வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976ஐ மீண்டும் வலியுறுத்தும் கருத்துக்கணிப்பின் அவசியம்

பொருளடக்கம்

1. வட்டுக்கோடடைத் தீர்மானம் என்பது
2. முகவுரை
3. இராஜதந்திர முறையிலான போராட்டம்
4. திட்டமிட்ட தமிழின அழிப்பு
5. வடக்கு-கிழக்கு பகுதிகளில் திட்டமிட்ட அபிவிருத்திக் குறைப்பு
6. தமிழரது நிலம் திட்டமிட்டு சிங்கள மயமாகிறது
7. தற்போது தமிழரின் நிலமை
8. உலகம் மௌனமாகப்பார்துக்கொண்டிருந்ததோடு இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இருந்தது
9. சிங்களவர்கள் ஸ்ரீலங்கா சிங்கள புத்த மதத்தவர்களுடையது என எண்ணுவது
10. இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு
11. தமிழ் மக்களது இறைமையை மீளப்பெறும் போராட்டம்
12. அரசியலமைப்பை மாற்றவைக்கும் தேவை
13. இக்கருத்துக்கணிப்பு போராட்டத்தின் அவசியம்
14. உண்மை நிலமையை உலகுக்கு உணர்த்துதல்
15. ஒன்றுபட்டு போராடுவதின் அவசியம்
16. கருத்துக்கணிப்பால் வரக்கூடிய நன்மைகள்

வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 மீண்டும் வலியுறுத்தும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு உலகில் உள்ள புலம்பெயர் தமிழர்கட்கு அவசியமா?

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது 1976 மே மாதம் 14 திகதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாக கைக்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். அதாவது ‘ 1976 மே மாதம் 14ம் திகதியன்று வட்டுக்கோட்டையில் உள்ள பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு இலங்கைத் தமிழர்கள் மக்களின் தொன்மை வாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம் பாரம்பரியம் ஆகியவற்றாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும்வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களில் இருந்து வேறுபட்ட தனித்தேசிய இனமாகவுள்ளாரென இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.

மேலும் 1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ்மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத்தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த்தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம் மொழி வாழ்வுடமை பொருளாதார வாழ்க்கை தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக்கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன் மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது……..

ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமைபொருந்திய சமயசார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை மீழ உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வறிவித்தல் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது.’

முகவுரை

உண்மையான பிரச்சனை யாதெனப்பார்த்தோமானால் தமிழ் மக்களது ஜனநாயக முடிவுகள் அரசபயங்கரவாதத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 இன் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாகப் பார்போமானால் – தமிழர் ஓர் தேசிய இனம் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் அவர்களது பூர்வீகத்தாயகம் அவர்கட்கு அவர்களது உரிமைகளை நிர்ணயிக்கும் உரிமையுண்டு.

எமது இந்த போராட்ட வளற்சியைப் பார்தோமானால் 1976 ம் ஆண்டு வட்டுக்கோட்டைப் பிரகடனமும் 1977ல் நடந்த பொதுத்தேர்தலில் அதை கொள்கையாக வைத்து அதில் மக்கள் ஏகமனதாக தமிழீழத்துக்கே வாக்களித்ததும் 1985ம் ஆண்டு திம்பு பிரகடனமும் 2003ம் ஆண்டின் இடைக்காலத்தன்னாட்சி அதிகாரப் பகிர்விற்கான பிரகடனமும் ஈழவர்களின் உள்ளக்கிடக்கை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே இருந்தது. இதை மீள் உறுதிப்படுத்தவே இக்கருத்துக்கணிப்பு புலம்பெயர் தமிழ்பேசும் மக்கள் நாடுகளில் எல்லாம் நடாத்தப்படவேண்டும்.

இலங்கை சுதந்திரம் அடைந்தபின் தமிழ்பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டங்களில் முதலாவது முப்பது வருடங்கள் அகிம்சை வழியிலும் அதைத்தொடர்ந்து அடுத்த முப்பது வருடங்கள் ஆயுதப்போராட்டத்திலும் ஈடுபட்டு பல வெற்றிகளை யுத்தத்தில் கண்டாலும் ஆயுதப்போராட்டம் தோல்வியில் முடிவுற்றது. இந்நிலையில் தமிழ்பேசும் மக்கள் அவர்களின் வரலாற்றில் மிகப்பெரியதோர் வெற்றிடத்தில் விடப்பட்டுள்ளனர்.

இச்சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்களின் தனித்துவத்தையும் அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் பாதுகாக்கவேண்டிய கடமையும் அவர்களது உரிமைகட்காக ஜனநாயக முறையிலான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய பொறுப்பும் உரிமையும் கடப்பாடும் இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் அரசியற்தலைவர்களையும் தமிழ் அறிஞர்களையும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் சார்ந்ததாகவே இருக்கின்றது.

