புதிதாகத் தோன்றியுள்ள மக்கள் இராணுவமும், பலத்த சந்தேகங்களும்

சிறிலங்கா அரசுக்கு எதிராக மிண்டும் ஆயுதப்போர் என விடுக்கப்பட்டிருக்கும் அறிப்புக்குறித்தும், அதை விடுத்துள்ள புதிய ஆயுதக்குழு பற்றியும், பலதரப்பிலும் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகத் தெரிய வருகிறது.

கடந்த வார இறுதியில் 'இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்' என்ற தலைப்பில் ஜுனியர் விகடன் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், தேர்தலில் வாக்குச் சேகரிப்புக்காகவும், வெளிநாடுகளின் அரசியல் நிர்ப்பந்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், இலங்கை அரசே இத்தகைய ஒரு போலி ஆயுதக் குழுவை உருவாக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதே சமயம் இந்த அமைப்பு வடபகுதியில் இருந்து செயற்படுவதாக அறிவிக்கப்படாமல், கிழக்கிலிருந்து செயற்படுவதாக அறிவிக்கபட்டிருப்பதும் மேலும் சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிணக்குகளை தோற்றுவித்து அமைதியைக் குலைப்பதற்கும், அதேபோல் பாலஸ்தீன இயக்கத்துடன் தொடர்புபடுத்தி அறிவித்திருப்பதனால், மேற்குலகின் கவனத்தையும் திசை திருப்பத் திட்மிட்டிருக்கலாமெனவும் கருதவேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை தோற்றுவிக்க நினைக்கும் இந்திய உளவுத்துறையோ அல்லது அதன் செயற்திட்டத்தினடிப்படையில், இலங்கை அரசோ இதனை மேற்கொள்ளவும் கூடும் எனவும் ஊகந் தெரிவிக்கப்படுகிறது.

இப்படி ஒரு போலி அமைப்பினை உருவாக்கி மறைந்திருக்கக் கூடிய போராட்ட சக்திகளை அடையாளங்காணும் தேடல் வழியாவும் இது இருக்கலாமெனக் கருதப்படுகிறது.

புலம்பெயர்நாடுகளிலிருந்து தமிழமக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அரசியற் போராட்டங்களைக் குழப்புவதற்கான ஒரு நடவடிக்கையாக சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகவும் இதைப் பார்க்க முடியும்.

இதே சமயம் போர் வெற்றி மிதப்பில் மேற்குலகினைப் பகைத்துக் கொண்டிருக்கும் அரசின் போக்கினை அச்சுறுத்திப் பணிய வைக்க வெளிநாட்டுச் சக்தியொன்றின் செயற்பாடாகவும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இப்படியொரு அமைப்பினை உருவாக்கி அந்த அமைப்பினையே பேச்சவாரத்தையில் பங்குபெற்றும் ஆயுதக்குழுவாகக் காட்டி, தாம் தீர்மானிக்கும் தீர்வொன்றினைத் திணிப்பதற்கு எடுக்கபட்ட முயற்சியாகவும் இதைக் காணலாம்.

இவ்வாறு புதிதாகத் தோற்றம் பெற்றுள்ள இந்த ஆயுதக்குழு பற்றியும், அதன் செயற்பாடுகள் பற்றியும் பல் வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவை எதையும் நிராகரித்துப் பார்க்க முடியா நியாயமான சந்தேகங்களாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்கப் படவேண்டிய சில‌ விசயங்கள்.

கடந்த வார இறுதியில் 'இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்' என்ற தலைப்பில் ஜுனியர் விகடன் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியா இது

இந்த குழுவின் பெயரில் புலி, ஈழம் என்ற பதங்கள் இல்லை. புலி ஈழம் என்ற சொற்கள் சிங்களவருக்கு நஞ்சு.

கிழக்கில் இது உதயம் என்பது, விடுவிக்கப் பட்ட கிழக்கில் எங்கே இது உதயமாகிறது?

பாலசுத்தீனத்துக்கும் தமிழருக்கும் ஏன் முடிச்சு?

இது காட்டுவது, இந்த வேலை சிங்களவர்களின் வேலையா ?

Comments