இழி நிலையில் நாயிலும் கேவலமாய் தமிழன்?

உண்மையை உணரமறுக்கும் சிங்களமும்,உண்மைக்காய் உழைக்க மறுக்கும் தமிழனும்

போர் முனையில் பலரிடமும் ‘கமரா” மற்றும் ‘கமராபோன்” இருந்தமைக்கு பாதுகாப்பு அமைச்சே ஆதாரம். சனல்-4 இல் ஒளிபரப்பாகி உலகத்தின் கவணத்தை ஈர்த்த அந்தக் கொலைக் காட்சி யாவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இலங்கையில் நடந்து முடிந்தாக கூறப்படும் யுத்தத்தின் இறுதி மாதங்களில் பதிவு செய்யப்பட்ட அந்த ஒளிநாடா பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

தமிழ் மக்கள் நாள்தோறும் கண்ணால் கண்டும்,அனுபவித்தும் வரும் இத் துன்பங்கள் ஊடக நிறுவனங்களின் செய்தி பஞ்சத்தை பொறுத்து தான் வெளிவரும். இதனால் பல சம்பவங்கள் பாதிக்கப்பட்ட நபருடன் முடிவடைந்ததுண்டு. இவ் உண்மைச் சம்பவங்கள் பலவும் அப்படியாம்?! இப்படியாம்?! மெய்யே? என்று அச்சமூட்டும் ஒரு வதந்தி போல அது திரிபடைந்ததும் உண்டு.

கடந்த 30 வருட கால யுத்தத்தில் தமிழ் மக்கள் விலங்கினத்தை விட கேடுகெட்ட இனமாக கருதப்பட்து போலவே இருந்தது.

இறுதி சமாதான நடவடிக்கை காலத்தில் நாளுக்கு இரண்டு மூன்று என மாத்திரை விழுங்கிய கணக்கில் கொலையாளிகள் தமது மனநோயை தீர்த்துக் கொண்டிருந்தனர். ‘நாயைச் சுடுகின்ற மாதிரி மனுஷனைச் சுடுகின்றான்” என்ற வழக்க சொல் ‘ மனுஷனைச் சுடுகிற மாதிரி நாயைச் சுடுகின்றான் என இரண்டு நாய்கள் தமக்குள் பேசின” என்று நகைக்குமளவுக்கு கொலைகள் இடம்பெற்றது.

கடந்த 30வருட யுத்த காலத்தில் அனுபவித்த துன்பங்கள் பலரின் மனக் கண்களில் இன்றும் இருக்கின்றன. இந்திய இராணுவத்தின் பல படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள், என்பனவும் இதில் அடங்கும். இந்திய இராணுவத்தின் ஒரு சுற்றி வளைப்பின் போது இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டான் அவன் அன்று அம்மா என்று கதறிய கூக்குரல் இன்று வரை என் காதில் கேட்டுக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் நான் அப்போது சிறுவனாயிருந்தேன் என் மனது பாதிப்புக்குள்ளானது.

அடக்கு முறையின் ஒவ்வெரு உதாரணங்களையும் ஒவ்வொரு தமிழனிடமும் கேட்டு அறிந்து கொள்ளலாம். இப்படியாக மறைக்க முற்பட்ட சாட்சிகளில் ஒன்றாக இருந்த அந்த படுகொலை காட்சியாக்கப்ட்டு உலகின் கண்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

இச் சாட்சியை கண்டு அஞ்சியது மகிந்த அரசு.

உண்மையில் குறிப்பிட்ட காட்சி திட்டமிட்ட பரப்புரைக்காக காட்சிபடுத்தப்பட்டதல்ல.

கொலைவெறி இன்பத்தை பகிர்வதற்காக பதிவு செய்ப்பட்ட குறிப்பிட்ட காட்சியானது ஜனநாயகத்தை விரும்பும் உண்மையான நபர் ஒருவரின் கைக்கு கிட்டியது தான் இதன் வெற்றி. இப்படி வம்புக்காக எடுத்த படங்கள் சில இணையத் தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். போர் முனையில் இருந்த இராணுவத்தினர் பலரிடமும் ‘கமரா” மற்றும் ‘கமராபோன்” இருந்தன இதற்கு பாதுகாப்பு அமைச்சு பல தடைவைகளில் வெளியிட்ட போர் தொடர்பான படங்களே ஆதாரம்.

சிங்கள தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் தமிழனை வெற்றி கொண்டதாக கூறப்படும் இக் காட்சியை பார்த்து பாற்சோறு பொங்கி, புத்தனுக்கும் கொடுத்து புதல்வருக்கும் கொடுங்கள்.


சிங்கள தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் தமிழனை வெற்றி கொண்டதாக கூறப்படும் இக் காட்சியை பார்த்து பாற்சோறு பொங்கி, புத்தனுக்கும் கொடுத்து புதல்வருக்கும் கொடுங்கள்.

சிங்கள தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் தமிழனை வெற்றி கொண்டதாக கூறப்படும் இக் காட்சியை பார்த்து பாற்சோறு பொங்கி, புத்தனுக்கும் கொடுத்து புதல்வருக்கும் கொடுங்கள்.

