வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோள்

தாங்கள் மிகுந்த கஷ்டப்பட்டு படித்து இன்று வேலையொன்றை அதுவும் அரசாங்க வேலையொன்றை பெற்றுக் கொள்வதற்காக படும் கஷ்டங்கள் சொல்லில் அடங்காததுதான். சிங்கள அரசின் இன அழிப்பின் மத்தியில் சில வருடங்களில் பூர்த்தியடையும் கல்வி பல வருடங்களாக இழுபட்டு இப்போது ஒருவாறாக பட்டம் பெற்றாலும் கூட அரச உத்தியோகம் எதுவும் கிடையாது நீங்கள் படும் அவலம் கொஞ்ச நஞ்சம் அல்ல.

ஆனால் அரசின் அடிவருடிகளான சில தமிழ் ஏஜன்டுகள் தங்கள் சுயநல கேடித்தனமான அரசியலை வைத்துப் பிழைப்பதற்கு நீங்கள் பலிக்கடா ஆக்கப்படுவதுதான் ஜீரணிக்க முடிவதில்லை. பட்டதாரிகள் என்று நெஞ்சை நமிர்த்திக் கொள்ள வேண்டிய நீங்கள் எல்லாம் தியேட்டர் ஒன்றிலிருந்து அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் முன்னால் கூனிக்குறுகி அவர்களது ஊர்வலங்கள், பேரணிகள், பிரச்சாரங்களிற்கெல்லாம் இழுபட்டு அவர்கள் பின்னால்தான் போய் பணி நியமனம் பெறவேண்டும் என்று எப்படி நம்புகிறீர்கள். நீங்கள் அனைவரும் ஒருமித்து நின்று ஒரு கட்சியின் பின்னால் செல்லாது அவர்களுக்கு வாளி வைக்காது (உங்கள் பாஷையில்) சுயமாய் போராடி உங்கள் பணி நியமனங்களை பெற்றுக் கொள்ள முயற்சிக்கலாம்தானே.

அவர்கள் ஏதோ அரசாங்கம் தரும் பிச்சைகளை எல்லாம் தாங்கள் தருவதுபோல் பாசாங்கு காட்ட நீங்களும் படித்து பெற்ற பட்டத்தை மறந்து அதை நம்புகிறீர்களே. அமைச்சர் எந்நத கூட்டத்திற்கு போனாலும் அங்கு மன்னரே சென்று அமர்ந்துவிடுகிறீர்கள். பல்கலைக்கழகத்திற்கு அமைச்சர் வந்தபோது படிக்கும் மாணவர்களில் ஒரு வீதத்தினர்கூட கைலாசபதி கலையரங்கில் கூடவில்லை. நீங்கள்தான் மாணவர்கள் என்ற போர்வையில் அங்கு நிறைக்கப்பட்டீர்கள். கீழேயிருக்கும் படங்களைப் பாருங்கள் உண்மை தெரியும்.

மாணவர்கள் என்ற போர்வையில் உங்களை கொண்டு வந்து அமர்த்தி மலினமான அரசியல் விபச்சாரத்தை அவர்கள் புரிகிறார்கள். (இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் தங்கள் பிரசார கூட்டத்திற்கு ஆட்களை காசுக்கு லொறி லொறியாக ஏற்றி வந்து நிறைப்பார்களாம் அதுபோல) பட்டதாரிகள் என்ற கர்வம் உள்ள உங்களுக்கு இந்த கயவர்களின் யுக்தியை புரிந்து கொள்ளமுடியவில்லையா...? இவர்களின் முன்னால் போய்நின்று கூழைக்கும்பிடு போட வெட்கம்தானுமேதுமில்லையா..? எமது தேச விடுதலைப் போராட்டத்தில் உங்கள் பங்கு அளப்பரியது. அவற்றில் சில

1. இக்கட்டான காலத்தில் பொங்கு தமிழ் என்ற உணர்பூர்வ நிகழ்வை நடாத்தி தமிழனை தலை நிமிர வைத்தவர்கள் நீங்கள்.

2. எமது தேசக்குழந்தைகளான விடுதலைப் புலிகள் குடாநாட்டிற்கு அரசியல் செய்ய வந்தபோது கடல் கடலாக மக்களை அழைத்துச் சென்று அவர்களை தோள்களில் சுமந்து வந்ததன் மூலம் மக்கள் என்றும் புலிகள் பக்கம் என்று செய்து காட்டியவர்கள்.

3. கிளாலியில் இராணுவ நடவடிக்கைக்குள் அகப்பட்ட அப்பாவித் தமிழர்களையெல்லாம் உங்கள் உயிரை துச்சமாக மதித்து காப்பாற்றி வந்தவர்கள்.

4. இந்திய குரூர ராணுவத்திடமிருந்து எங்கள் தேசக் குழந்தைகளை பல்கலைக்கழக வளவில் ஒளித்து வைத்து காப்பாற்றியவர்கள்.

உங்களின் பங்களிப்புகள் அளப்பரியவை. சொல்லில் அடங்காதவை. அதை எழுத நினைத்தால் இப்பந்தி போதாது.

எனவே தயவு செய்து ஒன்றுபட்டு நின்று அரசுடன் நேரடியாக போராடி உங்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். எமது முப்பது வருட தியாக விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்துபவனுடன் நின்று தமிழ் மக்களிடமிருந்து அந்நியமாகாதீர்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் பள்ளிப்படிப்பையே அறியாத இவர்களெல்லாம் உங்களுக்கு வேலை தரும் விந்தை. அசிங்கமாயிருக்கவில்லையா?

-யாழிலிருந்து சனீஸ்வரன்

Comments