தற்போதைய நிலையில் தமிழ்க்தேசியக்கூட்டமைப்பைத்தவிர்ந்த ஏனைய தமிழ்கட்சிகள் யாவும் ஆளும் கூட்டாட்சியான மகிந்த அரசாங்கத்தோடு இணைந்தே தமது அரசியலை நடாத்துகின்றனர்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஆயுதப்போர் தோல்வி கண்டநிலையில் தமிழ்பேசும் மக்களது நிலமை மிக மோசமான நிலையிலேயுள்ளது. இந்நிலையில் தமிழ்மக்களது நிலமை இலங்கை முழுவதுமே வாய்திறக்க முடியாத அளவிற்கு அராஜக ஆட்சியாகவுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மக்கள் தமது உரிமைகள் சம்மந்தமாக குரல் எழுப்பமுடியாத அளவிற்கு ஓர் சாட்சிகள் அற்ற போர் நடந்து முடிந்துள்ளது.

மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழர்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வுகாணும் விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை காட்டமுடியவில்லை. போர் வெற்றிக்களிப்பில் சிங்கள மக்களை மிதக்க விடுவதிலேயே தொடர்ந்தும் அக்கறைசெலுத்தும் இவ்வரசாங்கம் அரசியல் தீர்வுக்கான செயல்முறைகட்கு அம்மக்களின் ஆதரவை வென்றெடுப்பதில் எவ்விதமான முயற்சியும் எடுக்கும் என்று நம்புவதற்கில்லை.

ஆனால் அரசுசார்பாக இருக்கும் தமிழ்கட்சிகளும் அதன் ஆதரவாளர்களான சில புலம்பெயர்தமிழர்களும் மகிந்தாவின் ஆளும்கட்சிகளுக்கு நோகாமல் அவர்களோடு இணைந்து அவர்கள் தருவதை வாங்குவோம் அதுதான் ‘யதார்த்தம்’ என்ற நிலையில் உள்ளனர். இந்நிலையில் புலம்பெயர் தமிழ்பேசும் மக்கள்; என்ன செய்யலாம்?

இராஜதந்திர முறையிலான போராட்டம் ;( Diplomatic War)

இதை எமது மூனறாவது கட்டப்போராட்டமாகவும் எடுத்துக்கொள்ள முடியும். இதில் பலவிதமான போராட்ட முறைகள் இருக்கலாம். அதன் ஒரு கட்டமான போராட்ட நடவடிக்கைதான் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ்Nசும் மக்களால் நடாத்தப்படவுள்ள 1976 மே மாதம் 14ம் திகதி முடிவெடுக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி வடக்கு கிழக்கு இணைந்த(ஈழம்) தமிழ்பேசும் மக்களுக்கான அரசு ஒன்றை நிறுவுவதற்கான ஆணையை தாம் மீண்டும் ஜனநாயக முறையில் பெற்றுக்கொள்ள அறைகூவல் விடுவதாகவே இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடாத்தவுள்ளோம்.

திட்டமிட்ட தமிழின அழிப்பு

சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து தமிழ்பேசும்மக்கட்கு சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இன அழிப்புப்காரணங்களைப் பார்த்தோமானால் நாடற்றவர்களாக 40 விகிதமான தமிழர்கள் 7 மாகாணங்களை சிங்கள மாகாணங்களாக்குதல் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தையும் சிங்களமயமாக்குதல் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் சிங்களம் மட்டும் ஆட்சிமொழி கல்வியில் இனப்பாகுபாடு தொழில்வாய்ப்புகளில் இனப்பாகுபாடுகள் இப்படிச் சொல்லிக்கொண்டேபோகலாம்.

ஓர் மனிதன் சுதந்திரமாக உள்ளான் என்றால் அவன் தனது மொழியில் சிந்தித்து தனது நடவடிக்கைகளைச் செய்யக்கூடியதாக இருக்கவேண்டும். அது சிங்கள ஆட்சியில் இருக்கப் போவதில்லை.

எனவே தமிழர் தாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழ்பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவேண்டுமானால் தந்தை செல்வாவால்; அறைகூவல் விடுக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஜனநாயகமுறையில் ஈழவர்கள் அடையக்கூடியதாக புலம்பெயர் தமிழ்Nசும் மக்கள் தாம் வாழும் நாடுகளில் எல்லாம் இத்தீர்மானம் தமிழ்Nசும் மக்கட்கு ஏற்ற தீர்வாக இருக்கும் என்பதை உலகுக்கு காட்டும் முகமாக ஜனநாயக முறையில் உங்கள் நிலைப்பாட்டை இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு மூலம் காட்டவேண்டும்.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் திட்டமிட்ட அபிவிருத்திக்குறைப்பு
சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து வந்த சிங்கள அரசுகள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திட்டங்களை தமிழ்ப்பகுதிகளில் நடாத்தியதோடு திட்டமிட்டே ஏனைய தமிழ்ப்பகுதிகளின் அபிவிருத்திவேலைகளை செய்யாது விட்டனர்.

ஜனநாயக முறைப்படி 1977ல் நடாத்தப்பட்ட பொதுத்தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் வட்டுக்கோட்டைத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிங்கள இராணுவ பயங்கரவாதம் முலம் இத்தீர்மானத்தை மழுங்கடித்தது. மக்கள் படு மோசமாகத் தாக்கப்பட்டார்கள்.

வடகிழக்குக் வெளியே சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் பேசும் மக்களும் இத்தாக்குதலால் அகதிகளாக வடகிழக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர்.