பெண் புலி உறுப்பினர் ஒருவர் களத்தில் தாம் கண்ட தகவல் என்று கூறுகின்றார்
ஆண் பெண் யாவரையும் நிர்வாணப்படுத்தி சோதனை செய்வதையும், குறிப்பிட்ட வயது தரத்தினரை தனியான அழைத்து சென்று சுட்டுக் கொள்வதையும் தாம் தொலைநோக்கி ஊடாக அவதானித்ததை கூறியிருந்தார்.
சனல்-4இல் ஒளிபரப்பப்பட்ட அந்த காட்சி உண்மைக்கு புறம்பானது எனவும் இது போன்ற செயல்களில் தம் படையினர் ஈடுபடவில்லை என்றும் இலங்கை அரசு ஆணித்தரமாக மறுக்கின்றது. (இலங்கையில் மனிதர்கள் எப்பொழுது மனிதாபிமானத்துடன் செயற்படுகின்றார்கள், மனிதனின் மரணப் படுக்கையான வேளையில், கடவுளின் இல்லமாக தெரியும் வைத்தியசாலையில் கூட அது இல்லை.)

இதை விட இராணுவத்தின் புலனாய்வுத் துறையின் பின்னனியுடன் இயங்கும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவும் அந்தக் கொலையில் ஈடுப்பட்டிருப்பவர்கள் புலிகள் எனவும் அதில் கொல்லப்படும் நபர் ஒருவர் புளொட்டின் வவுனியா உறுப்பினர் பாருக் எனவும் தெரிவித்திருந்தன. தெளிவாயிருந்த பலர் அவ் ஊடகங்களின் அச் செய்திகளுக்கு தமது விமர்சனங்களை தெரிவித்துள்ளதுடன் பாருக் என்பவர் தற்போது திரிகோணமலையில் வசித்து வருவதாவும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பல தமிழ் ஊடகங்கள் இனப் படுகொலையை கூறிவந்த போதும் அத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறிவந்த பிறமொழி ஊடகங்களுக்கும் சர்வதேசத்திற்கும் இன்னொரு சாட்சியை ”இலங்கையின் ஜனநாயக ஊடகத்திற்கான அமைப்பு” உலகிற்கு உலகிற்கு முன்வைத்துள்ளது.

இங்கு கவணிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால். வெளிநாட்டில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து அரசு மேற்கொண்டு வரும் சதி முயற்சிகளில் தமிழ் மக்கள் தம்மை பாதுகாக்க வேண்டும் என்பதே.

1.ஏற்கனவே போரில் ஈடுபட்ட இராணுவத் தளபதிகள் சிலர் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர்,மற்றும் வெளிநாட்டு வீதிகளில் போராடவும் தொடங்கியுள்ளனர்,

2.தவிரவும் விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு என்ற பேரில் புலனாய்வாளர்கள் வெளிநாடகளுக்கு குறிப்பாக மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு அனுப்பட்டுள்ளனர்,

3.வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்ற மாயயை தேற்றுவித்து புலம் பெயர் தமிழர்களின் மன நிலையை கவருதல் போன்ற பல கோணங்களில் வலைவீசப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையிலேயே குறிப்பிட்ட சில ஊடகங்கள் அரசிலும் அதிக அக்கறையாக இவ்விடயத்தை மறுத்து செய்திகளை வெளியிடுவதுடன் நாட்டில் புலிகள் இல்லை என்று அரசு கூறுவதற்கு முரணாக புலிகளுக்கு எதிரான தமது வெறுப்புனர்வை காட்டுகின்றனர்.

தவிர குறிப்பிட்ட ஒளிநாடா தொடர்பான பத்து நாள் விசாரனைகள் முடிவடைந்து அது தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டதுடன், ‘சனல்-4 நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கு சட்மா அதிபருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும். இது சனல்-4 நிறுவனத்திற்கு சாவலாக அமைவதுடன் ஏனையோருக்கு படிப்பினையாகவும் இருப்பதே எமது நோக்கம் என அமைச்சர் சமரசிங்க கூறியுள்ளார்.

‘தொடுகை வடிவ உலகில்” வாழுந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்து குறிப்பிட்ட விசாரனையாளர்கள் அறிக்கை மற்றும் விளக்கங்களை வெளியிட்டிருப்பது நகைப்புக்கிடமானது. கைத்தொலைபேசி கமராக்களின் தரத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை குறிப்பிட்ட விசாரனைக் குழு முதலில் ஏற்க வேண்டும்.

மேலும் காட்சி எதில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை விட சம்பவமே முக்கியமானது. குறிப்பிட்ட விசாரனையாளர்கள் காட்சிப்படுத்தப்பட்ட கருவி எது என்பதற்கான விளக்கத்தை முன்வைக்கின்றனரே தவிர அக்காட்சி பொய்யானது என்று கூறமுடியவில்லை.

