பாராளுமன்ற வழாகத்தை அதிரவைக்கும் உலகத் தமிழர் பேரவை-காணொளி


பிரித்தானியாவில் இன்று முத‌லாவ‌து உல‌க‌த் த‌மிழ‌ர் பேர‌வையின் மாநாடு இன்று ந‌டைபெற்ற‌து. பிரித்தானிய‌ நாடாளும‌ன்ற‌ வ‌ழாக‌த்தில் ந‌டைபெற்ற‌ இம் மாநாட்டில் பிரித்தானிய வெளிநாட்ட‌மைச்ச‌ர் டேவிட் மில‌பான்ட் ம‌ற்றும் ப‌ல‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ல‌‍ன்து கொண்ட‌ன‌ர்.

‍நாடாளும‌ன்ற‌ வ‌ழாக‌த்தில் தொட‌ர்ந்தும் மாநாடு ந‌டைபெற்றுக் கொண்டிருக்கிற‌து.

இக் கூட்டத்தில் உரையாற்றிய டேவிட் மிலபான் அவர்கள் உலகத் தமிழர் பேரவை உருவாக்கம் குறித்து பாராட்டுத் தெரிவித்தார். அவர் தொடர்‍ந்தும் குறிப்பிடுகையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்தும் தாம் அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.

போர் நடைபெற்ற கால கட்டத்தில் இரு தரப்பும் யுத்தக் குற்றங்கள் செய்ததாக டேவிட் மிலபான் தெரிவித்த கருத்தை டெய்லி மிரர் பத்திரிகை திரித்து விடுதலைப் புலிகளை டேவிட் மிலபான் கடுமையாகத் தாக்கிப் பேசியதாக செய்திகளை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Comments