அதோடு 1977ல் இருந்து ஈழப்பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தியோ சமூக அபிவிருத்தியோ, கலாச்சார அபிவிருத்திகளோ நடாத்தப்படவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக திட்டமிட்டு அபிவிருத்திகள் நிற்பாட்டப்பட்டது மாத்திரமில்ல திட்டமிட்டு ஈழப்பகுதிகளிள் அழிக்கப்பட்டு விட்டன. அங்கு மக்கள் உயிர்வாழ்வதே கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழரது நிலம் திட்டமிட்டு சிங்களமயமாகிறது.

ஈழப்பகுதிகளிலே தமிழ்பேசும் மக்கள் திறந்த்வெளிச்சிறைச் சாலையில் வாழ்வது போலவே வாழ்கின்றனர். வடகிழக்கு இராணுவ மயமக்கப்பட்டுள்ளது. இங்கு இராணுவ ஆட்சியில் பல இடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது. இவ்விடங்கள் தமிழ் மக்களது பூர்வீக குடியிருப்பு நிலங்களாகும். இவை நிரந்தர உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளதால் அங்கு வாழ்ந்த மக்கள் அகதிமுகாம்களில் 1995ம் ஆண்டில் இருந்து வாழ்ந்து வருகின்றனர்.

இக்காலகட்டத்தில் ஆங்காங்கே புத்தவிகாரைகள் வரத்தொடங்கிவிட்டன, தெருக்கள் வீதிகள் சிங்களப் பெயராக மாற்றம் பெற்றுவிட்டன, நடந்த முடிந்த போரினால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தடுப்பு முகாம்களில் முட்கம்பிகளுக்கு நடுவே இராணுவக் காவலில் வைக்கப்ட்டுள்ளனர். இவர்களது நிலங்கள் பல இடங்களிள் ‘உயர்பாதுகாப்பு வலயமாக’ கொண்டு வரப்பட்டுள்ளதால் இம்மக்கள் தமது நிலங்களுக்கு திரும்பப் போகவே முடியாத நிலைமை ஏற்ப்பட்டுள்ளது.

இதோடு இப்படி அரசு திட்டமிட்டு இவற்றைச்செய்வதால் வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கும் தொடற்சி துணடிக்கப்படுகிறது. இடையே இராணுவக் காவலுடன் சிங்களவர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர்.

தமிழ் மக்களின் வாழ்வாதரமாக இருந்த வன்னி நிலம் சிங்களவர்களால்; ஆக்கிரமிக்கப்படும் அபாயம் ஏற்ப்படடுள்ளது. ஏற்கனவே கிழக்கு மாகாணம் 33 விகிதத்திற்கு மேல் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தால் பறிபோய்விட்ட நிலையில் வடமாகாணம் அரச பயங்கர வாதத்தால் முற்றுகையிடபட்ட நிலையில் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களை சிந்திக் க வேண்டுகிறோம்.

தற்போது தமிழரின் நிலமை

இன்று வடக்கு கிழக்கு பகுதிகள் திறந்த வெளிச்சிறைச்சாலை போல் இருந்தாலும் குறிப்பாக வன்னிப்போரின் எதிர்பாராத முடிவினால் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு 30000ற்கும் அதிகமானோர் காயமடைந்தும் மூன்று லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் தடுப்பு முகாம்களில் இராணுவக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலமையை நீங்கள் யாவேரும் அறிந்திருப்பீர்கள்.

கடந்த 60 வருட கசப்பான அனுபவங்களில் இது மிக மோசமானது. கிட்லர்கால தடுப்பு முகாம்களுக்கும் இவற்றுக்கும் அதிக வித்;தியாசம் இல்லை. சோவியத் யூனியனின் யோசேப் ஸ்ராலின் ஆட்சிக்காலத்திலும் இப்படியான நிலை இருந்ததாக அறிஞர்கள் ஓப்பிட்;டு எமுதியுள்ளனர்.

சிங்களவர்கள் தாம் தமிழர்களை போரில் வென்றதை வாரக் கணக்காக சிங்களக் கிராமங்கள்இ நகரங்கள் எல்லாம் கொண்டாடும் அதேவேளைஇ தமிழ் மக்கள் மரணமுகாம்களில் கொத்தடிமைகளாக நடாத்தப்படுகின்றனர். தினமும் 200 கும் மேற்ப்பட்டோர் இம்முகாம்களில் கொல்லப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.

இம் முகாம்களில் மக்கள் பட்டினியால் சாவதையும்இ மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல்;;;; இருப்பது பற்றியும் கேட்டதற்குஇ மகிந்தவும் அவரது அமைச்சர்களும் அவை ஐக்கிய நாடுகள் சபையின் வேலைஇ எனக்கூறியுள்ளனர். அப்;படியானல் தமக்கு தமிழ் மக்கள் மேல்இ அவர்களது பூர்வீக நிலத்தின் மேல் இறைமை இருப்பதாக எப்படிக் கூறமுடியும். உலகநாடுகள் இம்மக்களை பராமரிக்கவென கோடிக்கணக்கில் பணம் கொடுக்கின்றது.

