செங்கல்பட்டு வதை முகாமின் தொடரும் சித்திரவதை

செங்கல்பட்டு அகதி முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் மீது தமிழக காவல்துறை தாக்குதல்!



செங்கல்பட்டு முகாமிலிருக்கும் மக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாநிலை மேற்கொண்டனர். பின்னர் தமிழக அரசு செங்கல்பட்டு முகாமை மூடி, அங்கிருப்பவர்களை ஏனைய முகாம்களுக்கு மாற்றம் செய்யப்போவதாக அறிவித்ததன் பின்னர் அந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது..

தமிழக அரசு மேற்படி வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தினால் அதன் தொடர்ச்சியாக நேற்று (02/02/2010) பகல் மீண்டும் அவர்கள் தமது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

இருப்பினும் அவர்களது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் மக்களை அடித்து சித்திரவதை செய்திருக்கிறது. உள்ளிருந்து கொண்டு உண்ணாநிலை மேற்கொண்ட மக்கள் மீது இரவு 10 மணியளவில் உள்நுழைந்த காவற்துறையினர் சரமாரியாக தாக்கினர்.

காவற்துறையினரின் தாக்குதலில் 16க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்த நிலையிலும் அவர்களிற்கு தகுந்த மருத்துவ உதவியை செய்யாமல் வேலூர் சிறையில் அடைப்பதற்காக அவர்களை இழுத்துச் சென்றிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவற்துறையினரின் தாக்குதலில் காயமடைந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு :

செல்வக்குமார்
ஜெயமோகன்
பத்மநாபன்
தம்பிதுரை
பிரபாகரன்
பிரதீபன்
அமலன்
ரமணன்
சிறீதரன்
அருண்
தாசன்
சேகர்
நவீன்
முத்து
செங்கல்பட்டில் ஈழ அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

செங்கல் பட்டு ஈழத் தமிழர்கள் முகாமிலிருக்கும் மக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் செங்கல்பட்டு முகாமிலிருந்து தங்களை விடுவிக்க கோரி உண்ணாநிலை மேற்கொண்டனர். பின்னர் தமிழகரசு செங்கல் பட்டு முகாமை மூடி அங்கிருப்பவர்களை ஏனைய முகாங்களிற்கு மாற்றம் செய்யப்போவதாக அறிவித்ததன் பின்னர் அந்த உண்ணாவிரதப்போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழக அரசின் அந்த அறிவித்தல் நடைமுறை படுத்தப்படாமை காரணத்தினால் அதன் தொடர்ச்சியாக நேற்று பகல் மீண்டும் அவர்கள் தமது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

கடவுச்சீட்டு வழக்கு மற்றும் ஏனைய வழக்குகளில் அங்கு மக்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை வேறு முகாம்களிற்கு மாற்றக் கோரியே இந்த உண்ணாநிலைப் போராட்டதை நடத்தினார்கள்.

இருப்பினும் அவர்களது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் மக்களை அடித்து சித்திரவதை செய்திருக்கிறது. உள்ளிருந்து கொண்டு உண்ணாநிலை மேற்கொண்ட மக்கள் மீது இரவு 10 மணியளவில் உள்நுழைந்த காவற்துறையினர் சரமாரியாக தாக்கினர்.

காவற்துறையினரின் தாக்குதலில் 16க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்த நிலையிலும் அவர்களிற்கு தகுந்த மருத்துவ உதவியை செய்யாமல் வேலூர் சிறையில் அடைப்பதற்காக அவர்களை இழுத்துச் சென்றிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம்மொழி மாநாடு நடக்கவிருக்கின்ற இந்த நேரத்தில் செங்கல்பட்டு ஈழ ஏதிலிகளின் உண்ணாநிலை அதற்கு இடையூறாக இருந்துவிடும் எனக்கருதிய தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் ஏதிலிகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அறியப்படுகிறது.



தினகரன் குழுமத்தின் தமிழ் முரசு பொய்ச் செய்தி!

செங்கல்பட்டு அகதிகள் போலீசாரைக் கடத்தி வைத்து மிரட்டியதாகவும், தற்காத்துக் கொள்ள அகதிகளை போலீசார் தாக்கியதாகவும், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 15 பேரை புழல் சிறையில் அடைத்திருப்பதாகவும் தினகரன் குழுமத்தின் தமிழ் முரசு பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென தமிழக காவல்துறையினர் முகாமினுள் உறங்கிக் கொண்டிருந்த அகதிகள் மீது மிகக்கடுமையான தாக்குதலை நடாத்தியதில் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள 13 அகதிகளை அங்கிருந்து காவல்துறை அகற்றிவிட்டனர். அவர்கள் கதி என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை. இதில் மூன்றுபேர் உயிருக்கு போராடு நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அறியப்படுகின்றது.

Comments