பதிவுசெய்யப்பட்ட கருவியை எது என்பதை நிருபிப்பதன் மூலம் அச்சம்பவத்தை மறைக்க முடியாது. அச் சம்பவத்தை மூடிமறைத்தாலும் இது போன்ற அதிர்ச்சி தரும் ஏனைய விடயங்கள் எதிர் காலத்தில் அம்பலத்துக்கு வருவதை தவிர்ப்பதற்காண நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் முதற் கட்டமாக களநிலை படப்பிடிப்புக்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் முதற் கட்டமாக களநிலை படப்பிடிப்புக்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஆவணங்களை
படைநடைவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரிடம் இரகசிய உள்ளக புலனாய்வு விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஒலி,ஒளிப்பதிவு சாதனங்கள் வைத்திருந்த படையினர் இனம் காணப்பட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.

மேலும் அண்மையில் வீதி விபத்தில் இறந்ததாகக் கூறப்படும் ஜ.ரி.ன் ஊடகவியலாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கதைகள் கசிகின்றன.

கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்படும் படங்களின் தரம் கிடைக்கப்படும் ஒளியைப் பொறுத்தும் குறித்த காட்சியை நோக்கிய வில்லையின் சுருக்கமும் படத்தின் தரத்தை நிர்ணயிக்கும். ஒளிநாடாவாக இருந்தால் கமராவின் அசைவின் வேகமும் காட்சியின் தரத்தை நிர்ணயிக்கும், கைத்தொலைபேசியில் எடுக்கும் படங்கள் ஒளிநாடாவாக இருந்தாலும் சரி, ஒளிப்படமாக இருந்தாலும் சரி வில்லையை சுருக்காது நிலையான தூரத்தை பயன்படுத்தினால் மாத்திரமே சிறந்த காட்சியை பெற முடியும். காட்சிக்கு அருகில் சென்று பதிவு செய்தல் சிறந்த தரமான காட்சியை பதிவுசெய்யலாம்.

கைத்தொலைபேசியில் மாத்திரம் படப்பிடிப்பு செய்யும் இந்த பதிவை பார்வையிடுங்கள்.



சனல்-4 இல் காண்பிக்கபட்டுள்ள காட்சியானது. வில்லை சுருக்கத்துக்கு உட்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொளிவாக உணரப்படுகின்றது.

குறிப்பிட்ட காட்சி தொடர்பான விசாரனையின் இறுதியில் இலங்கை அரசு அறிவித்திருக்கும் எச்சரிக்கையானது நாடுகடந்த வன்முறையை முன்னெடுக்கும் நோக்கத்தின் வெளிப்பாடாக பொருள்கொள்ள வேண்டும். இது சனல்-4 நிறுவனத்திற்கு சாவலாக அமைவதுடன் ஏனையோருக்கு படிப்பினையாகவும் இருப்பதே எமது நோக்கம் என அமைச்சர் சமரசிங்க கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செ.பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்துடன் இதனையும் ஒன்றித்து கவணிக்க வேண்டும்.

சனல்-4இல் வெளியாகிய குறிப்பிட்ட ஒளிநாடா உற்பட, இறுதிப் போரின் சில கோரக் காட்சிகளை சீனா மற்றும் ஜரோப்பிய நபர்களுடன் பகிர்ந்து கொண்ட போது இது எங்கு இடம்பெற்றது என்று கேட்டதுடன், அக்காடசிகளை காண்பித்ததற்காக தரக்குறைவாகவும் என்னை மதிப்பிட்டார்கள். அதாவது இதுபோன்ற காட்சிகளை காண்பிக்க வேண்டாம் என்று கூறுகின்றார்கள்.

மேற்கு உலகமும் மோக உலகமும் இது போன்ற வன்முறைகளை கற்பனை கதைகளாகவும், திகிலூட்டும் திரைப்படமாகவும் தான் பார்க்க விரும்புகின்றதே தவிர உண்மையாக நிகழும் சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

இது போன்ற வன்முறை காட்சிகளைப் பார்த்து மக்கள் மனச்சுமையுடன் இருப்பதை அந்த நாட்டு அரசுகளும் ஊடகங்களும் விரும்பாமல் இருப்பதற்கு காரணமும் உண்டு, ஏனெனில் இரண்டாம் உலகப்போரின் வடுக்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து நாட்டின் அபிவிருத்தியை பற்றி சிந்திக்கின்றார்கள்.

பார்ப்பதற்கே விருப்பமில்லாத இக் காட்சிகளை எம்மக்கள் அனுபவித்து வருவதற்கு வழி அமைத்தவர்கள் யார்? ‘பயங்கரவாத்தை ஒழிக்க தமது முழு ஆதரவும் உண்டு” என கூறிய சர்வதேசம் தான் இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.
இதற்கு தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்யப்போகின்றோம்.

தொடர்ந்தும் காலம் தப்பிய அறிக்கைகளை வெளியிடுவதையும் கருத்துக் கூறுவதையும் தவிர்த்து, எதிர் அறிக்கைகளையும் எதிர் நகர்வுகளையும் செய்வதற்கு சுறுசுறுப்பாய் இருக்க வேண்டும். இவ் நடவடிக்கையை கடந்த காலங்களை விட தற்போதே முழுவேகத்துடன் செய்யவேண்டும்

சுவிசிலிருந்து குஜென்

Comments