ஆனல் மக்கள் அரசசார்பற்ற நிறுவனங்களை நம்பி உயிர்வாழ முனைகின்றனர். இலங்கை அரசும் அரசசார்பற்ற நிறுவனங்கள் எல்லாவற்றையும் அனுமதிக்கவும் இல்லை. தமிழ் மக்களின் உணவை ஆயுதமாய் பாவித்து அழித்தொழிக்கும் திட்டத்தை வன்னிப் போரில் பாவித்த அரசு அதை தொடர்ந்து செய்கிறது.

உலகம் மெளைமாகப் பார்த்துக்கொண்டிருந்ததோடு இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இருந்துள்ளது.

உலக நாடுகள் சிறிலங்கா ஓர் இறைமை உள்ள நாடு அங்கு நடப்பது ‘உள்நாட்டுப்பிரச்சினை’ அதோடு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக்கூறி மௌனமாக பார்துக் கொண்டிருந்தது மாத்திரமல்ல, தமிழர்களை அழிக்கவும் அவர்களது சுயநிர்ணய உரிமைக்கான போரை நசுக்கவும் உதவிகளையும் செய்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையும் இது உள்நாட்டு பிரச்சனை எனக்கூறி தமிழ் பேசும் மக்களைப் பாதுகாக்கத்தவறிவிட்டது. அதோடு அவர்களது சுயநிர்ணய உரிமைப்போரை அங்கீகரிக்கத் தவறிவிட்டது. இவற்றை உலகுக்கு உணர்தத இக்கருத்து கணிப்பு வாக்கெடுப்பபு உதவவேண்டும்.

ஈழரவர்களான புலம்பெயர் தமிழர்கட்கு ஈழத்தில் வாழும் ஈழவர்கட்காக குரல்; கொடுக்கும் எல்லாத் தகைமையும் உண்டு. இதை ஜனநாயக முறையில் செய்வது எமது உரிமையும் கடமையும் கூட.

ஒடுக்குமுறை அடக்குமுறை பாரபட்சம் இன்றி எமது தேசியம், தாயகம் சுயநிர்ணயம் என்பவற்றைப் பெற்று வாழ இக்கருத்துக் கணிப்பு உதவமுடியும். அது மட்டுமல்ல உலகின் மௌனத்தை இக்கருத்துகணிப்பு உடைத்தெறிந்து எமது சுயநிர்ணய உரிமையை உலக ஆதரிக்கும் நிலைமையை உருவாக்கவேண்டும்.

சிங்களவர்கள் ஸ்ரீறிலங்கா சிங்கள-புத்தமதத்தவர்களுடையது என எண்ணுவது

இங்கு சரித்திரம் எழுத வெளிக்கிட்டால் கனக்க எழுதமுடியும், ஆனால் பல ஆய்வுகளின் படி சிறிலங்காவின் ஆதிகுடிகள் தமிழர்களாகும். வுpஜயனும் 700 தோழர்களும் இலங்கைக்கு வந்து சேர்ந்தப்போது அங்கு மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் தமிழர்களாகும். தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் நிலத்தொடுப்பு இருந்ததற்கு ஆதரங்கள் உண்டு. சற்றலைற் படத்தைப் பார்தால் அத்தொடர்பு தெரியும்.

சிங்கள புத்தபிக்கு ஒருவரால் பாளி மொழியில் இருந்து மாகாவம்ச என்ற சிங்கள குறோனிக்கிள் எழுதப்பட்டது. அதில் அப் பிக்கு தமிழர் பற்றி எதுவும் குறிப்பிடாததாலும் சிங்கள சரித்திரமே குறிப்பிடப்பட்டதாலும் சிங்கள மக்கள் இந்நாடு ஓர் சிங்கள புத்த நாடு என படிப்பிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தமிழரின் சரித்திரம் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது. இது புலம் பெயர் மக்களால் உலகுக்கு உணர்த்தப் படவேண்டும்.

சிங்கள அரசியல்வாதிகளும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஓர் இனவாத அரசியலையே நடாத்திக்கொண்டிருக்கின்றனர். எமது சுயநிர்ணயப் போருக்கு எதிராக சிங்கள மக்கள் அனைவருமே ஒற்றுமையாக இருந்தனர். புத்தபிக்குகள், அரசியற்கட்சிகள். சிங்கள அரசுசார்பற்ற அமைப்புக்கள், கல்வி நிறுவனங்கள், பாது காப்பு படைகள் யாவுமே தமிழரின் நியாயமான உரிமைக்கான போரை அழிப்பதோடு தமிழ் மக்களை அழிப்பதிலும் ஒற்றுமைறாக இருந்தனர்.

இடது சாரிக்கட்சிளின் நிலைப்பாடு

இலங்கையின் சிங்கள இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து அவர்கட்டு வாக்களித்திருந்தால் தமிழர்கள் பலன் அடைந்திருப்பார்கள் என்று இன்றும் கூறும் தமிழ் இடதுசாரி நண்பர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள.; ஒருசில தனிப்பட்டவர்கள் அப்படி இருக்கக்கூடும். நடந்து முடிந்த வன்னிப்போரை நிற்பாட்டும்படி இடதுசாரிக்கட்சிகள் எந்தவித ஆர்ப்பாட்டத்தையும் நடத்தவில்லை.

வுpக்ரமபாகு கருணறட்ன இடதுசாரியாக இருந்தாலும் இவரது கதைகள் மகிந்த அரச நடவடிக்கையில் எடுபடுவில்லை.

