள் அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் பிரித்தானிய படையினரால் நடாத்தப்பட்ட மனிதப் படுகொலையாகும்.

படுகொலையை நிகழ்த்தியது "மேஜர் டயர்", படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O' Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி. பெண்கள் குழந்தைகள் வயோதிபர்கள் என அனைவரையும் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு பிரித்தானியப் படை கொன்று குவிக்கின்றது.

கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் சுடப்பட்டன. பிரித்தானிய அரச மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர். ஆனாலும் தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட 1000 பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். மக்கள் மரண ஓலத்துடன் சாகின்றனர், அவன் நெஞ்சத்தை பிளக்கிறது. குருதி தோய்ந்த அங்கிருக்கும் மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொள்கிறான் அந்த இளைஞன்.

தாக்குதல் செய்ய சொன்னவனை (Michael O'Dwyer) பழி வாங்க துடிக்கிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். இவ்வாறு பலகாலம் தேடி அலைந்த பின்னர் ஒரு நாள் நண்பன் மூலமாக அறிகிறான் அவன் தேடிய Michael O' Dwyer உத்தியோக மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.

துவள வில்லை உதம் சிங், ஈழத் தமிழனைப்போல... நெஞ்சில் கொண்ட வைராக்கியம் சற்றும் குறையாதவனாக அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து Michael O' Dwyer ஐ தேடுகிறான். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடுகிறான், Michael O' Dwyer இறந்திருக்கலாம், அல்லது அவன் வேறு நாட்டிற்கு சென்றிருக்கலாம். அங்கே கொல்லப்பட்ட மக்களை நினைத்து தேடுகிறான். ஆனால் தனது லட்சியத்தை மறக்கவில்லை

தேடி, கடைசியாக 13 மார்ச் 1940 ஆண்டு ஒரு பொது விழாவில் தேடிய Michael O ' Dwyer காண்கிறான், அவன் எப்போதுமே தன்னுடன் கைத்துப்பாக்கியை வைத்திருப்பான். அவன் கண்களால் நம்பவே முடியவில்லை. துப்பாக்கியை எடுத்தான் குறிவைத்துச் சுட்டான், மண்ணில் வீழ்ந்தான் Michael O' Dwyer. மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறான்.. அவர்கள் மூன்று பேரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington பிழைத்து கொள்கிறார்கள்.

பின்னர் சில காலம் கழித்து ஒரு விழாவில் பொலிசார் அவரை கைது செய்கின்றனர். மூன்று மாதங்களில் விசாரனை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31 யூலை 1940 இல் தூக்கில் இடுகிறார்கள்.

இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 1000 அப்பாவி பொதுமக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார். மரணமாகிறார்.

பல வருடங்கள் கழிந்தன, 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்களை தோண்டி எடுக்க இந்திய அரசு பிரித்தானியாவை கோருகிறது. வேறுவழியின்றி பிரித்தானிய அரசும் உதம் சிங்கின் எச்சங்களை இந்தியாவுக்கு அனுப்ப ஒத்துக்கொள்கிறது.

இந்தியா கொண்டு வரப்பட்ட அவனின் எச்சங்களுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்கப் படுகிறது.

அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ் சூட்டினார் இந்திராகாந்தி அம்மையார்.

நான் சிறுவயதில் படித்த கதை இது. இதே நிலவரம் தான் இன்று ஈழத்திலும். நடைபெறுகிறது. அப்போது இளைஞனாக இருந்த உதம் சிங் எம்மைப் போல எல்லாம் முடிந்துவிட்டது என எண்ணவில்லை. அதற்காக நாம் பழிவாங்கச் சொல்லவில்லை அல்லது மாறாக பிரித்தானிய அரசை குறைகூறவில்லை. அங்கு ஈழத்தில் இறந்த அனைவரையும் நாம் நெஞ்சில் நிலை நிறுத்திக்கொள்வோம். இங்கு எமது போராட்டம், அரசியல் முன்நகர்வுகளை மேற்கொள்வோம். அழுது புலம்பி இலாபமில்லை. அடுத்த உதம் சிங் போல நாம் புறப்படுவோம்..

அதாவது இறுதித் தமிழன் இருக்கும் வரை ஈழப் போராட்டம் தொடரும்......

Comments