தமிழ் மக்களுக்கு எதுவமே செய்ய முடியாத இக்கட்சிகள் ஒருகாலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஓர் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருந்தன.

தர்மகுலசிங்கம், சண்முகதாசன், வி.பொன்னம்பலம், கார்த்திகேயன், எஸ்.பி வைத்திலிங்கம். எம்.சி.சுப்பிரமணியம், சி.என்.நாகரத்தினம்,நாகலிங்கம், விஸ்வநாதன் ஆகியோர் யாழ்ப்பாண மக்களால் நன்கு மதிக்கப்பட்டவர்களாக விழங்கினார்கள். ஆனால் ஆயதப் போராட்டம் ஆரம்பித்ததன்பின் இவர்களது செவ்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்தது.

இலங்கை சுதந்திரமடைந்தபின். 1949ல் தமிழ் அரசுக் கட்சியின் தோற்றத்துடன் தமிழர்களின் அரசியல் காலகட்டம் ஆரம்பமானது. புpரித்தானிய ஜனநாயக அரசியல் முறையோடு ஆரம்பமான நிரந்தர பெருபான்மையைக் கொண்ட சிங்கள அரசு, மலையக தமிழ் மக்களின் குடியுரிமை வாக்குரிமையை இல்லாமல் செய்வதில் இருந்து சிங்கள அடையாளங்களைத் திணிக்கும் சிங்கக்கொடி தனிச்சிங்களச் சட்டம், புத்தமதத்தை அரசமதமாக்குதல் எனச்சிங்களத் தேசியம் வளர்ந்தது.

1956 ல் இருந்து இடது சாரிகள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியோடு இணைந்து வேலை செய்தனர். அதில் முதலாவது பிலிப் குணவர்த்தனாவாகும். எல்.எஸ்.எஸ்.புp இனர் அக்காலத்தில் பண்டாராநாயக்காவுடன் போட்டித்தவிர்ப்பு செய்து கொண்டனர். இடது சாரிகளின் முதல் சறுக்கல் இங்குதான் ஏற்ப்பட்டது ஆனால் பண்டாராநாயக்காவோ பதவிக்கு வந்து 24 மணிநேரத்துள் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை கொண்டு வருவதாக வாக்களித்திருந்தார்.

கொழும்பு நகரமண்டபத்தில் நடந்த ஒர் கூட்டத்தில் வெஸ்லி குணவர்த்தனா பேசுகையில் இலங்கைக்கு மிகப்பெரிய ஆபத்து வரவுள்ளது. தமிழ் மக்கள் தமக்கு அநியாயம் நடப்பதாக உணர்ந்தால் அவர்கள் நாட்டில் இருந்து பிரிந்து போகத் தீர்மானிக்கக் கூடும் என்றார். கொல்வின் ஆர்.டி.சில்வா இருமொழி ஒரு நாடு வேண்டுமா? அல்லது ஒருமொழி இருநாடு வேண்டுமா? எனக் கேட்டார். கொம்யுனிஸ்ட் கட்சி பெரிய அளவிற்கு இச்சட்டத்தை எதிர்க்கவில்லை.

1956 தனிச்சிங்கள சட்டத்தின்பின் எல்.எஸ்.எஸ்.பி யும் கொம்யுனிஸ்ட் கட்சியும் தமிழ் மக்களின் அபிலாஷைக்காக பேசுவதை நிறுத்தியே இருந்தனர்.
1964 ல் இக்கட்சிகளின் கூட்டுத்தான் மலையக மக்கள் நாடுகடத்தப்படும் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு உதவியாக இருந்தது.

இக்;காலகட்டத்தில் கொம்யுனிஸ்ட் கட்சியின் ‘அத்த’ என்ற பத்திரிகையும், எல் எஸ் எஸ் பி இன் ‘ஜனதின’ என்ற பத்திரிகையும் பச்சை இனவாத்ததை எழப்பியது.
கொல்வின் ஆர் டி சில்வா 1972 யாப்பு எழுதிய மூலம் சிங்கள அடையாளங்கட்கு அரசியல் சட்ட அந்தஸ்து வளங்கப்பட்டது. அவை பற்றி மேலே பார்த்தோம். அதே வேளை தமிழர்க்கு ஒரளவு பாதுகாப்பைக் கொடுத்த சோல்பரிக்குழுவின் 29வது பிரிவு அரசியல் சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. அச்சமயம் வீரகேசரி பத்திரிகை பண்டாரநாயக்கா தொடக்கி வைத்ததை கொல்வின் ஆர் . டி. சில்வா முடித்து வைத்தார் என தலையங்கம் தீட்டியிருந்தது.

1983 க்குப்பின் இடதுசாரிக்கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலும் செல்வாக்கினை இழந்தது.

தேசிய இனப்பிரச்சினையில் இடதுசாரிக்கட்சிகள் நேர்மையாக நடந்திருந்தால் தமிழ் மக்கள் மத்தியிலாவது தங்கள் தளத்தினை கைப்பற்றி இருக்க முடியும். அவர்கள் தமது பாதையை நடவடிக்கைகளை திரும்பி பார்க்கத் தவறிவிட்டனர்.
இந்நிலையில் எமது போராட்ட வளர்ச்சியை கவனத்தில் எடுத்து அடக்கு முறையில் தடுப்பு முகாம்களில் வாய்திறக்க முடியாமல் இருக்கும் தமிழ் மக்களுக்காக புலம்பெயர் தமிழ் மக்கள் தம்மாலான ஜனநாயக ராஜதந்திர வழிமுறைகளை பாவித்து இலங்கையில் தமிழ் மக்கள் தன்மானத்தோடு வாழும் நிலைமையை உருவாக்க வேண்டும்.

தமிழ் மக்களது இறைமையை மீழப்பெறும் போராட்டம்

உலகு இலங்கையை ஓர் ஜனநாயக நாடு என்று கூறுகின்றது. ஆனால் 60 வருடங்களுக்கு மேலாக ஓர் இனப்பிரச்சினை இருப்பதை ‘உள்நாட்டுப்பிரச்சினை’ என மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. 1956ம் ஆண்டின் பின்னர் ஒவ்வொரு பாராளுமன்றத்தேர்தலிலும் தமிழ்பேசும் மக்கள் சமஷ்டி முறையை ஆதரித்து வாக்களித்து வந்தனர்.

சிங்கள இனவாத அரசு இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதன் பின்னரே வட்டுக்கோட்டைத தீர்மானமும் அதனைத்தொடர்ந்து நடந்த 1977 பொதுத்தேர்தலும் அதில் மக்கள் அமோகமாக தனிநாட்டுக்காக வாக்களித்ததுமாகும். எனவே மக்கள் தமது கருத்தை மிகத்தேளிவாகவே கூறியிருந்தனர்.

ஆயுதப்போராட்டத்தாலும் அரசு எதையும் செய்யாத போதும் இலங்கையில் ஓர் இனப்பிரச்சினை இருக்கின்றது அங்கு அத்தமிழ்த் தேசிய இனத்துக்குரிய அரசியல் அந்தஸ்து வழங்கப்படவில்லை என்ற உண்மை உலகிற்கு நன்கு தெரியவந்துள்ளது. இப்போது இதை உணர்ந்த உலக நாடுகள் தமிழ்பேசும் மக்களுக்கு ஓர் ஜனநாயக முறையிலான அவர்கள் ஏற்கக் கூடியதான ஓர் தீர்வை முன்வைக்க வேண்டுமென இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன. அண்மையில் ருNஇருமுஇருளுயுஇநுரு மற்றும் இந்நியா போன்றன இப்படியான அறிக்கைகள் விட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

விடுதலைபுலிகளின் பாதையில் பல பிழைகள் இருக்கலாம். ஆனால் அவர்களின் அடிப்படைப்போராட்டத்தின் பின்னணியில் ஓர் நியாயம் இருந்தது. தமிழ் மக்களுக்கு அவர்களுடைய அரசியல் அந்தஸ்து இந்நாட்டில் வழங்கப்படவில்லை என்ற உண்மை இருந்தது.

கடந்த 60 ஆண்டுகளில் எவ்வித அரசியல் அந்தஸ்துக்களும் கிடைக்காவிட்டாலும் உலகிற்கு இலங்கையில் ஜனநாயகம் என்ற போர்வையில் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாத அராஜக ஆட்சி நடைபெறுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். இலங்கையில் அமைதி திரும்பவேண்டுமானால் தமிழர் பிரச்சினை அவர்களது ஜகநாயக அபிலாஷைகளுக்கேற்ப தீர்க்கப்படவேண்டும்.

மகிந்த அரசு தாம் இந்த இன மோதலில் விடுதலைப்புலிகளை வென்றுவிட்டதால் தமிழர்களை அடக்கி ஆளலாம் என முடிவுகட்டிவிட்டார்கள். முல்லைத்தீவில் முள்ளிவாய்காலில் விடுதலைபுலிப் போராளிகளையும் 50′000 மக்களையும் புதைத்தது போல் தமிழர்களது உரிமைப்போராட்டத்தையும் புதைத்துவிட்டடோம் என மகிந்த ‘இந்து’ பத்திரிகைக்கு கூறியிருந்ததையும் அவரது அமைச்சர்கள் இதேபோல் கூறிவருவதையும் பார்த்திருப்பீர்கள். உண்மையில் ஜகநாயகம் எப்போதோ புதைக்கப்பட்டுவிட்டது.

மகிந்த ஆட்சியில் இலங்கையில் இரண்டுவிதமான மக்களே வாழமுடியும். முதலாவது சிங்கள-புத்த அரசை ஏற்று அதை மதித்து நடப்பவர்கள். அவர்களே நாட்டுப்பற்றாளர்கள். இரண்டாவது- அதை எதிர்பவர்கள. இவர்கள் நாட்டின் துரோகிகளாகக் கணிக்கப்படுகின்றார்கள் என மகிந்த பல மேடைகளில் பேசி வருவதைப் பார்க்கின்றோம்.

இப்படியான இனவாதப் பேச்சு இலங்கையில் தமிழ்பேசும் மக்களை முற்றாக அழிக்கும் திட்டத்தில் உருவானதாகும். மகிந்த அரசின் நடவடிக்கைகளை கவனித்தீர்களானால் இதை நீங்கள் நன்கு ஊகிக்க முடியும். எனவே எம் அன்பான மக்களே சிந்தியுங்கள்.

அரசியலமைப்பை மாற்றவைக்கும் தேவை

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமானால் அத்தேசிய இனம் தம்மைத்தாமே சுயமாக ஆளக்கூடியதாக அரசியலமைப்பு மாற்றப்படவேண்டும். தற்சமயம் இலங்கையின் அரசியல் அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும், தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை ஆக்க பூர்வமான முறையில் நிறைவு செய்யக் கூடிய பயன் தரும் வகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய வழியும் இல்லை. எனவே இந்த புலம்பெயர் மக்களால் நடாத்தப்படும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு, இலங்கையிள் அரசியலமைப்பை மாற்றக்கூடிய தாக்கத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும்.

இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு போராட்டத்தின் அவசியம்

இலங்கை அரசின் அராஜக நடவடிக்கைகட்கு எதிராகவும் அவர்களது இரகசியத்திட்டங்கட்கு எதிராகவும். புலம் பெயர் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்தும் தொடர்பாக போராடவேண்டும். வன்னியில் நடந்த போரை நிற்பாட்டக் கோரி உலகளாவிய புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடாத்தினார்கள். பிரிட்டனில் 73 நாட்களாக பாராளமன்ற முன்றலில்; தொடர்ந்த மறியல் போராட்டங்கள் உண்ணாவிரதப்போராட்டங்கள் நடாத்தினோம்.

அவற்றால் ஒரளவு அனுதாபம் ஏற்ப்பட்டாலும் போர் முடியும் வரை, எந்த ஒரு நாடும் உருப்படியாக எதையும் செய்யவில்லை. அவர்கள் எம் மக்களைப் பயங்கரவாதிகளாகவே பார்த்தனர்.

இந் நிலையில், இந்த வெளிநாட்டு அரசாங்கங்கட்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைச் சுட்டிக்காட்டும் எமது போர் பயங்கரவாதப் போர் அல்ல. எமது சுயநிர்ணய உரிமைக்கான போர். மக்கள் அதற்காக பலதடவை வாக்களித்துள்ளனர். அதை திரும்பவும் நினைவூட்ட முனைவதுதான் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடவடிக்கை என்று கூறிவைக்கவேண்டும்.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வழி எதுவுமே இல்லை. அங்கே 1948ம் ஆண்டில் இருந்து ஓர் அராஜக ஆட்சியே நடை பெறுகின்றது. இதை மாற்றவேண்டுமானால் புலம் பெயர் தமிழர்களால் தொடர்ந்து தொடர்பாக பலவிதமான போராட்டங்களும் நடாத்தப்படவேண்டும். அதில் முக்கியமானதொன்றுதான் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு. இதன் மூலம் எமது இழந்த உரிமைகளைப் பெறும் உரிமைப்போராட்டத்தை தொடர முடியும்.

உண்மை நிலையை உலகிற்கு உணர்துதல்

எமது ஜனநாயக நிலையை உலகிற்கு உணர்த்த இப்பொது வாக்குக்கணிப்பு அவசியமாகும்.அதோடு இது ஈழவரின் உண்மையான அரசியல் நிலமையை உலகறியச் செய்யும். மேலும் இலங்கையிலும் வட-கிழக்கில் அவர்களது உரிமையை நிர்ணயிக அங்கும் ஓர் பொதுமக்கள் வாக்குக்கணிப்பு நடாத்தப்படணே;டுமென்று இலங்கை அரசை நிர்பந்திக்க முடியும்.

உலகில் பொது மக்கள் வாக்குக்கணிப்பு மூலம் பல இனங்கள் தமது சுயநிர்ணய உரிமையை நிர்ணயிக்க முடியுமானால் தமிழ்பேசும் மக்களால் ஏன் முடியாது.
இன்று இலங்கையில் தமிழ்பேசும் மக்கட்கு நியாயம் வழங்கப்படவில்லை என்பதை உலகம் உணரத்தொடங்கியுள்ளது. ஆதை மேலும் வலுப்படுத்தவே புலம்பெயர் தமிழர்களால் எடுக்கப்படும் நடவடிக்கையே இப்பொதுமக்கள் வாக்குக்கணிப்பாகும்

ஒன்றுபட்டு போராடுவதின் அவசியம்

எமது நடவடிக்கை காலத்தின் கட்டாயமாகும.; ஆகவே அன்பான பொது மக்களே கருத்துவேறுபாடுகள் பிரதேசவாதம் கட்சி வாதங்கள் சமயவாதங்கள் மற்றும் குரோதங்களை மறந்து ஈழவர் பிரச்சினைகள் தீர சகல புலம்பெயர் தமிழ்பேசும் மக்களும் ஒன்றிணைய வேண்டும். அத்தகைய ஒன்றிணைவதற்கான சாத்தியத்தை தடுக்கும் முயற்சிகள் எப்போதோ ஆரம்பமாகிவிட்டன என்பதனை அனைத்து தமிழ்கட்சிகளின் தலைவர்களும் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடப்பார்களாக.

முன்பு பல தமிழ் அமைப்புகள் பொது எதிரியான சிறீலங்காவின் அரசுக்கு எதிராக வேலை செய்தார்கள். இப்போது இப்பொது எதிரியுடன் சிலர் இணைந்து தமிழ்பேசும்மக்களின் நலனுக்கு எதிராக வேலைசெய்கின்றார்கள். இந்நிலையை அவர்கள் மீழாய்வு செய்யுமாறு தயவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்கள் யாவும் தாம்பெரிது நீ சிறிது என்று பாகுபாடு காட்டாது இவ்வட்டுக்கோட்டடைத் தீர்மானத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வீர்களாக.

தமிழ்மக்கள் கைநே;திப்பிழைப்பவர்கள் அல்லர். அவர்கள் தன்மானத்தோடு தமது தாயகத்தில் ஓர் தேசிய இனமாக சுயநிர்ணய உரிமையோடு வாழவிரும்புகின்றார்கள். அவர்களது எண்ணம் ஈடேற இப்பொது மக்கள் வாக்குக்கணிப்பு ஓர் பங்கை வகிக்க வேண்டும். இதை வெற்றியளிக்கச் செய்வீர்களாக.

புலம்பெயர் நாடுகளில் கருத்துக்கணிப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள்

1. எமது கடந்தகால அகிம்சை முறைப்போராட்டங்களும் ஆயுதப்போராட்டங்களும் ஜனநாயகமுறையானது என்பதை திரும்பவும் உலகுக்கு உணர்த்தும்.
2. நடந்துமுடிந்த அகிம்சா முறை ஆயுதப்போராட்டங்களில் களைத்துப்போயுள்ள மக்கட்கு இது ஓர் உந்துதலையளிக்கும்.
3. இது எமது இறைமைக்கான நடவடிக்கை என்பதையும் எங்களை ஆளும் இறைமையோ உரிமையோ சிறிலங்காவிற்கு இல்லை என்பதை உலகிற்கு உணர்த்துதல்.
4. சிறிலங்காவின் அரசியலமைப்பை மாற்றியமைக்க அழுத்தம் கொடுத்தல்.
5. சிறிலங்காவின் அராஜக ஆட்சியை உலகிற்கு உணர்த்துதல்.
6. எமது மூன்றாவது கட்டப்போராட்டத்தில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடவடிக்கையை ஓர் ஜனநாயகக் ‘கருத்து-வாக்கு’ ஆயுதமாக்குதல்.
7. 13வது திருத்தத்தை ஏற்க்கச் சொல்வோரின் போலித்தன்மையை வெளிக்கொணர்தல்.
8. அனைத்து தமிழர்களையும் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைத்தல்.
9. புலம் பெயர் நாடுகளில் உள்ள இரண்டாவது சந்ததியினர்க்கு இது ஓர் ஈழஅரசியல் போராட்டம் என்ற படிப்பினையாக்குதல.
10. ; புலம் பெயர் தமிழர்களின் ஏனைய ஜனநாயக போராட்டங்களுக்கு வலுச்சேர்த்தல்.
11. இதனால் ஈழவர்களின் உரிமைகளை திரும்பப் பெறச்செய்தல்.
12. தமிழர்களின் அபிலாஷைகளை அடையும் தீர்வை இவ் வாக்குக்கணிப்பின் மூலம் கொண்டுவர முடியும்.
13. இவ் வாக்குக்கணிப்பின் மூலம் பல நாடுகள் தமது இறைமையை மீண்டும் பெற்று சுதந்திர நாடுகளாக உள்ளன. உ-ம் ஸ்லோவேனியா.குரோசியா.மசடோனியா.உக்கிரைன்.ஜோர்ஜியா. பொஸ்னியா.மால்-டோவா.கிழக்குதீமோர்.மொன்ரநீகிரோ.போன்றன.
14. இவ் வாக்குக்கணிப்பை நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் எதிர்க்கும் பட்சத்தில் இலங்கைக்கு சார்பான ஜனநாயக நாடுகள் இலங்கையை எதிர்க்கும் வாய்ப்புண்டு.
15. சிறிலங்கா அரசுக்கு சார்பாக இருந்து அண்டிப்பிழைப்பவர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் மக்களிடமிருந்து பிரித்துவைக்கும்.
16. உலகநாடுகள் ஜனநாயகத்திற்காக வாக்குக்கணிப்பை பயன்படுத்துவதால் நாம் ஈழவர்களின் ஜனநாயகத்தீர்வுக்காக இலங்கையின் வடக்கு கிழக்கில் வாக்குக்கணிப்பை நடாத்த நிர்பந்திக்க வேண்டும். இதை மேலத்தேய நாடுகள் எதிர்க்க முடியாது.
17. இந்தியா இந்த இக்கட்டான நிலைக்கு தமது மக்களைப் போகவிடாமல் பார்கவேண்டுமானால் இக்கருத்து-வாக்குக்கணிப்பின்றியே ஈழவர் பிரச்சினையை தீர்க்கவேண்டும்.
18. புலம்பெயர் தமிழ்மக்கள் உலக ஜனநாயகமுறைகளை எமது மக்களின் ஈழக்கோரிக்கையை அவர்களது எண்ணப்படி தீர்க்க பயன்படுத்தமுடியும்.

முத்தமிழ்வேந்தன்
சென்னை

Comments